பாகிஸ்தானில் கராச்சியில் கனமழை; மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

கராச்சி, பாகிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், சிந்த் மற்றும் பலூசிஸ்தான் மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்றும் அதனால், நகரங்களில் வெள்ளம் ஏற்படும் என்றும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அடுத்த 2 நாட்களுக்கு மழை இருக்கும் என கடந்த சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்து இருந்தது என டான் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதனை … Read more

பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்த 'டிரோன்': துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டியடித்த ராணுவத்தினர்

ஜம்மு, காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பலோனியையொட்டி கிருஷ்ணா காதி பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒரு ‘டிரோன்’ பறந்துவந்தது. உடனே சுதாரித்த ராணுவத்தினர் அதை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதையடுத்து அந்த ‘டிரோன்’, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் திரும்பிச் சென்றுவிட்டது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, குறிப்பிட்ட பகுதியில் ராணுவத்தினரும், போலீசாரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். தினத்தந்தி Related Tags : காஷ்மீர் ராணுவம் துப்பாக்கிச் சூடு பாகிஸ்தான் டிரோன்

பாராசின் ஒபன் செஸ்: தொடரை வென்று அசத்தினார் பிரக்ஞானந்தா!

பாராசின் (செர்பியா), பாராசின் ஓபன் செஸ் தொடர் செர்பியாவில் நடைபெற்றது. அதில் சக இந்திய வீரர்களான ஸ்ரீஜா சேஷாத்ரி, லாசெசர் யோர்டானோவ் (பல்கேரியா), காசிபெக் நோகர்பெக் (கஜகஸ்தான்), சகநாட்டவரான கவுஸ்டாவ் சாட்டர்ஜி, அரிஸ்டன்பெக் உராசயேவ் (கஜகஸ்தான்) ஆகியோரை இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா வென்றார். இந்நிலையில் மொத்தம் ஒன்பது சுற்றுகள் கொண்ட இந்தத் தொடரில் 7 வெற்றி, 2 ‘டிரா’ உள்பட 8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ரஷியாவின் … Read more

ஷார்ஜா-ஐதராபாத் விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு; கராச்சியில் அவசர தரையிறக்கம்

கராச்சி, இந்தியாவின் இண்டிகோ விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜா நகரில் இருந்து புறப்பட்டு ஐதராபாத் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், நடுவழியில் விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி விமானி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளார். இதன்பின்னர் விமானம் பாகிஸ்தானின் கராச்சி நகரில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட பாதிப்பு பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 2 வாரங்களில் இந்திய விமான நிறுவனமொன்றின் … Read more

சிறுமிக்கு 5 ஆண்டுகளாக பாலியல் தொல்லை – டாக்டருக்கு ஆயுள் தண்டனை

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் பண்டி மாவட்டம் டொல்டா கிராமத்தில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் 2013-ம் ஆண்டு வெனிராம் மீனா (வயது 30) என்ற டாக்டர் பணியில் சேர்ந்தார். அப்போது, அங்கு சிகிச்சைக்கு வந்த 13 வயது சிறுமிக்கு வெனிராம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த சிறுமிக்கு தொடர்ந்து 5 ஆண்டுகளாக டாக்டர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் தந்தை டாக்டர் குறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரையடுத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த … Read more

வருங்கால போட்டி அட்டவணையில் ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு 2½ மாதங்கள் ஒதுக்க ஐ.சி.சி. முடிவு

துபாய், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.). வருங்கால போட்டி அட்டவணையில் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டுக்கு ஒவ்வொரு ஆண்டும் 2½ மாதங்கள் ஒதுக்கப்படும் என்றும், அதற்காக பல்வேறு நாட்டு கிரிக்கெட் வாரியங்களிடம் பேசி இருப்பதாகவும் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா சமீபத்தில் கூறியிருந்தார். இந்த நிலையில் 2023-ம் ஆண்டு மே முதல் 2027-ம் ஆண்டு ஏப்ரல் வரை நடைபெறும் சர்வதேச கிரிக்கெட்டுக்கான உத்தேச போட்டி அட்டவணையில் ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு என்று 2½ மாதங்களை ஐ.சி.சி. … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56.71 கோடியை தாண்டியது

ஜெனிவா, சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56.71 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 56,71,51,182 ஆக அதிகரித்துள்ளது. … Read more

இலவச, தரமுள்ள கல்வி மற்றும் மருத்துவ சேவையை வழங்குவது இலவச கலாசாரம் ஆகாது: டெல்லி முதல்-மந்திரி

புதுடெல்லி, உத்தர பிரதேச மாநிலத்தில் புதிதாக நான்கு வழி விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்து பேசினார். அவர் நிகழ்ச்சியில் கூட்டத்தினரின் முன் பேசும்போது, ஓட்டுகளை பெறுவதற்காக இலவச பொருட்களை வழங்கும் அரசியல் கட்சிகளின் கலாசாரம் ஆபத்து நிறைந்தது. நாட்டின் அரசியலில் இருந்து அவை நீக்கப்பட வேண்டும். நாட்டின் முன்னேற்றத்திற்கு இந்த கலாசாரம் மிக ஆபத்து நிறைந்தது. இந்த கலாசாரத்துடன் இணைந்திருப்பவர்கள், புதிய விரைவுசாலைகளை, புதிய விமான நிலையங்களை அல்லது பாதுகாப்பு பகுதிகளை … Read more

சர்வதேச பாரா-பேட்மிண்டன் இறுதி போட்டிக்கு இந்தியாவின் பிரமோத் பகத் முன்னேற்றம்

டப்ளின், அயர்லாந்து நாட்டில் நான்கு நாடுகளுக்கான சர்வதேச பாரா-பேட்மிண்டன் 2022 போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் நேற்று நடந்த போட்டி ஒன்றில், உலக தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள பிரமோத் பகத் மற்றும் ஜப்பானின் டைசுகே புஜிஹரா விளையாடினர். இந்த போட்டியில், 21-15, 21-15 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பான் வீரரை வீழ்த்தி பகத் வெற்றி பெற்றார். இதன்பின்னர் பேசிய பகத், புஜிஹரா உண்மையில் நன்றாக விளையாடினார். ஆனால், எனது போட்டியை தக்க வைக்க என்னால் … Read more

75 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் உள்ள பூர்வீக வீட்டுக்கு சென்ற 92 வயது மூதாட்டி

லாகூர், இந்தியாவில் வசித்து வரும் 92 வயது மூதாட்டி ரீனா சிபார். இவரது பூர்வீக வீடு ஒன்று பாகிஸ்தான் நாட்டில் உள்ளது. 75 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் உள்ள தனது பூர்வீக வீட்டுக்கு ரீனா சென்றுள்ளார். நல்லெண்ண நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அந்த மூதாட்டிக்கு பாகிஸ்தானிய தூதரகம் 3 மாத கால விசா வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து, பாகிஸ்தானின் ராவல்பிந்தி நகரில் உள்ள பிரேம் நிவாஸ் என்ற தனது பூர்வீக வீட்டுக்கு வாகா-அட்டாரி எல்லை வழியே நேற்று … Read more