சர்வதேச பாரா-பேட்மிண்டன் இறுதி போட்டிக்கு இந்தியாவின் பிரமோத் பகத் முன்னேற்றம்

டப்ளின், அயர்லாந்து நாட்டில் நான்கு நாடுகளுக்கான சர்வதேச பாரா-பேட்மிண்டன் 2022 போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் நேற்று நடந்த போட்டி ஒன்றில், உலக தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள பிரமோத் பகத் மற்றும் ஜப்பானின் டைசுகே புஜிஹரா விளையாடினர். இந்த போட்டியில், 21-15, 21-15 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பான் வீரரை வீழ்த்தி பகத் வெற்றி பெற்றார். இதன்பின்னர் பேசிய பகத், புஜிஹரா உண்மையில் நன்றாக விளையாடினார். ஆனால், எனது போட்டியை தக்க வைக்க என்னால் … Read more

75 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் உள்ள பூர்வீக வீட்டுக்கு சென்ற 92 வயது மூதாட்டி

லாகூர், இந்தியாவில் வசித்து வரும் 92 வயது மூதாட்டி ரீனா சிபார். இவரது பூர்வீக வீடு ஒன்று பாகிஸ்தான் நாட்டில் உள்ளது. 75 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் உள்ள தனது பூர்வீக வீட்டுக்கு ரீனா சென்றுள்ளார். நல்லெண்ண நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அந்த மூதாட்டிக்கு பாகிஸ்தானிய தூதரகம் 3 மாத கால விசா வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து, பாகிஸ்தானின் ராவல்பிந்தி நகரில் உள்ள பிரேம் நிவாஸ் என்ற தனது பூர்வீக வீட்டுக்கு வாகா-அட்டாரி எல்லை வழியே நேற்று … Read more

முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் 2 மனைவிகள் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி

போபால், மத்தியபிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டம் நன்பூர் கிராமத்தை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சாம்ரத் மவுரியா (வயது 35). இவருக்கு நானி பாய் (வயது 30), மேலா (வயது 28), சக்ரி (வயது 25) என 3 மனைவிகள் உள்ளனர். நானி பாயை 2003-ம் ஆண்டும், மேலாவை 2008-ம் ஆண்டும், சக்ரியை 2017-ம் ஆண்டும் சாம்ரத் மவுரியா திருமணம் செய்துகொண்டார். இந்த 3 பேரையும் ஒரேநேரத்தில் கடந்த மே மாதம் சாம்ரத் திருமணம் செய்துகொண்டார். மவுரியாவுக்கு … Read more

சிறந்த வீரர்கள் பார்முக்கு திரும்ப இவ்வளவு நாட்கள் ஆகாது- கோலி குறித்து கபில்தேவ் கருத்து

புதுடெல்லி, இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா பங்கேற்று வரும் கிரிக்கெட் தொடர்களில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி பெரிய ரன்களை எடுக்காததால் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். கடந்த பல வருடங்களாக 3 வகையான அணியிலும் ரன் மெஷினாக ஏராளமான ரன்களையும் 70 சதங்களையும் அடித்து பல வெற்றிகளை குவித்து உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்று தன்னை நிரூபித்த அவர் கடைசியாக கடந்து 2019-ல் சதமடித்திருந்தார். அதன்பின் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் 3 வருடங்களுக்கும் மேலாக 100 இன்னிங்ஸ்களுக்கும் … Read more

உக்ரைனில் விண்வெளி ராக்கெட் நிலையம் மீது ரஷியா தாக்குதல் – 3 பேர் பலி

கீவ், உக்ரைன் மீதான ரஷியாவின் போரில் கிழக்கு உக்ரைன் தற்போது ரஷிய படைகளின் பிரதான இலக்காக உள்ளது. அதே சமயம் ரஷிய படைகளின் முழு கவனமும் கிழக்கு உக்ரைன் மீது இருந்தாலும் உக்ரைனின் பிறபகுதிகளில் தாக்குதல் நடத்துவதை ரஷியா நிறுத்திவிடவில்லை. அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களாக உக்ரைன் முழுவதும் உள்ள வணிக வளாகம், வர்த்தக மையம், அடுக்குமாடி குடியிருப்பு என பொது உள்கட்டமைப்புகள் மீது ரஷிய படைகள் தீவிரமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் … Read more

இந்தியா சீனா இடையே 16 ஆவது சுற்று பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது

புதுடெல்லி, கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறல் நடவடிக்கையால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் 15 சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளின் பலனாக எல்லையில் சில சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இருதரப்பும் படைகளை திரும்பப்பெற்றன. எனினும் டெம்சோக், தேப்சாங் உள்ளிட்ட பகுதிகளில் படைகளை வாபஸ் பெற சீனா மறுத்து வருகிறது. இந்த நிலையில் இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் … Read more

நீங்கள் கிரிக்கெட்டில் செய்ததை மற்றவர்கள் கனவில் மட்டுமே காணமுடியும் – கோலிக்கு ஆதரவளித்த பீட்டர்சன்

லண்டன், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி சமீபகாலமாக போட்டிகளில் சரிவர விளையாடுவதில்லை என்று விமர்சனங்கள் எழுத்து வருகிறது. கோலி கடைசியாக நவம்பர் 2109-ல் தான் சதம் அடித்துள்ளார். அதன் பின்னர் அவர் சதம் அடிக்கவில்லை.. இதனிடையே, இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் விராட் கோலி சரிவர விளையாடதால் அவர் மீது விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், விராட் கோலிக்கு இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பீட்டர்சன் … Read more

இலங்கை புதிய அதிபர் தேர்தலில் பலத்த போட்டி: ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெறுவாரா?

கொழும்பு, இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்ட மக்கள் புரட்சியால் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன் சிங்கப்பூருக்கு தப்பி சென்று விட்டார். எனவே இலங்கையின் இடைக்கால அதிபராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நேற்று முன்தினம் பதவியேற்றார். கோத்தபய ராஜபக்சே ராஜினாமாவை தொடர்ந்து நாட்டின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 20-ந்தேதி நாடாளுமன்றத்தில் நடக்கிறது. 19-ந்தேதி வேட்புமனு பெறப்படுகின்றன. இந்த தேர்தலில் போட்டியிட தற்போதைய இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே திட்டமிட்டு … Read more

இலவச தடுப்பூசி திட்டத்தில் இந்தியாவுக்கு 5 கோடி தடுப்பூசி கிடைக்குமா?

புதுடெல்லி, உலகளவில் ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகள் வழங்குவதற்கு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ‘காவி’ என்ற தடுப்பூசி கூட்டணி செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டணி கொரோனா வைரசுக்கு எதிராக கோவேக்ஸ் இலவச தடுப்பூசி திட்டத்தின்கீழ் இந்தியாவுக்கு 10 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் ஒதுக்கி உள்ளது. இதில் 5 கோடி டோஸ் தடுப்பூசிகளை இந்தியாவுக்கு உடனே வினியோகிக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிற நிலையில், 18 … Read more

'ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துவோம்' – இலங்கை நம்பிக்கை

கொழும்பு, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் அடுத்த மாதம் 27-ந்தேதி முதல் செப்டம்பர் 11-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது கடுமையான பொருளாதார பிரச்சினை, மக்கள் போராட்டம், அரசியல் மாற்றங்கள் என்று நெருக்கடியான சூழல் நிலவுவதால் இந்த போட்டி அங்கு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் போட்டியை திட்டமிட்டப்படி நடத்துவதில் இலங்கை கிரிக்கெட் வாரியம் தீவிர முனைப்புடன் உள்ளது. இலங்கை கிரிக்கெட் வாரிய … Read more