எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை மாலை 4 மணி வரை ஒத்திவைப்பு

புதுடெல்லி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஊக்கமருந்து எதிர்ப்பு மசோதா, 2022 மீது மாநிலங்களவைவில் பரிசீலனை மற்றும் நிறைவேற்றுவதற்காக விவாதம் நடந்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கூறுகையில், “இந்த மசோதா ஊக்கமருந்து எதிர்ப்பு மற்றும் முக்கிய விளையாட்டு நிகழ்வுகளை நடத்துதல், விளையாட்டு வீரர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், விளையாட்டு வீரர்களுக்கு காலக்கெடுவுக்கான நீதி, ஊக்கமருந்துக்கு … Read more

சிட்டி ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர்; 2-ம் சுற்றுக்கு ஆஸ்திரேலிய வீரர் முன்னேற்றம்

வாஷிங்டன், அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் சிட்டி ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் 2-ம் சுற்றுக்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னனி வீரர் கிர்ஜியாஸ் முன்னேறியுள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் கிரிஜியாஸ், அமெரிக்க வீரர் மார்கஸ் கைரோனை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், 6-3, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 2-ம் சுற்றுக்குள் கிர்ஜியாஸ் நுழைந்தார். தினத்தந்தி Related Tags : Citi Open … Read more

இணையதளத்தில் அதிகம் பேரால் கண்காணிக்கப்பட்ட நான்சி பெலோசியின் விமானம்

தைபே சிட்டி, தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சீனா தனது ஆதிக்கத்தை நிறுவ தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, தைவானை சீனாவின் ஒரு அங்கமாகவும், அது தனி பிராந்தியம் இல்லை என்ற நிலைப்பாட்டையும் சீனா தொடர்ந்து உலக அரங்கில் அறிவுறுத்தியுள்ளது. அதே வேளை, தைவான் பிராந்தியத்தின் தன்னாட்சி உரிமையை அமெரிக்கா துணை நின்று பாதுகாக்கும் என அமெரிக்க அரசு தொடர்ந்து கூறி வருகிறது. சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி பைடனுடன் தொலைபேசியில் உரையாடிய சீன அதிபர் … Read more

கடந்த ஆண்டே இந்திய பொருளாதாரம் மந்த நிலையில் சிக்கிவிட்டது: சுப்பிரமணியன் சுவாமி டுவிட்

புதுடெல்லி, கடந்த ஆண்டே இந்திய பொருளாதாரம் மந்த நிலையில் சிக்கிவிட்டது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது: இந்திய பொருளாதாரம் மந்த நிலையில் சிக்கிக்கொள்ளும் என்ற கேள்விக்கே இடமில்லை” என்று மத்திய நிதி மந்திரி கூறியதாக இன்று ஊடக செய்திகள் கூறுகின்றன. அவர் சொல்வது சரிதான். ஏனென்றால் கடந்த ஆண்டே இந்திய பொருளாதாரம் மந்த நிலையை சந்தித்துவிட்டது. எனவே தற்போது இந்திய … Read more

3வது டி20 : பதிலடி கொடுக்குமா இந்தியா ? – வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இன்று மோதல்

பாசட்டரே, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாசட்டரேவில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.இந்திய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரு … Read more

அமெரிக்காவின் ஏவுகணையால் அல்-ஜவாஹிரிக்கு நடந்த கொடூர மரணம் …! அடுத்த தலைவர் யார்…?

வாஷிங்டன் டிரோன் தாக்குதலில் அல்-கொய்தா தலைவர் அல்-ஜவாஹிரியை அமெரிக்கா கொன்றது. ஜவாஹிரியின் மரணத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதிப்படுத்தி உள்ளார். ஜவாஹிரி அமெரிக்க இரட்டைகோபுர தாக்குதல் சதியில் ஈடுபட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறினார்.இந்த தாக்குதலில் 2,977 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு தற்போது நீதி கிடைத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.அல் ஜவாஹிரிக்கு தலைக்கு அமெரிக்க ரூ.1.97 கோடி பரிசு அறிவித்து இருந்தது. அல் ஜவாஹிரி (71) ஓசாமா பின்லேடன் இறந்ததில் இருந்து அல்கொய்தா பயங்கரவாத … Read more

அமலாக்கத்துறைக்கு அளவு கடந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது – பிரதமர் மோடி மீது அசோக் கெலாட் கடும் தாக்கு!

ஜெய்ப்பூர், போலீஸ் துறைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை விட அமலாக்கத் துறைக்கு அதிகளவு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசை ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் குற்றம் சாட்டினார். ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் பேசியதாவது:- அமலாக்கத்துறை யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் என்ற அளவுக்கு அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் அமலாக்க துறைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அமலாக்கத்துறை கைது செய்வதற்கு முன் விளக்கம் கூட அளிக்க தேவை இல்லை, யாரை … Read more

காமன்வெல்த் மகளிர் ஆக்கி : ஹாட்ரிக் வெற்றியை நோக்கி இந்தியா..! இங்கிலாந்து அணியுடன் இன்று மோதல்

பர்மிங்காம், 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தொடக்க விழா முடிவடைந்த நிலையில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று நடக்கும் மகளிர் ஆக்கி போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.இந்தியா தனது முதல் 2 ஆட்டங்களில் கானா,வேல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.இந்த போட்டியில் ஹாட்ரிக் வெற்றி பெற இந்திய மகளிர் அணி முனைப்பு காட்டும் .இந்தியா -இங்கிலாந்து … Read more

மிரட்டும் சீனா; அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் தைவான் செல்வாரா? – உச்சபட்ச பரபரப்பு

வாஷிங்டன், அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பொலேசி. இவர் அரசு முறை பயணமாக மலேசியா, சிங்கப்பூர், தென்கொரியா, ஜப்பான் ஆகிய ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மலேசியா வந்தடைந்த நான்சிக்கு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து சிங்கப்பூர் சென்ற நான்சி சிங்கப்பூர் அதிபர், பிரதமரை சந்தித்தார். இந்நிலையில், ஆசிய பயணத்தின் ஒரு பகுதியாக நான்சி பொலேசி இன்று இரவு தைவான் நாட்டிற்கு பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தைவான் செல்லும் நான்சி அந்நாட்டு அதிபர் … Read more

குரங்கு அம்மை சிகிச்சைக்காக 3 மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட அறைகள் – டெல்லி அரசு நடவடிக்கை

புதுடெல்லி, இந்தியாவில் கடந்த ஜூலை 14 ஆம் தேதி குரங்கு அம்மை பாதிப்பு முதன் முதலாக உறுதி செய்யப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரள மாநிலம் வயநாடு வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அந்த நபர் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் குணமடைந்தார். இவரை தவிர கேரளாவில் மேலும் 4 பேருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கேரளாவில் இதுவரை குரங்கு அம்மை … Read more