அண்டோரா நாட்டில் நடந்த சர்வதேச சதுரங்க போட்டி: கிராண்ட் மாஸ்டர் இனியன் சாம்பியன் பட்டம் வென்றார்

ஈரோடு ஐரோப்பியா நாடான அண்டோரா நாட்டில் சர்வதேச சதுரங்க ஓபன் போட்டி கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடந்தது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் ஈரோட்டை சேர்ந்த பிரபல சதுரங்க வீரரும், சர்வதேச கிராண்ட் மாஸ்டருமான இனியன் பங்கேற்று விளையாடினார். இந்த போட்டியில் 22 நாடுகளை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்கள் 9 பேர், சர்வதேச மாஸ்டர்கள் 24 பேர் உள்பட 146 சர்வதேச போட்டியாளர்கள் பங்கேற்று விளையாடினார்கள். ஈரோடு கிராண்ட் … Read more

அமெரிக்காவில் நடப்பது என்ன? பல இடங்களில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி; 8 பேர் காயம்

வாஷிங்டன், நடப்பு ஆண்டில், அமெரிக்காவில் பெரிய அளவில் 381 துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. இது நாளொன்றுக்கு சராசரியாக 1.7க்கும் கூடுதலான பெரிய அளவிலான துப்பாக்கி சூடு எண்ணிக்கையாகும். அந்நாட்டில் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறைக்கு வேதனை தெரிவித்த அதிபர் பைடன், குழந்தைகள், குடும்பத்தினரை பாதுகாக்க, தாக்குதல் நடத்த கூடிய ஆயுதங்களை தடை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது என கூறினார். இதனை தொடர்ந்து கடந்த ஜூன் 22ந்தேதி துப்பாக்கி பாதுகாப்பு மசோதா கொண்டு வருவதற்கான … Read more

வீட்டு மாடியில் இருந்து தலைகீழாக விழுந்த தம்பி…! மார்போடு தாங்கி காப்பாற்றிய அண்ணன்!

மலப்புரம் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் சங்கரன்குளம் அருகே உள்ள உதலூர் கிராமத்தை சேர்ந்தவர் சாதிக். இவரது தம்பி ஷபீக். இவர்கள் 2 பேரும் வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். வீட்டின் மொட்டைமாடியில் தம்பி ஷபீக் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். அண்ணன் சாதிக் வீட்டின் முன்பு நின்றபடி சுவரில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தூய்மை பணி செய்து கொண்டு இருந்தார். அப்போது மாடியில் சுத்தம் செய்து கொண்டிருந்த ஷபீக் திடீரென்று கால்தவறி … Read more

ஈரோட்டில் மாநில அளவிலான இறகுபந்து தரவரிசை போட்டி; 1,250 வீரர்- வீராங்கனைகள் பங்கேற்பு

ஈரோடு ஈரோட்டில் மாநில அளவிலான இறகுபந்து தரவரிசை போட்டியில் 1,250 வீரர்- வீராங்கனைகள் பங்கேற்று விளையாடுகிறார்கள். தரவரிசை போட்டி தமிழ்நாடு இறகுபந்து சங்கம் சார்பில் 13 வயது முதல் 15 வயதுக்கு உள்பட்டோருக்கான மிக இளையோர் இறகுபந்து தரவரிசை போட்டிகள் ஈரோட்டில் நடத்தப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்ட இறகுபந்து சங்கம் இந்த போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்துகிறது. இந்த போட்டியில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 1,250 வீரர்- வீராங்கனைகள் பங்கேற்று விளையாடுகிறார்கள். ஒற்றையர், இரட்டையர், கலப்பு … Read more

உக்ரைனுக்கு ரூ.4335.53 கோடி ராணுவ நிதியுதவி; அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன், நேட்டோவில் உறுப்பினராக உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா படையெடுத்து உள்ளது. போரானது கடந்த பிப்ரவரி 24ந்தேதி தொடங்கி 5 மாதங்களையும் கடந்து நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இரு நாடுகளும் தீவிர போரில் ஈடுபட்டு உள்ளன. போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா ராணுவ தளவாடங்கள் மற்றும் நிதி உதவி ஆகியவற்றை செய்து வருகிறது. போரால், உக்ரைனில் உள்ள பொதுமக்கள் பாதிக்கப்படும் … Read more

கேரளாவில் மின்னல் வேகத்தில் பரவும் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல்

கன்னூர், கேரளா மாநிலத்தில் வயநாட்டைத் தொடர்ந்து கன்னூர் மாவட்டத்திலும் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னூர் மாவட்டம் கனிச்சார் ஊராட்சிக்குட்பட்ட பன்றி பண்ணையில் இந்நோய் கண்டறியப்பட்டதையடுத்து இதுவரை இந்த பண்ணையில் பாதிக்கப்பட்ட 14 பன்றிகள் உயிரிழந்துள்ளன. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் காரணமாக கேரளாவில் பன்றி இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளாவுக்கு பன்றிகள் கொண்டு வரவும் வெளியே கொண்டு … Read more

காமன்வெல்த் ஜூடோ போட்டி : இந்தியாவின் சுசிகா தாரியல், ஜஸ்லீன் சிங் காலிறுதிக்கு தகுதி

பர்மிங்காம், 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தியா இதுவரை மூன்று தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளது. 4-வது நாளான இன்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இன்று லான் பவுல்ஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி முதல் முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்து பதக்கத்தை உறுதி செய்து வரலாறு … Read more

அமெரிக்க பிரதிநிதி தைவானுக்கு பயணம் மேற்கொண்டால் சீன ராணுவம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது – சீனா எச்சரிக்கை!

பீஜிங், சீனா வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்க பிரதிநிதி நான்சி பெலோசி தைவானை பார்வையிடச் சென்றால் சீன ராணுவம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என்று கூறி இருக்கிறது. சீனா வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க அரசாங்கத்தின் மூன்றாம் நிலை உயர் அதிகாரியாக பதவி வகிக்கும் நான்சி பெலோசி, சீனாவின் அண்டை நாடான தைவான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியானது. இதற்கு சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. … Read more

5ஜி அலைக்கற்றை ஏலம் நிறைவு: 7ஆம் நாள் முடிவில் ஏலத்தொகை ரூ.1.50 லட்சம் கோடியை தாண்டியது!

புதுடெல்லி, இந்தியாவில் தொலைபேசி சேவைகளுக்கான 5ஜி அலைக்கற்றை ஏலம், இன்றுடன் ஒருவாரத்தை கடந்துவிட்டது. இந்த நிலையில், 7 நாட்களாக நடைபெற்ற ஏலம் இன்று பிற்பகல் முடிவுக்கு வந்தது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பாரத் ஏா்டெல், வோடபோன் மற்றும் உலக முன்னணி பணக்காரரான கவுதம் அதானியின் அதானி என்டா்பிரைசஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. முதல் நாள் ஏலத்தில் ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கோடி வரை ஏலம் கேட்கப்பட்டதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை தெரிவித்து … Read more

காமன்வெல்த் போட்டி 2022 : இந்திய அணியின் 4-வது நாள் போட்டி அட்டவணை, நேரம் – முழு விவரம்

பர்மிங்காம், 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தியா இதுவரை மூன்று தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளது. இந்நிலையில் 4-வது நாளான இன்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். 4-வது நாள் இந்திய அணியின் போட்டி அட்டவணை பின்வருமாறு : ★ ஜூடோ: (பிற்பகல் 2:30 மணி முதல்) ஆண்களுக்கான 66 கிலோ … Read more