உக்ரைன் துறைமுகத்தில் இருந்து தானியங்களை ஏற்றிய கப்பல்கள் புறப்பட தயார் – துருக்கி அறிவிப்பு

கீவ், உக்ரைன் உலகின் மிகப்பெரிய தானியங்கள் ஏற்றுமதியாளராக இருந்து வரும் சூழலில், அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கிய ரஷியா, கருங்கடல் பகுதியில் போா்க் கப்பல்களை நிறுத்தி அந்த கடல் வழியாக உக்ரைன் தானியங்கள் பிற நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவதற்கு தடை ஏற்படுத்தியது. இது சர்வதேச அளவில் உணவு நெருக்கடியை ஏற்படுத்தியதால், தானிய ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளை ஐ.நா. முன்னெடுத்தது. அதன் பலனாக ஜீலை 22-ந் தேதி தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் … Read more

நிலமோசடி வழக்கில் கைதான சஞ்சய் ராவத்தின் குடும்பத்தினரை சந்தித்தார் – உத்தவ் தாக்கரே

மும்பை, சிவசேனாவின் மூத்த தலைவர் மற்றும் எம்.பி.யான சஞ்சய் ராவத் சட்டவிரோத பணபரிமாற்றம் மற்றும் நிலமோசடியில் ஈடுபட்ட விவகாரத்தில் அமலாக்க துறை அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது. அவரது வீட்டுக்கு, நேற்று காலை 7 மணியளவில் 20 முதல் 22 அதிகாரிகள் வரை சென்று நடத்திய சோதனையில், ரூ.11.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று மாலை அமலாக்க துறை அதிகாரிகள் அவரை அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்தும் சஞ்சய் … Read more

செய்தியாளர் சந்திப்பின்போது மேஜை மீது ஏறி ஆட்டம்போட்ட வீராங்கனைகள் – சுவாரசிய நிகழ்வு…!

லண்டன், ஐரோப்பிய பெண்கள் சாம்பியன்ஷிப் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில், இங்கிலாந்து – ஜெர்மனி அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 56 ஆண்டு கால ஐரோப்பிய பெண்கள் சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியின் வரலாற்றில் முதல் முறையாக இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு பின் இங்கிலாந்து பெண்கள் கால்பந்து அணியின் … Read more

உக்ரைனின் மிகப்பெரிய தானிய ஏற்றுமதி நிறுவன தலைவர் ரஷிய தாக்குதலில் பலி

கீவ், உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரானது 5 மாதங்களை கடந்து தொடர்ந்து வருகிறது. உக்ரைன் மற்றும் ரஷியா ஆகிய இரு நாடுகளும் கோதுமை உள்ளிட்ட தானிய ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கின்றன. இந்த சூழலில், இரு நாடுகள் இடையேயான போரால் உணவு பொருட்களின் விலைவாசி உலக அளவில் உயர்ந்து உள்ளது. இந்நிலையில், உக்ரைனின் தெற்கு நகரான மிகோலைவ் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது. இதில், உக்ரைனின் ஹீரோ விருது வாங்கியுள்ள அந்நாட்டின் பணக்கார தொழிலதிபரான ஒலெக்சி வடாதுர்ஸ்கை … Read more

சமூக வலைதளத்தை நம்பி ஏமாந்த சிறுமி 4 மாதத்தில் 3 முறை விற்பனை ; நூற்றுகணக்கான முறை பாலியல் பலாத்காரம்

கொல்கத்தா மேற்கு வங்காளத்தை சேர்ந்த பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் அறிமுகமான நபரை நம்பி ஏமாந்தார். நான்கு மாதங்களில் பல்வேறு மாநிலங்களில் மூன்று முறை விற்பனை செய்யபட்டார். பலாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார், மேலும் அவரை விட 30 வயது மூத்த ஒருவரை வலுக்கட்டாயமாக திருமணம் செய்துவைக்கபட்டார். இது தொடர்பான வழக்கில் போலீஸ் அதிகாரிகள் பீகார், உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் ‘காதலன்’ ராகுல் உட்பட ஆறு … Read more

காமன்வெல்த்: பார்வையாளர்கள் அரங்கு மீது சைக்கிளுடன் மின்னல் வேகத்தில் பாய்ந்த வீரர்கள்…! – அதிர்ச்சி சம்பவம்

லண்டன், 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, காமன்வெல்த் தொடரில் ஆண்கள் உள்அரங்கு சைக்கிளிங் போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நேற்று லண்டன் லி வேலி விலொ பார்க்கில் உள்ள அரங்கில் நடைபெற்றது. இதில், இந்திய வீரர் விஷிஹவ்ஜூத் சிங் உள்பட 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். 15 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட பந்தைய ஓடுதளத்தை சைக்கிளிங் வீரர்கள் 10 சுற்றுகளாக கடக்க வேண்டும். … Read more

அமெரிக்காவில் மக்கள் கூட்டத்தில் திடீர் துப்பாக்கி சூடு; 7 பேர் காயம்

புளோரிடா, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஆர்லேண்டோ நகரில் மக்கள் கூட்டத்தில் திடீரென ஒருவருக்கொருவர் மோதல் ஏற்பட்டு வன்முறை பரவியது. இதில், அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கி ஒன்றை எடுத்து கூட்டத்தினரை நோக்கி சுட்டுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில் 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் நிலை சீராக உள்ளது என ஆர்லேண்டோ போலீஸ் தலைவர் எரிக் ஸ்மித் கூறியுள்ளார். துப்பாக்கி … Read more

பிரதமர் மோடியால் தான் மக்கள் உயிருடன் இருக்கிறார்கள் – பிரதமருக்கு புகழாரம் சூட்டிய பீகார் மந்திரி!

பாட்னா, பிரதமர் மோடி செயல்படுத்திய கொரோனா தடுப்பூசி நடவடிக்கை காரணமாகவே மக்கள் உயிர்பிழைத்திருக்கின்றனர் என்று பிரதமருக்கு பீகார் மாநில மந்திரி ஒருவர் புகழாரம் சூட்டினார். பீகார் மாநில மந்திரி ராம் சூரத் ராய் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் பேசியதாவது, “நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள் என்றால், அந்த பெருமை நரேந்திர மோடிக்கே சேரும், அவர் கொரோனா தொற்றுநோய்களின் போது தடுப்பூசியை உருவாக்கி, இலவசமாக தடுப்பூசியை வழங்கினார்” என்றார். மேலும் … Read more

காமன்வெல்த் போட்டி : இந்தியாவுக்கு 2-வது தங்க பதக்கம் – பளுதூக்குதலில் ஜெர்மி லால்ரின்னுங்கா தங்கம் வென்றார்

பர்மிங்காம், 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்றன. காமன்வெல்த் பளுதூக்குதலில் இந்தியா ஒரேநாளில் தங்கம், இரண்டு வெள்ளி, வெண்கலம் என 4 பதக்கங்களை அள்ளியது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற பளு தூக்குதல் ஆண்களுக்கான 67 கிலோ எடை பிரிவில் 19 வயதே ஆன இந்தியாவின் இளம் வீரர் ஜெரேமி லால்ரினுங்கா தங்க பதக்கம் … Read more

பாகிஸ்தானில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 320 ஆக உயர்வு..!

கராச்சி, பாகிஸ்தானில் கடந்த 5 வாரங்களாக பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் திடீர் வெள்ளப் பெருக்கினால் அந்நாட்டின் பலுசிஸ்தான் மாகாணம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை அந்த மாகாணத்தில் மட்டும் 127 பேர் உயிரிழந்துள்ளனர். ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளன. அந்நாடு முழுவதும் போக்குவரத்து தடைபட்டுள்ளது. பலுசிஸ்தானில் சுமார் 13,000 வீடுகள் வெள்ளத்தில் முழுமையாக முழ்கியுள்ளன. கராச்சி மற்றும் சிந்து மாகாணத்தில் மழை வெள்ளத்திற்கு 70 பேர் உயிரிழந்துள்ளனர். … Read more