ஐ.பி.எல். கிரிக்கெட்: லக்னோ – குஜராத் அணிகள் இன்று மோதல்

லக்னோ, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் மாலை 3.30 மணிக்கு லக்னோவில் அரங்கேறும் 26-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சை எதிர்கொள்கிறது. லக்னோ அணி இதுவரை 5 ஆட்டங்களில் ஆடி 3-ல் வெற்றி (ஐதராபாத், மும்பை, கொல்கத்தாவுக்கு எதிராக), 2-ல் தோல்வி (டெல்லி, பஞ்சாப்புக்கு எதிராக) கண்டுள்ளது. முந்தைய கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி 238 ரன்கள் குவித்து மலைக்க … Read more

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்

நேபிடாவ், மியாமர் நாட்டில் கடந்த மாதம் 28ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 3 ஆயிரத்து 645 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 ஆயிரத்து 17 பேர் படுகாயமடைந்தனர். நிலநடுக்கத்தில் சிக்கி மாயமான 148 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மியான்மரில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது . அந்நாட்டின் மைக்டிலா நகரை மையமாக கொண்டு … Read more

'பீகார் தேர்தல் நேரத்தில் ராணா தூக்கிலிடப்படுவார்' – பா.ஜ.க.வை சாடிய சஞ்சய் ராவத்

மும்பை, மும்பை தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணா நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டு உள்ளார். இதனை வரவேற்றுள்ள மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவுத், தேர்தல் ஆதாயத்திற்காக அதை அரசியலாக்குவதாக பா.ஜ.க.வை எச்சரித்தார் இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், “பயங்கரவாதி தஹாவூர் ராணாவை உடனடியாக தூக்கிலிட வேண்டும். ஆனால் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள பீகார் தேர்தல் நேரத்தில் … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து இறுதிப்போட்டி : மோகன் பகான்- பெங்களூரு அணிகள் இன்று மோதல்

கொல்கத்தா, 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ந் தேதி தொடங்கியது. 13 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் முன்னாள் சாம்பியன்களான மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட், பெங்களூரு எப்.சி. அணிகள் இறுதிப்பேட்டிக்குள் கால்பதித்தன. இவ்விரு அணிகளில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் இன்று (சனிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெறுகிறது. புள்ளி பட்டியலில் முதலிடம் … Read more

தீவிரமடையும் வர்த்தகப்போர்: அமெரிக்க பொருட்கள் மீது 125 சதவீத வரி விதித்து சீனா பதிலடி

பீஜிங், அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, அமெரிக்க பொருட்கள் மீது பல்வேறு நாடுகள் அதிக வரி விதிப்பதாகவும், அதற்கு பதிலடியாக அந்தந்த நாடுகளில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். அதன்படி, இந்தியா, சீனா, ஐரோப்பிய யூனியன், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீது வரிவிதித்தார். இதனை தொடர்ந்து 90 நாட்களுக்கு இந்த வரிவிதிப்பு நிறுத்தி வைக்கப்படுவதாகவும் தனது முடிவில் … Read more

ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகியது குறித்து மனம் திறந்த ருதுராஜ்

சென்னை, ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்பட்டார். அவரது தலைமையில் விளையாடிய சென்னை அணி நடப்பு சீசனில் 5 லீக் போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டு புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் முழங்கை எலும்பு முறிவு காரணமாக நடப்பு சீசனிலிருந்து ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார். இதனையடுத்து சென்னை சூப்பர் … Read more

வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மீண்டும் பிடிவாரண்டு

டாக்கா, வங்காளதேசத்தில் பதவியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அந்த நாட்டு கோர்ட்டில் மேலும் ஒரு கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நடந்த மாணவர்களின் போராட்டம் மற்றும் வன்முறையால் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதனால் நாட்டை விட்டு ரகசியமாக வெளியேறிய ஷேக் ஹசீனாவுக்கு, இந்தியா அடைக்கலம் கொடுத்துள்ளது. அவரை தங்கள் நாட்டுக்கு நாடு கடத்துமாறு வங்காளதேச இடைக்கால அரசு இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறது. ஆனால் … Read more

பீகார்: மின்னல் தாக்கி ஒரே நாளில் 25 பேர் பலி

பாட்னா, பீகாரில் நேற்று பல இடங்களில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் 25 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், மின்னல் தாக்கியதில் நாளந்தாவில் 18 பேரும், சிவானில் 2 பேரும், கதிஹார், தர்பங்கா, பெகுசராய், பாகல்பூர் மற்றும் ஜெகனாபாத்தில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். அவர்களது குடும்பத்தினருக்கு முதல்-மந்திரி நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண உதவியும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பீகாரின் மின்னல் தாக்கி … Read more

ஐ.பி.எல். கிரிக்கெட்: சரிவில் இருந்து மீளுமா சென்னை அணி? – கொல்கத்தாவுடன் இன்று மோதல்

சென்னை, 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 25-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது. 5 முறை சாம்பியனான சென்னை அணி நடப்பு சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வருகிறது. உள்ளூரில் நடந்த தொடக்க ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி வெற்றிகரமாக தொடங்கிய சென்னை … Read more