சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தில் சேர இந்தியாவின் எதிர்ப்பை மீறி ஆப்கானிஸ்தானுக்கு அழைப்பு!

பீஜிங், பாகிஸ்தான் மற்றும் சீனா இடையே இணைப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் 2015 இல் தொடங்கப்பட்ட திட்டமே ‘சீபெக்’ என்றழைக்கப்படும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் ஆகும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் அமைக்கப்படுவதால், இந்தியா சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. அதனையும் மீறி இந்த திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து சீனா செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், சீபெக்கின் 3-வது ஆலோசனை கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. அதில் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தில் இணைய … Read more

மழை தண்ணீர்ல கால்படக் கூடாதாம்…! மாணவர்கள் சேர் போட ஒய்யாரமாய் நடந்த ஆசிரியை சஸ்பெண்ட்

லக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆசிரியை ஒருவர் வெள்ள நீர் சூழ்ந்த தனது பள்ளிக்குள் நுழைவதற்கு மாணவர்களை நாற்காலிகளை அடுக்கி வைத்து பாலம் போல அமைத்து அதன் மேல் நடந்து சென்றுள்ளார். இந்த காணொலி சமூக வலைத்தளத்தில் வைராலகி வரும் நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் கடந்த சில நாள்களாக கடும் மழை பொழிந்துள்ளது.இதையடுத்து அங்குள்ள பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில், அங்குள்ள பள்ளி ஒன்றில் அதன் வளாகம் … Read more

காமன்வெல்த் போட்டி 2022 : இந்திய அணியின் 2வது நாள் போட்டி அட்டவணை, நேரம் – முழு விவரம்

பர்மிங்காம், 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. தொடக்க விழா முடிவடைந்த நிலையில் முதல் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கின. இந்த தொடரில் இந்தியாவின் 2வது நாள் அட்டவணை (ஜூலை 30 ) பின்வருமாறு :-(இந்திய நேரப்படி ) லாவ்ன் பவுல்ஸ் போட்டி : மதியம் 1.00 மணிக்கு தொடங்குகிறது. * இந்தியா ஆடவர் டிரிபிள் பிரிவு ,பெண்கள் … Read more

இங்கிலாந்து புதிய பிரதமர்: லிஸ் டிரஸ்சுக்கு 90% வெற்றி வாய்ப்பு; சமீபத்திய ஆய்வு தகவல்

லண்டன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அமைச்சரவையில் ஊழல் புகார் எழுந்ததும், இங்கிலாந்து சுகாதார மந்திரி சாஜித் ஜாவித், இந்திய வம்சாவளி எம்.பி.யான ரிஷி சுனாக் உள்ளிட்ட அரசின் உயர் பதவியில் இருந்தவர்கள் அடுத்தடுத்து பதவி விலகி அதிர்ச்சி அளித்தனர். இதனை தொடர்ந்து ஜான்சன், கடந்த 7ந்தேதி பதவி விலகினார். ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவியில் இருந்தும் அவர் விலகினார். எனினும், புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை அவர் இந்த பதவியில் தொடருவார். … Read more

தெலங்கானா: கிரேன் கம்பி அறுந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் பலி

ஐதராபாத் தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் ரெகுமானா கடா பகுதியில் பாலமுரு – ரங்காரெட்டி இடையே பாசன திட்டத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. 100 அடி ஆழமுள்ள சுரங்கப்பாதையில் கிரேன் உதவியுடன் கேபிள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று இரவு வழக்கம் போல் பணிகள் நடைபெற்று கொண்டு இருந்தது. திடீரென கிரேன் கம்பி அறுந்து விழுந்தது இதில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து கொல்லப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட் ரெட்டி கூறியதாவது:- … Read more

காமன்வெல்த் போட்டி- தங்கம் வெல்லும் முனைப்பில் இந்திய மகளிர் ஆக்கி அணி ..! முதல் போட்டியில் கானா அணியுடன் மோதல்

பர்மிங்காம், 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நாளை முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நீச்சல், தடகளம், பேட்மிண்டன், கூடைப்பந்து, கைப்பந்து, குத்துச்சண்டை, ஆக்கி, மல்யுத்தம், ஸ்குவாஷ் உள்பட 20 விளையாட்டுகளில் மொத்தம் 280 பந்தயங்கள் அரங்கேறுகிறது. இந்த போட்டியில் 72 நாடுகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா சார்பில் 15 விளையாட்டுகளில் 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் களம் … Read more

அமெரிக்கா, சீனா அதிபர்கள் தொலைபேசி மூலம் பேச்சு

வாஷிங்டன், அமெரிக்கா அதிபர் ஜோ பைடனும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் தொலைபேசி மூலம் கலந்துரையாடியுள்ளனர். ஐந்தாவது முறையாக இந்த கலந்துரையாடல் நடைபெற்றதாக வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். இரு நாடுகளிடையேயான உறவில் பதட்டமான சூழல் நிலவும் நிலையில் இரு தலைவர்களுக்கும் இடையே இந்த உரையாடல் நடைபெற்றதாக அவர் கூறியுள்ளார். பருவ நிலை மாற்றம் மற்றும் சுகாதார பாதுகாப்பு உள்பட இரு நாடுகளும் இணைந்து செயல்படக் கூடிய பகுதிகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தாகவும் கூறப்படுகிறது. … Read more

"சென்னை பயணம் மறக்க முடியாததாக அமைந்தது": பிரதமர் மோடி நெகிழ்ச்சி டுவீட்

சென்னை, பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று சென்னை வந்திருந்தார். நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற ‘செஸ்’ ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் கிண்டி கவர்னர் மாளிகைக்கு சென்று தங்கினார். தொடர்ந்து, தமிழ்நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் இன்று பிரதமர் மோடி பங்கேற்றார். விழாவில் பல்கலைக்கழக அளவில் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி படிப்புகளில் முதலிடம் பெற்ற 69 மாணவ-மாணவிகளுக்கு பிரதமர் மோடி தங்கத்தால் ஆன … Read more

செஸ் ஒலிம்பியாட் தொடர் – பாகிஸ்தான் திடீர் புறக்கணிப்பு..!

சென்னை, 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம், பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாய்ண்ட்ஸ் ரிசார்ட் என்ற 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இன்று முதல் அடுத்த மாதம் 10-ந் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர். செஸ் … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 54.93 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 கோடியே 92 லட்சத்து 81 ஆயிரத்து 407 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே … Read more