காங்கோ வன்முறையில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதற்கு ஐ.நா. கண்டனம்

நியூயார்க், மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அரசுக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அரசுக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கிளர்ச்சிக்குழுக்கள் நாடு முழுவதும் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வருகின்றன. இந்த கிளர்ச்சிக்குழுக்களை கட்டுப்படுத்தி அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் ஐ.நா. கடந்த 10 ஆண்டுகளாக அங்கு தனது அமைதிப்படையை நிறுத்தியுள்ளது. இந்த அமைதிப்படையில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ராணுவத்தினர் பணியாற்றி வருகின்றனர். ஆனால் … Read more

கனமழை எதிரொலி; ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவால் போக்குவரத்து நிறுத்தம்!

ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரில் நேற்று யூனியன் பிரதேசம் முழுவதும் மிக கனமழை கொட்டி தீர்த்தது. அதனால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டன. நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மீட்பு பணிகளை அதிகாரிகள் துரிதப்படுத்தியுள்ளனர். அங்குள்ள சேனாப் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள். அதே வேளையில் ஜம்மு – ஸ்ரீநகர் மற்றும் ஸ்ரீநகர் – கார்கில் … Read more

72 நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் இன்று தொடக்கம்

பர்மிங்காம், இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளை ஒருங்கிணைத்து காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது. 1930-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய விளையாட்டு திருவிழாவான காமன்வெல்த் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. இந்த 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மொத்தம் 20 விளையாட்டுகளில் 280 பந்தயங்கள் … Read more

இந்த பிரிவு எங்களுக்குள் இருக்கும் காதலை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது: மனைவி ஜெலன்ஸ்கா குறித்து உக்ரைன் அதிபர் உருக்கம்!

கீவ், உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது குடும்பத்தினர் பிரிந்து வாழுகின்றனர். இந்த நிலையில் இந்த பிரிவு தங்களுக்குள் இருக்கும் காதலை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். அதிபர் ஜெலன்ஸ்கி தனது மனைவி ஜெலன்ஸ்காவை 26 வருடங்களுக்கு முன் சந்தித்ததாக கூறினார். அவரை தன்னுடைய மிக நெருக்கமான தோழி என்றும் விவரித்தார். “என்னுடைய மனைவி சிறந்த தேசப்பற்றாளர் மற்றும் அவர் உக்ரைனை அளவு கடந்து நேசிக்கிறார். எனக்கு ஒரே மனைவி, ஒரே … Read more

சோனியாகாந்தியிடம் 3-வது நாள் விசாரணை நிறைவு

புதுடெல்லி, நாட்டின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவால் தொடங்கப்பட்ட ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை வெளியிட்டு வந்த ‘அசோசியேட்டட் ஜர்னல்ஸ்’ நிறுவனத்தை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களை இயக்குனர்களாக கொண்ட ‘யங் இந்தியா’ நிறுவனம் கையகப்படுத்தியது. இதன்மூலம் ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை ‘யங் இந்தியா’ அபகரித்துள்ளதாக பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி வழக்கு போட்டு அது டெல்லி கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதில் … Read more

நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பை இழந்தது வருத்தம் அளிக்கிறது – நீரஜ் ஜோப்ரா

அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் நடைபெற்ற 18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 22 பேர் கொண்ட இந்திய தடகள அணி, ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா தலைமையில் பங்கேற்றது. அதில் ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தனது 4-வது வீச்சில் ஈட்டியை 88.13 மீட்டர் தூரத்திற்கு வீசி உலக தடகள சாம்பியன்ஷிப் 2-வது இடம்பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். உலக தடகள போட்டியில் 19 ஆண்டுகளுக்கு பின் இந்தியா … Read more

காங்கோ: ஐ.நா. அமைதிப்படைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ; இந்திய வீரர்கள் 2 பேர் பலி

கின்ஷசா, மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் பயங்கரவாத அமைப்புகளும், கிளர்ச்சியாளர் குழுக்களும் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புகள் அந்நாட்டு மக்கள், அரசு படைகள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், காங்கோவில் அமைதியை நிலைநாட்டவும், அரசுப்படைகளுக்கு ஆதரவாகவும் ஐ.நா.வின் அமைதிப்படை நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த அமைதிப்படையில் இந்திய பாதுகாப்பு படை வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், ஐ.நா. அமைதிப்படைகள், உள்நாட்டு படைகள் இருந்தபோதும் காங்கோவில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து … Read more

சோனியா காந்தியை அமலாக்கத்துறை விசாரிக்க எதிர்ப்பு: டெல்லியில் காங்கிரசார் போராட்டம்

புதுடெல்லி, நேஷனல் ஹெரால்டு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, கடந்த 21-ந் தேதி அமலாக்கத்துறை இயக்குனரகத்தில் சோனியா காந்தி முதல் முறையாக ஆஜரானார். அன்று அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் 28 கேள்விகளுக்கு பதில் அளித்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதனை தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக சோனியா காந்தியிடம் நேற்று 2-வது முறையாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். சுமார் … Read more

டி.என்.பி.எல். கிரிக்கெட்: முதலாவது தகுதி சுற்றில் நெல்லை-சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இன்று மோதல்

சேலம், டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி சேலத்தில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் நெல்லை ராயல் கிங்ஸ், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின. இந்த நிலையில் இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் முதலாவது தகுதி சுற்று போட்டியில் பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ் அணி, கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீசை … Read more

பிலிப்பைன்சில் பயங்கர நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவு

மணிலா, பிலிப்பைன்சின் அப்ரா மாகாணத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் தலைநகர் மணிலா உள்ளிட்ட பல பகுதிகளில் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், நிலநடுக்கத்தின் பாதிப்புகள் அதிகமாக இருக்கலாம் என்று … Read more