மீசை இல்லாமல் வாழ்வதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது – மீசைப்பெண் ஷைஜூ

திருவனந்தபுரம்: பெண்கள் கிரீம்கள், ரேசர்கள் மற்றும் போன்றவற்றைக் கொண்டு முகத்தில் உள்ள முடிகளை அகற்றுவது வழக்கம் ஆனால் இந்தியாவில் மீசை வைக்க விரும்பும் ஒரு பெண்மணியும் இருக்கிறார். பல முறை பல அவரை கேலி செய்து அவர் தனது மீசையை எடுக்கவில்லை. கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் ஷைஜூ. (வயது 35). ஷைஜூவின் முகத்தில் ஆண்களை போல முறுக்கு மீசை உள்ளது. இந்த படத்தை அவர் சமூகவலைதளத்தில் தனது டி.பி.யாக வைத்துள்ளார். ஆண்கள் மட்டுமே மீசையுடன் … Read more

செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வெல்லும் முனைப்பில் நிறைமாத கர்ப்பிணியாக களமிறங்கும் இந்திய வீராங்கனை…!

சென்னை, செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நாளை சென்னை மாமல்லபுரத்தில் உள்ள பூஞ்சேரி கிராமத்தில் தொடங்க உள்ளது. இதில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இதன்படி, இந்தியா ஓபன் பிரிவில் 3 அணிகளையும், பெண்கள் பிரிவில் 3 அணிகளையும் களம் இறங்குகிறது. மொத்தம் 30 வீரர்/வீராங்கனைகள் 6 அணிகளாக களமிறங்குகின்றனர். பெண்கள் பிரிவில் இந்தியா 1 அணியில் கோனேரு ஹம்பி, ஹரிகா, வைஷாலி, தானியா சச்தேவ், பாக்தி குல்கர்னி ஆகிய வீராங்கனைகள் … Read more

உலக நாடுகள் குரங்கு அம்மை பாதிப்பு குறித்து உலக சுகாதார நிறுவனத்துடன் தகவல் பகிர வேண்டும் – சவுமிய சாமிநாதன்

ஜெனீவா, உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் அளித்த பேட்டியில் கூறியதாவது:- குரங்கு அம்மை பரவல் நமக்கு ஓர் எச்சரிக்கை மணி. நாம் எப்போதுமே வைரஸ் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். குரங்கு அம்மையானது குரங்கு அம்மை வைரஸால் உருவாகிறது. இது ஆர்தோபாக்ஸ் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. ஒருவகையில் இது 1980களில் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பெரியம்மை நோயை ஏற்படுத்தும் ஆர்த்தோபாக்ஸ் வைரஸை ஒத்த பண்புகளைக் கொண்டது. பெரியம்மை தடுப்பூசிகளே குரங்கு அம்மைக்கு எதிராக … Read more

வேறு சமூகத்தினர் பள்ளிக்கு செல்லக்கூடாது; 16 வயது சிறுமி தடுத்து நிறுத்தம், குடும்பத்தினர் மீது தாக்குதல்

போபால், மத்தியபிரதேச மாநிலம் ஷஜபூர் மாவட்டம் பவாலியஹெடி கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி பட்டியலின சமூகத்தை சேர்ந்தவராவார். இதனிடையே, கடந்த சனிக்கிழமை இந்த சிறுமி தனது கிராமத்திற்கு அருகே உள்ள பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, பக்கத்து கிராமத்தை சேர்ந்த மாற்று சமூகத்தை சேர்ந்த சிலர் அந்த சிறுமியை தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும், வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் பள்ளிக்கு செல்லக்கூடாது என கூறி அந்த சிறுமியின் புத்தக … Read more

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் விதிமுறைகள் என்ன?

சென்னை, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்க உள்ளது. இந்த போட்டிக்கான விதிமுறைகள், புள்ளி வழங்கும் முறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:- * ‘ஸ்விஸ்’ விதிமுறைப்படி நடக்கும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணிகளும் மொத்தம் 11 சுற்றுகள் விளையாட வேண்டும். ஒவ்வொரு சுற்றின் முடிவில், சமபலத்துடன் அதிக புள்ளிகளை பெற்றுள்ள அணிகளுடன் அடுத்தடுத்த சுற்றுகளில் மோதும் வகையில் அட்டவணை உருவாக்கப்படும். * ஒவ்வொரு ஆட்டத்திற்கான அணியில் மொத்தம் 5 … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 54.67 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 கோடியே 68 லட்சத்து 32 ஆயிரத்து 260 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே … Read more

நுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்த மருந்துகடைக்காரர் கொலை; குற்றவாளி மீது சிறையில் சக கைதிகள் சரமாரி தாக்குதல்

மும்பை, ஞானவாபி மதவழிபாட்டு தலம் தொடர்பாக கடந்த மே மாதம் ஆங்கில தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் பங்கேற்ற நபர் இந்து மத கடவுள் சிவலிங்கம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த விவாதத்தில் பங்கேற்ற பாஜக செய்தித்தொடர்பாளரான நுபுர் சர்மா இஸ்லாமிய மத கடவுளின் இறைதூதர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் நுபுர் சர்மாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய … Read more

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் – இன்று கடைசி ஆட்டம்

போர்ட் ஆப் ஸ்பெயின், வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் தொடக்க இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று நடக்கிறது. இரு ஆட்டங்களிலும் இந்திய அணியின் … Read more

இங்கிலாந்து பிரதமர் வேட்பாளர்களுக்கு சீனா எச்சரிக்கை

பீஜிங், இங்கிலாந்தில் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியான முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக், வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ் ஆகிய இருவரும் பொருளாதார கொள்கைகள், வரிக்குறைப்பு போன்ற பல்வேறு விவகாரங்களில் வேறுபட்ட கருத்துகளை கொண்டிருந்தாலும், சீனாவை எதிர்ப்பதில் ஒருமித்த கருத்தை கொண்டுள்ளனர். இங்கிலாந்துக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தல் என இருவரும் குற்றம் சாட்டி வருகின்றனர். அதுமட்டும் இன்றி, பிரதமராக தேர்வு செய்யப்பட்டால் சீனாவுடான உறவில் கண்டிப்புடன் இருப்பேன் என்றும், இங்கிலாந்தின் தொழில்நுட்பங்களை சீனா திருடுவதை … Read more

சோனியா காந்தியிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு; தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி கைது

டெல்லி, நேஷனல் ஹெரால்டு வழக்கில் 2-வது முறையாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று ஆஜரானார். அவரிடம் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று காங்கிரசார் சத்தியாகிரக போராட்டத்தி ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நாடாளுமன்றம் கூடியதுமே சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை, ஜிஎஸ்டி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். … Read more