உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா காயம் காரணமாக காமன்வெல்த் போட்டிகளில் இருந்து விலகல்!

புதுடெல்லி, அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் நடைபெற்ற 18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 22 பேர் கொண்ட இந்திய தடகள அணி, ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா தலைமையில் பங்கேற்றது. ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தனது 4-வது வீச்சில் ஈட்டியை 88.13 மீட்டர் தூரத்திற்கு வீசினார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ரா 2-வது இடம்பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். … Read more

இங்கிலாந்து பிரதமர் தேர்தல்: ரிஷி சுனக் – லிஸ் டிரஸ் இடையே தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அனல் பறந்த வாக்குவாதம்!

லண்டன், இங்கிலாந்து நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் சமீபத்தில் ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க ஆளும் பழமைவாத கட்சி (கன்சர்வேடிவ்) நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில் ஆரம்பம் முதலே அதிக வாக்குகளுடன் முன்னிலையில் உள்ள இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி லிஸ் டிரஸ் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இதன் மூலம் இங்கிலாந்தின் புதிய பிரதமருக்கான போட்டியில் ரிஷி சுனக் – லிஸ் … Read more

சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரிக்க எதிர்ப்பு: நாடு முழுவதும் காங்கிரஸ் 'சத்தியாகிரக' போராட்டம்

புதுடெல்லி, நேஷனல் ஹெரால்டு வழக்கில் 2-வது முறையாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று ஆஜரானார். அவரிடம் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று காங்கிரசார் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி காங்கிரசால் பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார், பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். அதேபோல், இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் அமளியில் … Read more

குத்துச்சண்டை வீராங்கனையின் பயிற்சியாளர் பிரச்சனைக்கு தீர்வு- அதிகாரிகளுக்கு, விளையாட்டுத்துறை மந்திரி உத்தரவு

லண்டனில் காமன்வெல்த் போட்டி நடத்தும் நிர்வாகம் மீது இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்க்கோஹைன் குற்றம் சாட்டி உள்ளார். காமன்வெல்த் கிராமத்தில் இருந்து தன்னுடைய பயிற்சியாளர் வெளியேற்றப்பட்டு விட்டதாக லவ்லினா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.பயிற்சியாளர் வெளியேற்றப்பட்டதால் போட்டி தொடங்கும் 8 நாட்களுக்கு முன்பே என் பயிற்சி நின்று விட்டது எனவும், கடந்த முறை உலக சாம்பியன்ஷிப் தொடரின் போது இதே நிலை ஏற்பட்டதால் தொடர் மிக மோசமாக அமைந்தது எனவும் கூறியுள்ளார்.மேலும் தன்னுடைய மற்றொரு பயிற்சியாளர் மீண்டும் இந்தியாவிற்கு … Read more

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அயர்லாந்து தலைவர் டேவிட் டிரிம்பிள் காலமானார்!

லண்டன், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அயர்லாந்து நாட்டின் முதல்-மந்திரியாக இருந்த டேவிட் டிரிம்பிள் காலமானார். அவருக்கு வயது 77. அவர் மறைந்துவிட்ட செய்தியை அவரது குடும்பத்தினர் நேற்று உறுதிபடுத்தியுள்ளதாக டிரிம்பிளின் அல்ஸ்டர் யூனியனிஸ்ட் கட்சி(யூயூபி) தெரிவித்துள்ளது. அவருடைய முயற்சியின் கீழ் 1998ம் ஆண்டு பெல்பாஸ்ட் ஒப்பந்தம் நிறைவேறியது. மேலும் அவர் புனித வெள்ளி ஒப்பந்தம் ஏற்பட காரணமாக திகழ்ந்த சிற்பி என்று போற்றப்படுபவர் ஆவார். அப்பகுதிகளில் 30 ஆண்டுகளாக நீடித்து வந்த செக்டேரியன் வன்முறையில் சுமார் … Read more

குஜராத்தில் அதிர்ச்சி – கள்ளச்சாராயம் குடித்த 21 பேர் பலி

போட்டட், குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,அகமதாபாத் மாவட்டம் மற்றும் போட்டட் மாவட்டங்களில் சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதனை அருந்திய பலரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.இதனால் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்தது செல்லப்பட்டனர் .அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 30 பேர் இன்னும் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. … Read more

24 ஆண்டு கால கனவு பலிக்குமா! காமன்வெல்த் போட்டியில் தங்கம் வெல்லும் முனைப்பில் களம்காணும் இந்திய ஆக்கி அணி

புதுடெல்லி, காமன்வெல்த் போட்டிகளில் முதன் முறையாக 1998 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற விளையாட்டு போட்டியின் போது ஆக்கி சேர்க்கப்பட்டது. அதனை தொடர்ந்து காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்திய ஆக்கி அணி விளையாடி வருகிறது. ஆனால் இதுவரை நடைபெற்ற ஆறு முறையும், ஆஸ்திரேலிய அணியின் கையே ஓங்கி நிற்கிறது. காமன்வெல்த் ஆக்கிப் போட்டிகளில் ஆஸ்திரேலியா ஆறு முறையும் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளது. ஆனால் சரித்திரத்தை மாற்றி இம்முறை காமன்வெல்த் ஆக்கி போட்டியில் இந்திய அணி தங்கம் … Read more

விமானத்தில் பரிமாறப்பட்ட உணவில் பாம்பின் தலை இருந்ததால் விமான ஊழியர் அதிர்ச்சி! விசாரணைக்கு உத்தரவு

அங்காரா, துருக்கியை சேர்ந்த விமான நிறுவனத்தின் விமானத்தில் பரிமாறப்பட்ட உணவில் பாம்பின் தலை இருந்ததை கண்ட ஊழியர் அதிர்ச்சி அடைந்தார். விமானத்தில் பரிமாறப்பட்ட உணவில் இறந்த பாம்பின் தலை இருந்ததாக விமான ஊழியர் புகார் அளித்தார். இதை அடுத்து விமான நிறுவனம் உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. துருக்கி தலைநகர் அங்காராவில் இருந்து ஜெர்மனிக்கு கடந்த ஜூலை 21ஆம் தேதி புறப்பட்ட விமானத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. அப்போது அந்த விமான ஊழியர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகளுடன் … Read more

இந்தியாவில் 3 ஆண்டுகளில் 329 புலிகள் உயிரிழந்துள்ளன – மத்திய அரசு

புது டெல்லி, மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே மக்களவையில் அறிக்கை ஒன்றை சமர்பித்தார். அதில், கடந்த 3 ஆண்டுகளில் வேட்டையாடுதல், இயற்கை மற்றும் இயற்கைக்கு மாறான காரணங்களால் 329 புலிகள் உயிரிழந்துள்ளன. அதில் 2019-ல் 96 புலிகளும், 2020-ல் 106 புலிகளும் , 2021-ல் 127 புலிகளும் உயிரிழந்துள்ளன. அவற்றில் 68 புலிகள் இயற்கையான காரணத்தினாலும், 5 புலிகள் இயற்கைக்கு மாறான காரணங்களாலும், 29 புலிகள் வேட்டையாடப்பட்டதாலும், 30 புலிகள் பிற … Read more

டிஎன்பிஎல் கிரிக்கெட்: வெளியேற்றுதல் சுற்றில் மதுரை-கோவை அணிகள் இன்று மோதல்

சேலம், 6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் சேலத்தில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த நெல்லை ராயல் கிங்ஸ், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின. இந்த நிலையில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் சதுர்வேத் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ், ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்சை எதிர்கொள்கிறது. இதில் … Read more