கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறேன்…!ஒவ்வொரு நாளும் நன்றாக உணர்கிறேன் – ஜோ பைடன்

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வெள்ளை மாளிகையில் உள்ள குடியிருப்பில் அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.தனிமைப்படுத்தலில் இருந்தபடியே தனது அனைத்து பணிகளையும் ஜோ பைடன் மேற்கொள்வார் எனவும் அமெரிக்க அதிபர் அலுவலகமான வெள்ளை மாளிகை தெரிவித்தது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறேன்,ஒவ்வொரு நாளும் நன்றாக உணர்கிறேன் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.கணினி மைக்ரோசிப் தயாரிப்பு குறித்த கூட்டத்தில் காணொலி வாயிலாக பங்கேற்றபிறகு பேசிய அவர் … Read more

இன்ஸ்டாகிராம்- பேஸ்புக் மோகம் கணவனை கள்ளகாதலனை ஏவி கொலை செய்த மனைவி

ஜோத்பூர் இன்ஸ்டாகிராம் பைத்தியக்காரத்தனத்திற்கு மனைவி ஒருவர் தன் கணவனை பலிகொடுத்து உள்ளார்.ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள லூனியில் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஜோத்பூரில் உள்ள ஒரு சாலையில் பைக் மீது கார் மோதி பைக்கை 200 மீட்டர் இழுத்து சென்றது. இதில் பயணம் செய்த ஆண்பென் இருவரும் அதே இடைத்தில் பலியானார்கள். இதனை அனைவரும் திட்டமிட்ட கொலை என்று கூறினர். ஆனால் எதற்காக இந்தக் கொலை நடந்தது என்பதுதான் எல்லோருக்கும் எழுந்த கேள்வி. இந்தக் … Read more

டிஎன்பிஎல் கிரிக்கெட்: பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள்..!

சேலம், 6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி சேலத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று மாலை நடந்த 27-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மதுரை பாந்தர்ஸ் அணி, 36 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்சை வீழ்த்தி வெற்றி பெற்றது. இரவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை சாய்த்தது. முதல் 6 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோற்றிருந்த சேலம் அணிக்கு கடைசி லீக்கில் முதல் வெற்றி கிடைத்திருக்கிறது. நேற்றுடன் லீக் … Read more

ஆன்லைன் 'லைவ்'வில் முன்னாள் மனைவியை தீ வைத்து எரித்துக்கொன்ற நபர் – தூக்கு தண்டனை நிறைவேற்றம்

பீஜிங், சீனாவின் சிச்சுவான் மாகாணத்தை சேர்ந்தவர் லமு. இவர் சீனாவின் உள்ள சமூகவலைதள செயலியான டுவ்யுன் என்ற செயலில் மிகவும் பிரபலமானவர். டிக்டாக் போன்ற அம்சங்களை கொண்ட டுவ்யுன் செயலியில் லமு பல்வேறு விதமான வீடியோக்களை வெளியிட்டு லமு பிரபலமடைந்தார். லமுவின் கணவர் தங் லு. இவரும் டுவ்யுன் செயலில் பிரபலமான நபராக இருந்து வந்தார். 11 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துவந்த கணவன் மனைவி இடையே 2020-ம் ஆண்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. லுமுவை அவரது கணவர் … Read more

நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவி ஏற்றார்

புதுடெல்லி, ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட திரவுபதி முர்மு வெற்றிபெற்றார். இதன் மூலம் நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாட்டில் பழங்குடி இனத்தை சேர்ந்த முதல் ஜனாதிபதி மற்றும் 2-வது பெண் ஜனாதிபதி என்ற பெருமையை திரவுபதி முர்மு பெறுகிறார். இந்நிலையில், பதவி ஏற்பு விழாவுக்கு முன்னதாக திரவுபதி முர்மு ஜனாதிபதி மாளிகைக்கு சென்றார். அங்கு திரவுபதி முர்முவை ராம்நாத் கோவிந்த் வரவேற்றார். புதிய ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள திரவுபதி முர்முவுக்கு ராம்நாத் … Read more

44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கிவைக்க பிரதமர் மோடி சென்னை வருகை..!

சென்னை, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகிற 28-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டியை தொடங்கிவைப்பதற்காக பிரதமா் மோடி வருகிற 28-ந் தேதி (வியாழக்கிழமை) பிற்பகல் 2.20 மணிக்கு குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து இந்திய விமானப்படை தனி விமானத்தில் புறப்பட்டு மாலை 4.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து சேருகிறார். சென்னை விமான நிலையத்தில் பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன் பிறகு பிரதமா் மோடி சென்னை பழைய … Read more

கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் மனைவியுடன் எலான் மாஸ்க் தொடர்பில் உள்ளாரா…?

வாஷிங்டன் உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் வகிப்பவரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க்கிற்கு தற்போது 50 வயது ஆகிறது. இவர் கடந்த 2000-ம் ஆண்டு ஜஸ்டின் வில்சன்என்பவரை திருமணம் செய்துகொண்டார். 8 ஆண்டுகள் நீடித்த இவர்களது உறவு கடந்த 2008-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதையடுத்து கடந்த 2010-ம் ஆண்டு டலுலா ரிலே என்ற நடிகையை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார் எலான் மஸ்க். கடந்த 2012-ம் ஆண்டு அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவரை … Read more

உங்கள் நம்பிக்கையும், ஆதரவும் எனக்கு வலிமை அளிக்கும் – ஜனாதிபதி திரவுபதி முர்மு

டெல்லி, நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு இன்று பதவியேற்றுக்கொண்டார். திரவுபதி முர்முவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் திரவுபதி முர்மு ஆற்றிய உரை கூறியதாவது, நாடாளுமன்றத்தில் நிற்பது என்பது அனைத்து இந்தியர்களின் எதிர்பார்ப்பு, லட்சியம், உரிமை. அனைவருக்கும் எனது பணிவான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த புதிய பொறுப்பை ஏற்றுக்கொள்ள உங்கள் நம்பிக்கையும், ஆதரவும் எனக்கு மிகுந்த வலிமையை அளிக்கிறது. சுதந்திர இந்தியாவுக்கு பின் பிறந்த … Read more

செஸ் ஒலிம்பியாட் பயிற்சி போட்டி: இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ததில் சாதனை..!

மாமல்லபுரம், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர்பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில் வருகிற 28-ந் தேதி முதல் அக்டோபர் 10-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு சிறப்பான முறையில் செய்து வருகிறது. வீரர், வீராங்கனைகள் மற்றும் போட்டிக்கான அதிகாரிகள், செஸ் சம்மேளன நிர்வாகிகள் தங்குவதற்கு நட்சத்திர … Read more

லாஸ் ஏஞ்சல்சில் பூங்காவில் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி; 5 பேர் காயம்

லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்காவில் துப்பாக்கி சூடு கலாசாரம் பெருகி வரும் சூழலில் அதற்கு எதிரான நடவடிக்கையை எடுக்க அதிபர் பைடன் தலைமையிலான அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அந்நாட்டின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பெக் பூங்கா பகுதியில் நடந்து வந்த கார் கண்காட்சி ஒன்றில் மக்கள் அதிக அளவில் கூடியிருந்தனர். இந்த சூழலில் திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது. இதுபற்றி லாஸ் ஏஞ்சல்ஸ் நகர போலீசார் கூறும்போது, லாஸ் ஏஞ்சல்சின் சான் பெட்ரோ … Read more