உ.பி.: நின்றிருந்த சொகுசு பேருந்து மீது மற்றொரு சொகுசு பேருந்து மோதல்; 8 பேர் உயிரிழப்பு

பாராபங்கி, உத்தர பிரதேசத்தின் பாராபங்கி நகரில் பூர்வாஞ்சல் விரைவு சாலையில் இன்று காலை சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. நரேந்திராபூர் மத்ராஹா கிராமம் அருகே லோனிக்திரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பேருந்து சென்றபோது, நின்றிருந்த மற்றொரு சொகுசு பேருந்து மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்து உள்ளனர். 16 பேர் காயமடைந்து உள்ளனர். இரண்டு பேருந்துகளும் பீகாரில் இருந்து டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்து உள்ளன. இதுபற்றி தகவல் அறிந்து … Read more

உலக தடகள மும்முறை தாண்டுதலில் இந்திய வீரர் எல்தோஷ் பால் ஏமாற்றம்

யூஜின், அமெரிக்காவில் நடந்து வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் (மும்முறை தாண்டுதல்) இறுதிப்போட்டியில் இந்திய வீரர் எல்தோஷ் பால் உள்பட 12 பேர் களம் இறங்கினர். இதில் எல்தோஷ் பால் தனது முதல் 3 முயற்சிகளில் முறையே 16.37 மீட்டர், 16.79 மீட்டர் 13.86 மீட்டர் தூரம் தாண்டி 9-வது இடம் பெற்று ஏமாற்றம் அளித்தார். ‘டாப்-8’இடங்களுக்குள் வராததால் அவருக்கு அடுத்த 3 முயற்சிக்கான வாய்ப்பு பறிபோனது. இதே போல் ஆண்களுக்கான … Read more

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் துப்பாக்கி சூடு; 7 பேர் காயம்

லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்காவில் துப்பாக்கி சூடு கலாசாரம் பெருகி வரும் சூழலில் அதற்கு எதிரான நடவடிக்கையை எடுக்க அதிபர் பைடன் தலைமையிலான அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அந்நாட்டின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பூங்கா பகுதியில் நடந்து வந்த கார் கண்காட்சி ஒன்றில் மக்கள் அதிக அளவில் கூடியிருந்தனர். அவர்களை நோக்கி திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது. இதுபற்றி லாஸ் ஏஞ்சல்ஸ் நகர போலீசார் கூறும்போது, லாஸ் ஏஞ்சல்சின் சான் பெட்ரோ பகுதியருகே … Read more

'இரவிலும் தேசியக்கொடியை பறக்க விடலாம்' – மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி, நமது தேசியக்கொடியை சூரிய உதயத்தில் இருந்து பறக்க விடலாம், சூரிய அஸ்தமனத்துக்கு முன்பாக இறக்கி விட வேண்டும். இதுதான் சட்ட நடைமுறை. ஆனால் இப்போது இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி வீடுகளில் பொதுமக்கள் தேசியக்கொடியை பகலில் மட்டுமல்லாது இரவிலும் பறக்க விடலாம். இதற்காக இந்திய தேசியக்கொடி சட்டம் 2002-ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நமது நாட்டில் எந்திரத்தால் செய்த தேசியக்கொடிக்கும், பாலியஸ்டர் தேசியக்கொடிக்கும் அனுமதி அளிக்கப்பட்டது இல்லை. இப்போது இதிலும் சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி தேசியக்கொடி … Read more

நாட்டுக்காக ஒரு பதக்கம் வெல்ல முடிந்தது என்பதில் மகிழ்ச்சி; நீரஜ் சோப்ரா

யூஜின், அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் 18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் 22 பேர் கொண்ட இந்திய தடகள அணி, ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா தலைமையில் பங்கேற்றுள்ளது. இந்நிலையில், ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிச்சுற்று இன்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தனது 4-வது வீச்சில் ஈட்டியை 88.13 மீட்டர் தூரத்திற்கு வீசினார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் … Read more

உக்ரைனில் துறைமுக தாக்குதலில் தங்களுக்கு தொடர்பில்லை என ரஷியா அறிவிப்பு; துருக்கி தகவல்

இஸ்தான்புல், உக்ரைன் மீது ரஷியா மேற்கொண்டுள்ள போரானது இன்றுடன் 5 மாதங்களை எட்டியுள்ளது. கடந்த பிப்ரவரி 24ந்தேதி ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் உக்ரைன் மீது போர் தொடங்கப்பட்டது. ஐ.நா. அமைப்பு, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் கேட்டு கொண்டும் ரஷிய படைகள் பின்வாங்கவில்லை. இது நீண்டகால போராக இருக்க கூடும் என அமெரிக்கா பின்னர் தெரிவித்தது. எனினும், உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்கள், தளவாடங்களை அமெரிக்கா அளித்து வருகிறது. இதனால், இருதரப்பிலும் தாக்குதல்கள் தீவிரமடைந்து உள்ளன. … Read more

நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து…!

புதுடெல்லி, 18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் நடந்து வருகிறது. இதில் 22 பேர் கொண்ட இந்திய தடகள அணி, ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா தலைமையில் பங்கேற்றுள்ளது. இந்நிலையில், ஈட்டி எறிதல் போட்டியில் இறுதிச்சுற்று இன்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தனது 4-வது வீச்சில் ஈட்டியை 88.13 மீட்டர் தூரத்திற்கு வீசினார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் … Read more

சூப்பர் டிவிசன் ஆக்கி: தெற்கு ரெயில்வே-உணவு கழகம் ஆட்டம் 'டிரா'

சென்னை, சென்னை மாவட்ட ஆக்கி சங்கம் சார்பில் ஸ்ரீராம் சிட்டி நிறுவனம் ஆதரவுடன் சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் தெற்கு ரெயில்வே-இந்திய உணவு கழக அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. தெற்கு ரெயில்வே அணியில் அஜித் குமார், பிரவீன் குமார் தலா ஒரு கோலும், உணவு கழக அணியில் … Read more

ஈரானில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு

டெஹ்ரான், பருவநிலை மாற்றம் சர்வதேச அளவில் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இதன்காரணமாக உலகின் பல நாடுகளில் பருவம் தவறிய மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஈரானில் பல ஆண்டுகளாக வறட்சியை சந்தித்து வந்த தெற்கு பராஸ் மாகாணத்தில் பருவ நிலை மாற்றத்தின் விளைவால் நேற்று முன்தினம் திடீரென கனமழை கொட்டித்தீர்த்தது. கரைபுரண்டோடும் வெள்ளம் அந்த மாகாணத்தின் எஸ்தாபன் நகரில் இடைவிடாமல் கொட்டிய கனமழையால் அங்குள்ள நீர்நிலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு … Read more

இந்தியாவில் இன்று மேலும் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு…!

புதுடெல்லி, இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20 ஆயிரத்து 279 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று முன்தின பாதிப்பான 21 ஆயிரத்து 880 மற்றும் நேற்றைய பாதிப்பான 21 ஆயிரத்து 441-ஐ விட குறைவாகும். இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 38 லட்சத்து 88 ஆயிரத்து … Read more