செஸ் ஒலிம்பியாட்: மடகாஸ்கர், ஹங்கேரி வீரர்கள் சென்னை வருகை

சென்னை, 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர்பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடக்கிறது. போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் களம் இறங்குகிறார்கள். இந்த செஸ் திருவிழாவில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்கள் நேற்று முதல் சென்னைக்கு வருகை தர தொடங்கி இருக்கிறார்கள். முதல் அணியாக ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த மடகாஸ்கர் … Read more

ஒப்பந்தங்களை மீறி ரஷியா தாக்குதல் – உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு

கீவ், உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 150-வது நாளை எட்டியுள்ளது. இருதரப்பும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தின. கடந்த சில வாரங்களாக கிழக்கு உக்ரைன் மீது தீவிரமான தாக்குதல்களை நடத்தி வரும் ரஷிய படைகள் நேற்று உக்ரைனின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கிரோவோஹ்ராட்ஸ்கா பிராந்தியத்தில் மூர்க்கத்தனமாக தாக்குதல்களை தொடுத்தன. அங்குள்ள விமானப்படை தளம் மற்றும் ரெயில்வே கட்டமைப்பை குறிவைத்து சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தின. இதனிடையே தெற்கு உக்ரைனில் ரஷிய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை குறிவைத்து … Read more

ஆசிரியர் நியமன முறைகேட்டில் கைதான சில மணி நேரங்களில் மந்திரிக்கு திடீர் உடல்நலக்குறைவு – மருத்துவமனையில் அனுமதி

கொல்கத்தா, மேற்குவங்காளத்தின் வணிகம் மற்றும் தொழில்துறை மந்திரியாக செயல்பட்டு வருபவர் பார்த்தா சாட்டர்ஜி (வயது 69). இவர் கடந்த 2014 முதல் 2021 ஆம் ஆண்டு வரை மாநில கல்வித்துறை மந்திரியாக செயல்பட்டு வந்தார். அந்த காலகட்டத்தில் ஆசிரியர்கள் பணி நியமனத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இது குறித்து விசாரிக்க சிபிஐ-க்கு கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இது குறித்து அமலாக்கத்துறையில் தனியாக … Read more

தேசிய சீனியர் கபடி: கால்இறுதியில் தமிழகம்..!

சென்னை, 31 அணிகள் இடையிலான 69-வது தேசிய சீனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி அரியானா மாநிலத்தில் உள்ள சார்கி டாத்ரி நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கால்இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் தமிழக அணி இமாச்சலப்பிரதேசத்துடன் மோதியது. இந்த ஆட்டத்தில் தமிழக அணி 33-27 என்ற புள்ளி கணக்கில் இமாச்சலபிரதேசத்தை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது. தினத்தந்தி Related Tags : National Senior Kabaddi Championship தேசிய சீனியர் கபடி சாம்பியன்ஷிப்

இஸ்ரேலில் நீச்சல் குளத்தில் ஏற்பட்ட திடீர் குழியில் சிக்கி வாலிபர் பலி

ஜெருசலேம், இஸ்ரேலின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கர்மி யோசப் நகரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. விருந்தில் கலந்து கொண்ட சிலர் அங்கிருந்த நீச்சல் குளத்தில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது நீச்சல் குளத்தின் அடியில் திடீரென துளை ஏற்பட்டு, பெரிய குழி உருவானது. நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருந்த 32 வயது வாலிபர் உள்பட 2 பேர் அந்த குழிக்குள் விழுந்தனர். அவர்களில் ஒருவர் எப்படியோ போராடி மேலே வந்துவிட்டார். ஆனால் குழிக்குள் … Read more

கேக் வெட்டி கோவிலில் வழிபாடு நடத்திய பின் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க புறப்பட்ட ஆக்கி வீரர்கள்!

புதுடெல்லி, 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் ஜூலை 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. இந்த நிலையில் இதில் பங்கேற்கவுள்ள இந்திய ஆக்கி அணி நேற்று லண்டன் புறப்பட்டது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்குப் புறப்படுவதற்கு முன் இந்திய ஆடவர் ஆக்கி அணிக்கான கொண்டாட்டங்கள் நேற்று இரவு நடைபெற்றன. இந்திய ஆடவர் ஆக்கி அணி வீரர்கள் கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்தனர். அதன்பின் கேக் வெட்டி கொண்டாடினர். பின்னர் விமானம் … Read more

ஸ்பெயினில் ஏற்பட்டுள்ள வெப்ப அலைக்கு 1,000 பேர் பலி

மாட்ரிட், காலநிலை மாற்றம் காரணமாக ஐரோப்பிய நாடுகள் வரலாறு காணாத அளவுக்கு கடும் வெப்ப அலையை எதிர்கொண்டுள்ளன. இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச அளவாக வெப்பநிலை 40 டிகிரி செல்சியசை தாண்டியது. வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கத்தால் ஸ்பெயின் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஸ்பெயினில் வீசிய வெப்ப அலைக்கு கடந்த 10 நாட்களில் 1,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக அந்த நாட்டு … Read more

மேற்குவங்காளம்: மந்திரியின் உதவியாளரான நடிகை வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக ரூ.20 கோடி பறிமுதல் – யார் இவர்?

கொல்கத்தா, மேற்குவங்காளத்தின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரியாக இருப்பவர் பார்த்தா சட்டர்ஜி. இவர் இதற்கு முன்னதாக அம்மாநிலத்தின் கல்வித்துறை மந்திரியாக பணியாற்றி வந்தார். இவர் கல்வித்துறை மந்திரியாக இருந்த காலத்தில் அம்மாநிலத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமணத்தில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. அம்மாநிலத்தில் தற்போது கல்வித்துறை மந்திரியாக உள்ள பரீஷ் சந்திர அதிகாரி. இவரது மகள் அங்கிதா அதிகாரி. இதற்கிடையே, மாநில அரசுப்பள்ளியில் அங்கிதா அதிகாரி 2018-ம் ஆண்டு ஆசிரியையாக … Read more

மாநில இளையோர் போட்டிக்கான சென்னை மாவட்ட கைப்பந்து அணிகள் நாளை மறுநாள் தேர்வு

சென்னை, மாநில இளையோர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 6-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான சென்னை மாவட்ட இளையோர் ஆண்கள் மற்றும் பெண்கள் கைப்பந்து அணி தேர்வு எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை மறுநாள் (25-ந் தேதி) பிற்பகல் 3 மணிக்கு 1-1-2002-க்கு பிறகு பிறந்தவர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ள தகுதி படைத்தவர்கள். இந்த அணி தேர்வில் கலந்து … Read more

சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தில் சேர உலக நாடுகளுக்கு அழைப்பு!

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் சாலைகள், எரிசக்தி திட்டங்கள் மற்றும் தொழில்துறை மண்டலங்களை உருவாக்குவதன் மூலம் பாகிஸ்தான் மற்றும் சீனாவில் இணைப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் 2015 இல் தொடங்கப்பட்ட திட்டமே ‘சீபெக்’ என்றழைக்கப்படும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் ஆகும். இந்த நிலையில், சீபெக்கின் 3-வது ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு தொடர்பாக நடைபெற்ற கூட்டு செயற்குழுவின் இக்கூட்டம் காணொலி முறையில் நடைபெற்றது. பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் சோஹைல் மஹ்மூத் மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை துணை … Read more