ஒரேயொரு நாள் மட்டும் போலீஸ் அதிகாரியான சிறுவர்கள்! சிறுவர்களின் ஆசையை நிறைவேற்றிய பெங்களூரு போலீஸ்

பெங்களூரு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டு சிறுவர்களின் போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற ஆசை நிறைவேறியது. 13 வயது சிறுவர்களான கேரளாவை சேர்ந்த முகமது சல்மான் மற்றும் பெங்களூரை சேர்ந்த பி மிதிலேஷ் ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இரண்டு வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், ‘மேக் எ விஷ் இந்தியா’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அதிகாரிகளிடம் சிறுவர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர். இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம், இதுவரை 77,358 … Read more

சாய் கிஷோரின் சுழல் ஜாலத்தால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அபார வெற்றி: 'பிளே-ஆப்' சுற்றுக்கும் தகுதி

சேலம், 8 அணிகள் இடையிலான 6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் சேலத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, திருப்பூர் தமிழன்சை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்த திருப்பூர் அணி முதலில்பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் (0). 5-வது பந்திலேயே கேட்ச் ஆனார். மற்றொரு தொடக்க வீரரும், கேப்டனுமான கவுசிக் காந்தியும் … Read more

பஞ்சாப் முதல்-மந்திரி தேர்தலில் தோல்வி; பொதுமக்கள் போராட்டத்திற்கு இம்ரான் கான் அழைப்பு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதை தொடர்ந்து பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றுள்ளதை ஏற்க மறுத்து வரும் இம்ரான்கான் தனது ஆட்சி கவிழ்ப்பில் வெளிநாட்டு சதி இருப்பதாக கூறி வருகிறார். மேலும், பாகிஸ்தானின் புதிய அரசுக்கு எதிராக தனது கட்சியான பாகிஸ்தான் தெக்ரிக்-ஐ-இன்சப் கட்சியின் … Read more

ஒருவர் மடியில் ஒருவர்…! கேரளாவில் மாணவ மாணவிகள் நூதன போராட்டம்

திருவனந்தபுரம் கேரள மாணவர்கள் எப்போதும் டிரெண்டிங்கில் இருப்பார்கள். ஒவ்வொரு முறையும் கட்டுப்பாடுகள் என்ற பெயரில் அழுத்தங்கள் வரும்போது, ​​புதுமையான எதிர்ப்புகளால் நாட்டின்ன் கவனத்தை ஈர்க்கிறார்கள். ‘கிஸ் ஆப் லவ்’ என்ற பெயரில் பரபரப்பை ஏற்படுத்திய கேரள மாணவர்கள், தற்போது போலீசாருக்கு எதிராக சமீபத்தில் நூதன் போராட்டத்தை தொடங்கு அதுகுறைத்த புகைபடத்தை வெளியிட்டு உள்ளனர். திருவனந்தபுரத்தின் சிஇடி (கல்லூரி ஆஃப் இன்ஜினியரிங் திருவனந்தபுரம்) மாணவ-மாணவிகள் தங்கள் கல்லூரிக்கு அருகிலுள்ள பஸ் நிறுத்தத்தில் அமர்ந்து அரட்டை அடிப்பது வழக்கம் . … Read more

இந்திய அணியில் விராட் கோலி தொடர்ந்து விளையாட வேண்டும் – ரிக்கி பாண்டிங்

இந்திய அணி 3 ஒருநாள் போட்டி, 5 டி20 போட்டியில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. விராட் கோலி சர்வதேச போட்டிகளில் சரியாக விளையாட முடியாமல் திணறி வருகிறார். அவர் கடைசியாக 3 வருடத்திற்கு முன்பு சதம் அடித்தார். விராட் கோலியை இந்திய அணி முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்து வரும் நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் … Read more

இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்பு

கொழும்பு, இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்து கடந்த 9-ந் தேதி அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்தனர். அவர்களிடம் இருந்து தப்பிய, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே தனது மனைவியுடன் மாலத்தீவுக்கு சென்று, பின்பு சிங்கப்பூருக்கு சென்றார். அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார். இதனையடுத்து புதிய அதிபர் தேர்தல் நேற்று நடந்தது. இத்தேர்தலில், ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி ஆதரவுடன் … Read more

ஐதராபாத்: தான் தொடங்கிய யூ டியூப் சேனலுக்கு வரவேற்பு கிடைக்காததால் கல்லூரி மாணவர் தற்கொலை

ஐதராபாத், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத், சைராபாத் தொகுதியை சேர்ந்தவர் தீனா (வயது 23). இவர் அங்குள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். குவாலியரில் உள்ள ஐ.ஐ.ஐ.டி.எம் நிறுவனத்தில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். படிப்பில் மிகவும் திறமையான தீனா தன்னுடைய முயற்சியால் யூ டியூப் சேனல் ஒன்றை உருவாக்கி அதில் ஆன்லைன் விளையாட்டு வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். இவர் உருவாக்கிய யூ டியூப் சேனலுக்கு அவர் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் தீனா … Read more

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் இன்று நடக்கிறது..!

போர்ட் ஆப் ஸ்பெயின், இங்கிலாந்து தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்திய கிரிக்கெட் அணி அடுத்து வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் ஒரு நாள் போட்டிகள் (ஜூலை 22, 24 மற்றும் 27-ந்தேதி) டிரினிடாட்டின் போர்ட் ஆப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று … Read more

உக்ரைன் ரஷியா இடையே தானிய ஏற்றுமதி ஒப்பந்தம் ஐ.நா பொதுச்செயலாளர் முன்னிலையில் இன்று கையெழுத்து

அங்காரா(துருக்கி): உக்ரைனில் தடை செய்யப்பட்ட தானிய ஏற்றுமதியை புதுப்பிக்கும் நோக்கில் உக்ரைனும் ரஷியாவும் இன்று தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் கோதுமை, சூரியகாந்தி எண்ணெய் மற்றும் பிற தானியங்களின் முக்கிய ஏற்றுமதியாளர்கள் என்ற நிலையில், பல மாதங்களாக தொடரும் ரஷியா உக்ரைன் இடையிலான போரினால், உக்ரைனின் தானிய ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இது உலக அளவில் தானியங்களின் விலை உயர்வுக்கும், தேவையை பூர்த்தி செய்வதில் சுணக்கமும் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் … Read more

வடகிழக்கு மாநிலங்களை தொடர்ந்து கேரளாவுக்கும் பரவிய ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்..!

திருவனந்தபுரம், கேரளாவின் வயநாட்டில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் என்பது வளர்ப்புப் பன்றிகளை பாதிக்கும் மிகவும் ஆபத்தான வைரஸ் தொற்று நோயாகும். கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மானந்தவாடியில் உள்ள இரண்டு பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மாத தொடக்கத்தில் பீகார் மற்றும் சில வடகிழக்கு மாநிலங்களில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பதிவாகியுள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து உயிரி பாதுகாப்பு நடவடிக்கைகளை கேரள அரசு கடுமையாக்கியது. இருந்தபோதிலும் … Read more