உலக தடகள சாம்பியன்ஷிப்: இறுதி போட்டிக்கு முன்னேறினார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா..!

யூஜின், 18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் யூஜின் நகரில் நடந்து வருகிறது. இதில் 22 பேர் கொண்ட இந்திய தடகள அணி, ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா தலைமையில் பங்கேற்றுள்ளது. இன்று ஆடவருக்கான ஈட்டி எறிதல் தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்றன. அதில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய நீரஜ் சோப்ரா, தனது முதல் முயற்சியிலேயே 88.39 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார். இதன் மூலம், உலக … Read more

இங்கிலாந்தில் வரலாறு காணாத வெப்பத்தால் உருகிய ரெயில்வே சிக்னல்! ரெயில் போக்குவரத்து பாதிப்பு

லண்டன், ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சிகல் உள்பட பல நாடுகளில் வெப்பத்தின் அளவு அதிகரித்துள்ளது. மழைக்கும், மிதமான வெப்ப நிலைக்கும் பெயர் போன லண்டன் போன்ற நகரங்கள் இத்தகைய வெப்ப அலையை சந்திப்பது பலருக்கும் ஆச்சரியத்தை தருகிறது. 2019ம் ஆண்டு லண்டன் மாநகரம் அதன் உட்சபட்ச வெப்பநிலையான 38.7 டிகிரி செல்சியஸை எட்டியது. தற்போது வீசிவரும் வெப்ப அலையானது அந்த புள்ளியை கடந்து 40 … Read more

போலி செய்திகளை பரப்பிய 94 யூடியூப் சேனல்களை மத்திய அரசு தடை செய்துள்ளது – மந்திரி அனுராக் தாக்கூர்

புதுடெல்லி, 2021-22ஆம் ஆண்டில் போலி செய்திகளை பரப்பியதற்காக 94 யூடியூப் சேனல்களை மத்திய அரசு தடை செய்துள்ளது என்று தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்தார். இதனுடன், 19 சமூகவலைதள கணக்குகள் மற்றும் 747 யூஆர்எல்களும் தடை செய்யப்பட்டுள்ளன. மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு பதிலளித்த மத்திய மந்திரி அனுராக் தாக்கூர், கூறுகையில், “தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000இன் பிரிவு 69ஏ-வின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் இறையாண்மைக்கு எதிராக இணையதளத்தில் பொய்யான செய்திகளை … Read more

1,400 பேர் பங்கேற்கும் செஸ் ஒலிம்பியாட் பயிற்சி ஆட்டம் மாமல்லபுரத்தில் 24-ந் தேதி நடக்கிறது..!

சென்னை, 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர்பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடக்கிறது. இந்தியாவில் முதல்முறையாக அரங்கேறும் செஸ் ஆட்டத்தில் மிகஉயரிய போட்டியான இதில் இந்தியா, அமெரிக்கா, நார்வே, பிரான்ஸ், நெதர்லாந்து உள்பட 189 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்த போட்டியை சிறப்பாகவும் என்றென்றும் நினைவில் நிற்கும் வகையில் … Read more

9 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்காவில் மீண்டும் போலியோ நோய்

வாஷிங்டன், 1948 முதல் 1955 ஆண்டு வரை உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய வைரஸ் நோய் போலியோ. இளம்பிள்ளை வாதம் என்று அழைக்கப்பட்ட போலியோ உலக அளவில் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியது. அதன் பின் போலியோவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இந்த நோய் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டது. ஆனாலும், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இன்னும் போலியோ நோய் குழந்தைகளுக்கு பரவி வருகிறது. இதற்கிடையில், நாட்டில் போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக 1979 ஆம் ஆண்டு அமெரிக்கா அறிவித்தது. … Read more

கேரளாவில் அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளை ஒழிக்க உத்தரவு

திருவனந்தபுரம், கேரளாவில் 280 பெண்கள் பள்ளிகளும், 164 ஆண்கள் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அடுத்த கல்வியாண்டில் இருந்து மாநிலத்தில் உள்ள அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளை ஒழித்துவிட்டு அப்பள்ளிகளை கலப்பு பள்ளிகளாக மாற்றி இணைக்கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று கேரள கல்வித்துறைக்கு குழந்தை உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதற்கு முன்பு பள்ளிகளில் உள்ள கழிவறை உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் இணைக்கல்வியின் அவசியம் குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. அடுத்தக் … Read more

சூப்பர் டிவிசன் ஆக்கி: போலீஸ் அணி வெற்றி

சென்னை, சென்னை மாவட்ட ஆக்கி சங்கம் சார்பில், ஸ்ரீராம் சிட்டி நிறுவனம் ஆதரவுடன் சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஐ.ஓ.பி. அணி 6-3 என்ற கோல் கணக்கில் சென்னை துறைமுகத்தை தோற்கடித்து தொடர்ச்சியாக 6-வது வெற்றியை ருசித்தது. மற்றொரு ஆட்டத்தில் சென்னை மாநகர போலீஸ் அணி 3-2 என்ற கோல் கணக்கில் இந்திய விளையாட்டு ஆணையைத்தை (சாய்) வீழ்த்தி … Read more

இலங்கை அதிபர் மாளிகை முன்பு துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் குவிப்பு

கொழும்பு, பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் 8-வது அதிபராக ரணில் விக்ரமசிங்கே நேற்று பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் ரணில் விக்ரமசிங்கேவுக்க எதிராக பல இடங்களில் திரண்ட போராட்டக்காரர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். போராட்டக்காரர்கள் அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சித்தால், சட்டத்தின்படி கையாள்வோம் என்று ரணில் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் நேற்றிரவு கொழும்பில் உள்ள அதிபர் மாளிகை வளாககத்திற்கு வெளியே ஆயுதம் ஏந்தி ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் நெருங்க முடியாத அளவிற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டன. உடனடியாக … Read more

கர்நாடகாவில் பேருந்து நிறுத்தத்தை திறந்து வைத்த எருமை மாடு..! அரசுக்கு பதிலடி கொடுத்த ஊர் மக்கள்

பெங்களூரு, கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் பேருந்து நிலையம் அமைத்துக்கொடுக்காத அரசின் மெத்தனப்போக்கை கண்டிக்கும் விதமாக அங்குள்ள மக்களே தென்னங்கீற்றில் பேருந்து நிலையம் அமைத்தனர். பின்னர், அந்த பேருந்து நிலையத்தை திறந்துவைப்பதற்காக எருமை மாட்டை சிறப்பு விருந்தினராக அழைத்து வந்தனர். இதையடுத்து எருமை மாட்டை முன்னிலைப்படுத்தி கிராம மக்கள் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தனர். அரசின் மெத்தனப்போக்கை கண்டிக்கும் விதமாக கிராம மக்களே தென்னங்கீற்றில் பேருந்து நிலையம் அமைத்து, அதனை எருமை மாட்டைக்கொண்டு திறந்து வைத்த நிகழ்வு … Read more

உலக தடகள சாம்பியன்ஷிப்: ஈட்டி எறிதல் இறுதி போட்டிக்கு இந்திய வீராங்கனை அன்னு ராணி முன்னேறி சாதனை!

யூஜின், 18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் நடந்து வருகிறது. இன்று மகளிருக்கான ஈட்டி எறிதல் தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்றன. அதில் இந்தியா சார்பில் அன்னு ராணி பங்கேற்றார். இந்த போட்டியின் மூன்றாவது மற்றும் கடைசி வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய அன்னு ராணி, சிறப்பாக விளையாடி, கடைசி வாய்ப்பில் இவர் 59.60 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார். அத்துடன் 8வது இடத்தை பிடித்தார். முதல் 8 இடங்களை … Read more