இலங்கை நாட்டின் 8-வது அதிபராக பதவி ஏற்றார் ரணில் விக்ரமசிங்கே

கொழும்பு, இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொருளாதார நெருக்கடிக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசைக் கண்டித்து நடைபெற்று வரும் மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்ததால், அதிபர் கோத்தபய ராஜபட்ச அண்மையில் ராஜினாமா செய்தாா். இதையடுத்து அந்நாட்டின் இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றாா். இலங்கையின் பிரதமராகப் பதவியேற்றிருந்த ரணில் விக்கிரமசிங்கே, அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் பதவி விலகலுக்குப் பிறகு, இலங்கையின் இடைக்கால அதிபராகவும் பதவியேற்றார். இந்தநிலையில், இலங்கையில் முதல்முறையாக … Read more

இந்தியாவில் 22 ஆயிரத்தை நெருங்கிய தினசரி கொரோனா பாதிப்பு

புதுடெல்லி, இந்தியாவில் தொடர்ந்து 2 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்துக்கு கீழே பதிவானது. ஆனால் நேற்று மீண்டும் 20 ஆயிரத்தை கடந்தது. இந்தநிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஒரே நாளில் 21,566 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,45,654 லிருந்து 1,48,881 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 18,294 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை … Read more

தென்ஆப்பிரிக்கா 20 ஓவர் லீக்; புதிய கிரிக்கெட் அணியை வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை, ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென்ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில் நடக்கும் இந்த போட்டியையொட்டி உருவாக்கப்பட்ட 6 அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர். அந்த வகையில் ஜோகன்னஸ்பர்க்கை அடிப்படையாக கொண்டு உதயமாகும் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிர்வாகம் வாங்கியுள்ளது. இதே போல் கேப்டவுன் அணி, மும்பை இந்தியன்சுக்கும், டர்பன் … Read more

அருணாசல பிரதேசத்தில் இந்திய எல்லையில் புதிய சாலை அமைக்க சீனா திட்டம்

பீஜிங், 2035-ம் அண்டுக்குள் 4.61 லட்சம் கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்க சீனா முடிவு செய்துள்ளது. 345 கட்டுமானங்களை கொண்ட இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக திபெத்தின் லுன்சே கவுண்டியில் இருந்து ஜின்ஜியாங் பிராந்தியத்தின் காஷ்கர் வரை சாலை அமைக்க சீனா திட்டமிட்டு உள்ளது. இந்த லுன்சே கவுண்டி, இந்தியாவின் அருணாசல பிரதேசத்தின் சில பகுதிகளை கொண்டதாகும். அருணாசல பிரதேசத்தை தெற்கு திபெத் என உரிமை கொண்டாடி வரும் சீனா, அதில் தனது கட்டுமான பணிகளை மேற்கொள்ள … Read more

நீட் தேர்வு: மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றிய விவகாரம் – மேலும் 2 பேர் கைது

புதுடெல்லி, மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும், 3,500 மையங்களில் நடைபெற்றது. நாடு முழுதும், 10.64 லட்சம் மாணவியர் உட்பட 18.72 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. இதில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தேர்வை எழுதினர். இந்நிலையில் கேரள மாநிலம் கொல்லத்தில் நீட் தேர்வு நடைபெற்ற கல்லூரி ஒன்றில், தேர்வில் கலந்து கொண்ட மாணவிகளின் உள்ளாடைகளை களையச் செய்து, பிறகு தேர்வு எழுத அனுமதித்ததாக … Read more

ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசை – பும்ராவை பின்னுக்கு தள்ளி போல்ட் முதலிடம்

துபாய், ஒருநாள் போட்டியில் சிறந்த பந்துவீச்சாளருக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது. இதில், பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து வீரர் டிரெண்ட் போல்ட் முதல் இடத்துக்கு முன்னேறினார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 2-ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். மூன்றாவது இடத்தில் பாகிஸ்தானின் ஷாஹீன் அப்ரிடி உள்ளார். அதேபோல் பேட்டிங் தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் முதல் இடத்தில் உள்ளார். 4-வது இடத்தில் விராட் கோலியும், 5வது இடத்தில் ரோகித் சர்மாவும் உள்ளனர். ஆல் … Read more

இலங்கை: பாஸ்போர்ட் சேவை மையத்தில் குவிந்துள்ள மக்கள் – வெளிநாடுகளில் பணியாற்ற ஆர்வம்!

கொழும்பு, இலங்கையில் நிலவும் வரலாறு காணாத கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொருளாதார நெருக்கடிக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசைக் கண்டித்து நடைபெற்று வரும் மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. 100 நாட்களை கடந்து போராட்டம் நடைபெறுகிறது. இந்த நிலையில், இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் குவிந்துள்ளனர். இலங்கையில் அத்தியாவசிய தேவைக்கான பொருட்களை கூட சாமானிய மக்கள் வாங்க முடியாத அளவுக்கு … Read more

என்னுடைய சகோதரியே இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியாக வருவார்: திரவுபதி முர்முவின் சகோதரர் தாரினிசென் துடு

புவனேஷ்வர், ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று எண்ணப்படுகின்றன. நாட்டின் 15-வது ஜனாதிபதி யார்? என்ற விவரம் இன்றை தினம், மாலைக்குள் வெளியாகும் என தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. திரவுபதி முர்முவே அடுத்த ஜனாதிபதி ஆகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு அவர் வெற்றி பெற்றால் நாட்டின் முதல் பழங்குடியின ஜனாதிபதி என்ற சிறப்பை அவர் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய திரவுபதி முர்முவின் சகோதரர் தாரினிசென் துடு … Read more

அரசு பள்ளிகளுக்கு இடையே வட்டார அளவிலான செஸ் போட்டி

கன்னியாகுமரி நாகர்கோவில், அரசு பள்ளிகளுக்கு இடையே வட்டார அளவிலான செஸ் போட்டி நடந்தது. செஸ் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி நடத்துவதற்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை என 4 நிலைகளில் மாணவர்களுக்கான செஸ் … Read more

உக்ரைன் போரில் சுமார் 15 ஆயிரம் ரஷிய படைகள் உயிரிழப்பு: அமெரிக்க உளவுத்துறை

கொலராடோ, உக்ரைன் – ரஷியா இடையிலான போர் மாதக்கணக்கில் நீடித்து வருகிறது. இரு தரப்பு பேச்சுவாரத்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரு தரப்பில் இருந்தும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்களை இந்த போர் ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், உக்ரைன் போரால் இதுவரை சுமார் 15 ஆயிரம் ரஷிய படைகள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்து உள்ளது. மேலும் 45 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ரஷிய படையில் தாக்குதல்களால் அப்பாவி உக்ரைனிய … Read more