ஆசிய விளையாட்டு போட்டி நடைபெறும் தேதி அறிவிப்பு

குவைத், 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோவில் வருகிற செப்டம்பர் 10-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து இந்த போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்படுவதாக கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியை நடத்துவது குறித்து போட்டி அமைப்பாளர்கள் உள்பட அனைத்து தரப்பினருடனும் கலந்து ஆலோசித்து புதிய தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தள்ளிவைக்கப்பட்ட ஆசிய விளையாட்டு போட்டி … Read more

உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 52.11 கோடியாக உயர்வு

வாஷிங்டன், உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்புகள் முதன்முறையாக சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பரில் கண்டறியப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 226 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை … Read more

இந்தியாவில் மீண்டும் 20 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு: 2,603 பேர் பலி

புதுடெல்லி, இந்தியாவில் தொடர்ந்து 4 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்த நிலை நேற்று முன்தினம் மாறி, 16 ஆயிரத்து 935 பேருக்கு தொற்று ஏற்பட்டது. நேற்று தொடர்ந்து 2-வது நாளாக பாதிப்பு குறைந்தது. ஒரு நாளில் 15 ஆயிரத்து 528 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் புதிய கொரோனா பாதிப்பு நேற்றைவிட 32.3% அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 … Read more

2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி தேதி அறிவிப்பு

லாஸ்ஏஞ்சல்ஸ், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒரு ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு (2021) நடந்தது. அடுத்த ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 2024-ம் ஆண்டு நடக்கிறது. அதற்கு அடுத்த ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ம் ஆண்டு நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த போட்டி நடைபெறும் தேதியை உள்ளூர் போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இதன்படி 2028-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் … Read more

இலங்கையில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

கொழும்பு, இலங்கையில் விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை ஆகியவற்றை தொடர்ந்து கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. நிதி நெருக்கடியால், உணவு, மருந்து மற்றும் எரிபொருள் ஆகியவற்றை இறக்குமதி செய்யவோ, விலை கொடுத்து வாங்கவோ முடியாத சூழ்நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது. சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை இல்லாத வகையிலான எரிபொருள் பற்றாக்குறையால் அந்நாடு சிக்கி தவித்து வருகிறது. இந்த சூழலில், இலங்கைக்கு இந்தியா ஆதரவுகரம் நீட்டியுள்ளது. கோதுமை … Read more

உ.பி.: கார் மீது லாரி கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு

ரேபரேலி, உத்தர பிரதேசத்தின் ரேபரேலி மாவட்டத்தில் படோகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ரேபரேலி-பிரயாக்ராஜ் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வழியே சென்ற கரி சாம்பல் ஏற்றிய லாரி ஒன்று காரை முந்தி செல்ல முயன்றுள்ளது. இதில், திடீரென கார் மீது லாரி கவிழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் காரில் பயணித்த 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களது உடல்கள் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் மீட்கப்பட்டு உள்ளன. அவர்கள் உணவு விடுதி … Read more

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: வெற்றியை நோக்கி செல்கிறது பாகிஸ்தான் அணி

காலே, பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அரை சதமடித்த சண்டிமால் 76 ரன்னில் அவுட்டானார். பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிடி 4 விக்கெட்டும், ஹசன் அலி, யாசீர் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 218 … Read more

உக்ரைன் தேசிய கொடியின் வண்ணம் கொண்ட பூங்கொத்துகளால் ஜெலன்காவை வரவேற்ற பைடன்

வாஷிங்டன், உக்ரைன் நாடு நேட்டோவில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா பின்பு, ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் அந்நாட்டின் மீது கடந்த பிப்ரவரி 24ந்தேதி தாக்குதல் நடத்த தொடங்கியது. இந்த போரானது தொடர்ந்து பல மாதங்களாக நீடித்து வருகிறது. போரால் உக்ரைனின் நாட்டில் வீரர்கள், பெண்கள், குழந்தைகள் என பொதுமக்கள் என பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். ரஷிய தரப்பில் வீரர்கள், ஆயுதங்கள் ஆகிய இழப்புகள் ஏற்பட்டு உள்ளன. இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்து அதற்காக … Read more

இந்திய-சீன எல்லையில் தொழிலாளர் உயிரிழப்பு; 18 பேர் மாயம்

தமின், வடகிழக்கு மாநிலங்களில் பெரிய அளவில் சாலை உள்கட்டமைப்பு அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அருணாசல பிரதேசத்தின் குருங் குமி மாவட்டத்தில் இந்திய-சீன எல்லையை ஒட்டிய தமின் வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் தொழிலாளர்கள் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அவர்களில் சிலர் கடந்த வாரம் ப்க்ரீத் பண்டிகையை கொண்டாட விடுமுறை தரும்படி பெங்கியா பதோ என்ற ஒப்பந்ததாரரிடம் கோரியுள்ளனர். ஆனால், அவர் அனுமதி தர மறுத்து விட்டார். இதனால், அவர்கள் யாருக்கும் … Read more

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் மைராஜ் கான் தங்கம் வென்று சாதனை

சாங்வான், உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி தென்கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான ‘ஸ்கீட்’ போட்டியின் இறுதி சுற்றில் இந்திய வீரர் மைராஜ் அகமது கான் 40-க்கு 37 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கம் ருசித்தார். இதன் மூலம் உலக கோப்பை போட்டியில் ‘ஸ்கீட்’ பிரிவில் தங்கப்பதக்கம் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை உத்தரபிரதேசத்தை சேர்ந்த 46 வயதான மைராஜ் அகமது கான் தனதாக்கினார். தென்கொரியா வீரர் … Read more