இங்கிலாந்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு; பிரதமர் ஜான்சன் தலைமையிலான அரசு வெற்றி

லண்டன், இங்கிலாந்து நாட்டில் பிரதமர் பதவியில் இருந்து தெரசா மே கடந்த 2019ம் ஆண்டு விலகிய நிலையில், அவருக்கு பதிலாக போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்று கொண்டார். எனினும், அவரது அமைச்சரவை மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. இதனை தொடர்ந்து கடந்த 7ந்தேதி பிரதமர் பதவியில் இருந்து ஜான்சன் விலகினார். அவர் வகித்து வந்த கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பொறுப்பிலிருந்தும் விலகினார். இதனால், புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணி நடந்து வருகிறது. இந்த சூழலில் எதிர்க்கட்சியான தொழிலாளர் … Read more

அரிசி உள்ளிட்ட உணவுப்பொருட்களுக்கு ஜி.எஸ்.டி – மத்திய அரசுக்கு பாஜக எம்.பி. கண்டனம்

புதுடெல்லி, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு பொருட்கள் மீதான 5 சதவீத ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு நேற்று அமலுக்கு வந்தது. இதற்கு பா.ஜனதா எம்.பி. வருண்காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “பால், தயிர், வெண்ணெய், அரிசி, பருப்பு, ரொட்டி போன்ற பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்துள்ளது. வேலையில்லா திண்டாட்டம் சாதனை படைக்கும் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், இந்த ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு, நடுத்தர குடும்பங்கள் மற்றும் வாடகை வீடுகளில் வசிக்கும் … Read more

டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் இன்று மோதல்

சேலம், 8 அணிகள் இடையிலான 6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நெல்லையில் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. நெல்லை, திண்டுக்கல், கோவை ஆகிய இடங்களில் மொத்தம் 21 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. 2 நாள் ஓய்வை தொடர்ந்து கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி நடக்கிறது. இரவு 7.15 மணிக்கு தொடங்கும் 22-வது லீக் ஆட்டத்தில் நடப்பு … Read more

உக்ரைனில் நீளும் போர்… பட்டினியை ஒழிக்கும் சர்வதேச முயற்சியை தடம் புரள செய்யும்: ஐ.நா.வில் இந்தியா பேச்சு

நியூயார்க், சர்வதேச உணவு பாதுகாப்பு நெருக்கடி பற்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த உயர்மட்ட சிறப்பு நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் முதன்மை செயலாளர் சினேகா துபே கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, கொரோனா பெருந்தொற்று மற்றும் நடந்து வரும் உக்ரைன் போர் உள்ளிட்ட மோதல்கள் பொதுமக்களின் வாழ்க்கையை, குறிப்பிடும்படியாக வளர்ந்து வரும் நாடுகளில் வெகுவாக பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. இதனால், எரிபொருள் உள்ளிட்ட ஆற்றல் துறை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து உள்ளது. அதனுடன், … Read more

சார்ஜ் செய்யும்போது விபத்து- ஷோரூமில் வைக்கப்பட்டிருந்த 7 எலக்ட்ரிக் பைக்குகள் தீயில் கருகின

மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள மார்க்கெட் யார்டின் கங்காதம் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது இ பைக் ஷோரூமில் 7 எலக்ட்ரிக் பைக்குகள் திடீரென தீப்பிடித்து எரிந்து கருகின. நேற்று இரவு பைக்குகளுக்கு சார்ஜ் தீசெய்யும்போது 7 எலக்ட்ரிக் பைக்குகள் தீப்பிடித்ததாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை. விபத்து குறித்து தீயணபை்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:- பைக்குகள் சார்ஜ் செய்வதற்காக இணைக்கப்பட்டிருந்தன. அப்போது குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு தீ பிடித்து பைக்குகள் … Read more

உலக தடகள 100 மீட்டர் ஓட்டம்: ஜமைக்கா வீராங்கனை பிரேசர் 5-வது முறையாக 'சாம்பியன்'

யூஜின், 18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் நடந்து வருகிறது. இதில் உலகின் அதிவேக வீராங்கனை யார்? என்பதை நிர்ணயிக்கும் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் இறுதி சுற்று இந்திய நேரப்படி நேற்று காலை அங்கு நடந்தது. இலக்கை நோக்கி 8 வீராங்கனைகள் ராக்கெட் வேகத்தில் பாய்ந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் முடிந்து ரசிகர்களை சிலிர்க்க வைத்த இந்த ஓட்டத்தில் எதிர்பார்த்தபடியே டாப்-3 இடங்களை ஜமைக்கா வீராங்கனைகள் ஆக்கிரமித்தனர். ஜமைக்காவின் … Read more

மற்ற நாடுகளை விட இலங்கைக்கு அதிகமாக கடன் வழங்கிய இந்தியா

கொழும்பு, வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கைக்கு அதிகமாக கடன் வழங்கியது இந்தியாதான் என்று தெரிய வந்துள்ளது. இதை இலங்ைக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் ஏப்ரல் 30-ந் தேதிவரை, இலங்கைக்கு மொத்தம் 96 கோடியே 88 லட்சம் டாலர் (ரூ.7 ஆயிரத்து 750 கோடி) வெளிநாட்டு கடன் கிடைத்துள்ளது. இதில், இந்தியா மட்டும் 37 கோடியே 69 லட்சம் டாலர் (ரூ.3 ஆயிரத்து 15 கோடி) கடன் … Read more

இலங்கை நெருக்கடி; மத்திய மந்திரிகள் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்

புதுடெல்லி, இலங்கையில் விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை ஆகியவற்றை தொடர்ந்து கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. நிதி நெருக்கடியால், உணவு, மருந்து மற்றும் எரிபொருள் ஆகியவற்றை இறக்குமதி செய்யவோ, விலை கொடுத்து வாங்கவோ முடியாத சூழ்நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது. சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை இல்லாத வகையிலான எரிபொருள் பற்றாக்குறையால் அந்நாடு சிக்கி தவித்து வருகிறது. இந்த சூழலில், இலங்கைக்கு இந்தியா ஆதரவுகரம் நீட்டியுள்ளது. கோதுமை … Read more

சண்டிமால், மெண்டிஸ் பொறுப்பான ஆட்டம் – 3ம் நாள் முடிவில் இலங்கை 329/9

கெல்லே, பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அரை சதமடித்த சண்டிமால் 76 ரன்னில் அவுட்டானார். தீக்ஷனா 38 ரன்னும், பெர்னாண்டோ 35 ரன்னும் எடுத்தனர். பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிடி 4 விக்கெட்டும், ஹசன் அலி, யாசீர் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். … Read more

இலங்கையில் அறிவிக்கப்பட்ட அவசரநிலை: ஜனநாயக விரோதம் என எதிர்க்கட்சிகள் கண்டனம்

கொழும்பு, அண்டை நாடான இலங்கையில் பொருளாதார நெருக்கடி, அதைத் தொடர்ந்த போராட்டங்களால் தற்போது அரசியலில் புயல் வீசிவருகிறது. எதிர்ப்புச் சூடு தாளாமல் மாலத்தீவுக்கும், பின்னர் சிங்கப்பூருக்கும் தப்பிச் சென்ற அதிபர் கோத்தபய ராஜபக்சே, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இடைக்கால அதிபராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கடந்த வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார். ஆனால் அவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி நாடெங்கும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில் இலங்கையில் அவசரநிலையை பிறப்பிப்பதற்கான உத்தரவை இடைக்கால அதிபர் ரணில் நேற்று … Read more