16வது சுற்று பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வ, முன்னேற்றம் சார்ந்த முறையில் இருந்தது; இந்தியா-சீனா கூட்டறிக்கையில் தகவல்

புதுடெல்லி, கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறல் நடவடிக்கையால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் நீடித்து வருகிறது. இதற்கு தீர்வு காண்பதற்காக இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் 15 சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளின் பலனாக எல்லையில் சில சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இருதரப்பும் படைகளை திரும்பப்பெற்றன. எனினும் டெம்சோக், தேப்சாங் உள்ளிட்ட பகுதிகளில் படைகளை வாபஸ் பெற சீனா மறுத்து வருகிறது. இந்த நிலையில் இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான … Read more

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியை சேர்ந்த வீரர்கள் இருவர் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

கள்ளக்குறிச்சி, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தினேஷ் ராம்டின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திங்கள்கிழமை அறிவித்தார். ராம்டின் தனது கடைசி போட்டியை கடந்த டி20ஐ டிசம்பரில் 2019 இல் விளையாடினார். அவர் 74 டெஸ்ட், 139 ஒருநாள் மற்றும் 71 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடங்கினார், ஜூலை 2005 இல் கொழும்பில் இலங்கைக்கு எதிராக அறிமுகமானார். 2014 இல் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு, … Read more

மாலத்தீவில் இருந்து சென்ற கோத்தபயவுக்கு சிங்கப்பூரிலும் எதிர்ப்பு

சிங்கப்பூர், சொந்த நாட்டில் எதிர்ப்பு உச்சமடைந்த நிலையில் இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவுக்கு தப்பியோடினார். ஆனால் அங்கும் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியதால், சிங்கப்பூரை கடந்த வியாழக்கிழமை சென்றடைந்தார். அங்கிருந்தபடியே வெள்ளிக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் கோத்தபய ராஜபக்சேயை அனுமதித்ததற்கு சிங்கப்பூரிலும் எதிர்ப்பு நெருப்பு கொழுந்துவிடத் தொடங்கியுள்ளது. அவரது வருகைக்கு எதிராக ஓர் ஆன்லைன் மனுவை உருவாக்கியுள்ள தொழிலதிபர் ரேமண்ட், கோத்தபய மீது சிங்கப்பூர் போலீசில் பணமோசடி புகாரும் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார். அவரது ஆன்லைன் … Read more

குஜராத்: சரக்கு ரெயிலின் 16 பெட்டிகள் தடம் புரண்டன

தகோத், குஜராத்தின் தகோத் மாவட்டத்தில் உள்ள மங்கள் மகுடி ரெயில் நிலையம் அருகே இன்று அதிகாலை 1 மணியளவில் சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த ரெயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. ரத்லம்-மும்பைக்கு இடைப்பட்ட பகுதியில் ரெயிலின் 16 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. ரெயிலின் மீது செல்லும் மின் கம்பிகளும் உடைந்துள்ளன. இதனால் ரத்லம் முதல் மும்பை வரையிலான இரு பகுதியிலும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. ரெயில் சேவை இன்று நண்பகல் 12 … Read more

பி.வி.சிந்து, குகேஷ், பிரக்ஞானந்தாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- தனது முதல் சிங்கப்பூர் ஓபன் வெற்றியை பதிவு செய்துள்ள நமது ஊக்கமிகு பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு எனது பாராட்டுகள். இதே ஆற்றலோடும், உத்வேகத்தோடும் பர்மிங்காம் காமன்வெல்த் போட்டிகளிலும் விளையாட வாழ்த்துகிறேன். அடிவானத்தில் ஒரு புதிய விண்மீனாக தோன்றியுள்ளார், கிராண்ட்மாஸ்டர் குகேஷ். செஸ் விளையாட்டில் 2700 இ.எல்.ஓ. தரப்புள்ளிகள் என்ற சிறப்பான மைல்கல்லை அவர் அடைந்திருக்கிறார். இது மிகவும் அரிய சாதனை. எதிர்காலத்தில் சென்னையை … Read more

வங்காள தேசத்தில் இந்து மக்கள் வீடு, கடைகள் சூறையாடல்; தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடும் கண்டனம்

டாக்கா, வங்காள தேசத்தில் இந்து மக்கள் வசிக்கும் பகுதியில் புகுந்து, அவர்களது வீடுகள், கடைகளை, கொள்ளையடித்தும் மற்றும் சூறையாடியும் சென்ற சம்பவத்திற்கு அந்நாட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. மதசார்பற்ற ஒரு நாட்டில் சமூக கலவரங்களை எந்த சூழ்நிலையிலும் ஏற்று கொள்ள முடியாது என்றும் தெரிவித்து உள்ளது. இதுபற்றி வெளியிடப்பட்டு உள்ள உத்தரவில், விரும்பத்தகாத தாக்குதலை தடுக்கும் சூழலை ஏற்படுத்த தவற விடப்பட்டதா? மற்றும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதில் போலீசார் … Read more

இலங்கை விவகாரத்தில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம்: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி, அண்டை நாடான இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் புரட்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகி உள்ளார். இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்று உள்ளார். அங்கு வருகிற 20-ந்தேதி புதிய அதிபர் தேர்தல் நடக்கிறது. 1978-ம் ஆண்டுக்குப்பிறகு முதல் முறையாக நாடாளுமன்றம் மூலம் புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். பொருளாதார நெருக்கடி காரணமாக முடங்கியுள்ள இலங்கைக்கு, இந்தியா உதவிக்கரம் நீட்டி வருகிறது. அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள், உணவுப்பொருட்கள், எரிபொருள் என ஏராளமான … Read more

ஒருநாள் போட்டிகளில் முதல் சதத்தை பதிவு செய்த ரிஷப் பண்ட்…!

மான்செஸ்டர், கடந்த ஆண்டு கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட இங்கிலாந்து-இந்தியா இடையேயான 5-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதனை தொடர்ந்து நடந்த டி20 தொடரில் 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா வென்றது. இதையடுத்து, இந்தியா – இங்கிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில், 1-1 என இரு அணிகளும் சம நிலையில் இருந்த நிலையில் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. மான்செஸ்டர் நகரின் … Read more

இலங்கையில் மீண்டும் அவசரநிலை அமல்..!!

கொழும்பு, இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாத ஆட்சியாளர்களுக்கு எதிராக பொதுமக்கள் கிளர்ச்சி செய்து வருகின்றனர். இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே சமீபத்தில் பதவி விலகினார். இதனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இடைக்கால அதிபராக பதவியேற்று உள்ளார். புதிய அதிபருக்கான தேர்தல் 20-ந்தேதி நடக்கிறது. கோத்தபய ராஜபக்சே பதவி விலகினாலும், எதிர்ப்பை கைவிடாத போராட்டக்காரர்கள் இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராகவும் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். நாட்டின் ஒட்டுமொத்த அரசு அமைப்பையும் மாற்றும் வரை தங்கள் போராட்டம் … Read more

பாக்கெட் உணவு பொருட்களுக்கு இன்று முதல் ஜி.எஸ்.டி. வரி

புதுடெல்லி, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த மாதம் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஜி.எஸ்.டி. விதிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் சில பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. விகிதமும் மாற்றியமைக்கப்பட்டது. இந்த புதிய வரி விதிப்பு நடவடிக்கைகள் அனைத்தும் இன்று (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகின்றன. பாக்கெட் உணவுகள் இதில் முக்கியமாக பாக்கெட்டில் அடைக்கப்பட்ட மற்றும் லேபிள் ஒட்டி விற்கப்படும் இறைச்சி (உறைந்தது தவிர), மீன், பனீர், தேன், … Read more