கேரளாவில் குரங்கு அம்மை பரவல் தடுக்க தீவிர கண்காணிப்பு

திருவனந்தபுரம், கேரளாவில் ஒருவருக்கு பாதிப்புள்ள நிலையில் குரங்கு அம்மை பரவல் தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. 5 மாவட்டங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. ஆப்பிரிக்க நாடுகள் தொடங்கி ஐரோப்பிய நாடுகள் வரை கதிகலங்க வைத்து வருகிற குரங்கு அம்மை, நமது நாட்டையும் விட்டு வைக்கவில்லை. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவுக்கு வந்த ஒரு மலையாளிக்கு இந்த நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அதிர வைத்துள்ளது. அந்த மாநிலத்தில் இந்த நோய் பரவலை தடுக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் … Read more

முன்னாள் டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது

மாஸ்கோ, ரஷியாவின் முன்னாள் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா, கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது 35 வயதாகும் மரியா ஷரபோவாவிற்கு கடந்த 1-ந்தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் தனது கணவர் கில்கெஸ் மற்றும் பிறந்து 2 வாரங்களான குழந்தை தியோடர் ஆகியோரது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து … Read more

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறைந்தது

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வழியாக உரையாற்றினார். கடந்த இம்ரான்கான் அரசில் இருந்து சிக்கல்கள் நிறைந்த பொருளாதாரத்தை நாடு பெற்றிருக்கிறது என கூறி உரையைத் தொடங்கினார். சர்வதேச நிதியத்துடன் (ஐஎம்எப்) செய்து கொண்ட ஒப்பந்தத்தை முந்தைய அரசு காலில் போட்டு மிதித்து எங்களுக்காக கண்ணி வெடிகளைப் போட்டது என்று சாடினார். இம்ரான்கான் அரசு தனது கடைசி வாரங்களில் அரசின் கஜானாக்கள் காலியாக இருந்தாலும் எரிபொருட்கள் விலையைக் குறைத்து, எங்களது … Read more

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு

திருவனந்தபுரம், கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் நாளில் திறக்கப்படுவது வழக்கம்.அந்த வகையில் ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.இன்று தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கருவறையை திறந்து வைக்கிறார் இன்றைய தினம், மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது என்பதால் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) … Read more

பாகிஸ்தான்-இலங்கை மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இன்று தொடக்கம்

காலே, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டில் விளையாடுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட இந்த தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி காலேயில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவான நிலையில் உள்ளது. திமுத் கருணாரத்னே தலைமையிலான இலங்கை அணி அண்மையில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற உற்சாகத்துடன் களம் இறங்குகிறது. சரிசம பலத்துடன் இரு … Read more

இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடுகிறது

கொழும்பு, இலங்கை எதிர்கொண்டு வரும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, ஆட்சியாளர்களின் அரியணையை பறித்து வருகிறது. மக்கள் புரட்சியால் அவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் ஏற்கனவே பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, கடந்த மே மாதம் நடந்த மக்களின் போராட்டம் மற்றும் வன்முறையால் பதவி விலகினார். புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே ஆட்சிக்கு வந்தார். ஆனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் ரணிலுக்கு எதிராகவும் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். இதில் கடந்த 9-ந்தேதி பெரும் … Read more

திருப்பதி: ஆட்டோ, கார் டிரைவர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கினார் மந்திரி ரோஜா

திருப்பதி: முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன்மோகன்ரெட்டி பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு செயல்படுத்தி வருகிறார். அதன்படி ஆட்டோ, கார் டிரைவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கி வருகிறார். அந்த நிதி அவர்களின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கு வாகன மித்ரா திட்டத்தின் கீழ் ஆட்டோ, கார் டிரைவர்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்ட நிகழ்ச்சியை ேநற்று முதல்-மந்திரி விசாகப்பட்டினத்தில் தொடங்கி வைத்தார். அந்தத் திட்ட தொடக்க நிகழ்ச்சி திருப்பதியில் உள்ள மாவட்ட … Read more

வங்காளதேச கிரிக்கெட் வீரருக்கு 10 மாதம் விளையாட தடை- ஐ.சி.சி. நடவடிக்கை

துபாய், வங்காளதேச கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹிதுல் இஸ்லாம். இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பானிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் அறிமுகமானார். இந்த நிலையில் ஷாஹிதுல் இஸ்லாம் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) விதிப்படி தனது மாதிரியை பரிசோதனைக்கு ஷாஹிதுல் இஸ்லாம் வழங்கியிருந்தார். அதில் தடை செய்யப்பட்ட குளோமிபென் என்ற மருந்து பயன்படுத்தியதாக தெரியவந்தது. இதனால் அவருக்கு 10 மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐ.சி.சி. வெளியிட்ட … Read more

இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு ரிஷி சுனக்குடன் நேருக்கு நேர் மோதப்போவது யார்?

லண்டன், இங்கிலாந்து நாட்டில் பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமாவால், அடுத்த பிரதமர் பதவி போட்டி சூடு பிடித்துள்ளது. அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்க கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்களிடையே நடைபெற்ற முதல் இரு கட்ட வாக்கெடுப்புகளில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக் முன்னிலை பெற்றிருக்கிறார். அவருக்கு அடுத்த நிலையில், வர்த்தக மந்திரி பென்னி மோர்டான்ட், வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ், முன்னாள் மந்திரி கெமி படேனோக், டாம் டுகெந்தெட் எம்.பி. ஆகியோர் உள்ளனர். அவர்கள் … Read more

உ.பி: புந்தேல்கண்ட் விரைவுச் சாலையை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

லக்னோ, உத்தரபிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புந்தேல்கண்ட் விரைவுச்சாலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். உத்தரபிரதேச மாநிலத்தில் புதிதாக நான்கு வழி விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச விரைவுச்சாலை தொழில் வளர்ச்சி ஆணையம் சார்பில் இந்த விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 29-ந் தேதி இந்த சாலைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அதன்பின் பணிகள் தொடங்கப்பட்டு 28 மாதங்கள் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. சுமார் 14 ஆயிரத்து … Read more