செஸ் ஒலிம்பியாட் ஜோதி 18-ந் தேதி கர்நாடகம் வருகை

பெங்களூரு, 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் வருகிற 28-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி இந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதியை பிரதமர் மோடி டெல்லியில் கடந்த ஜூன் மாதம் 19-ந் தேதி தொடங்கி வைத்தார். இந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி நாடு முழுவதும் 75 இடங்களில் சுற்றி சென்னையை அடைய உள்ளது. இந்த நிலையில் இந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி வருகிற 18-ந் தேதி கர்நாடகம் … Read more

ரூ.4 கோடியில் 40 அறுவை சிகிச்சைகள்: அமெரிக்க மாடல் அழகி போல மாற நினைத்த பிரேசில் அழகிக்கு நேர்ந்த விபரீதம்

பிரேசிலியா, சினிமா மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளில் பிரபலமாக இருக்கும் நபர்களை போல தங்களின் நடை உடை பாவனைகளை மாற்றி வலம் வரும் சில ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று தங்களை கவர்ந்த பிரபலங்களைப் போல அச்சு அசலாக அப்படியே மாற வேண்டும் என நினைத்து அதிகம் மெனக்கெடுவதும் அவ்வப்போது நடக்கிறது. அப்படி பிரேசிலை சேர்ந்த மாடல் அழகி ஒருவர், உலகப்புகழ் பெற்ற அமெரிக்க மாடல் அழகியாக கிம் … Read more

நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கான வியூகம்: காங். மூத்த தலைவர்களுடன் சோனியாகாந்தி ஆலோசனை

புதுடெல்லி, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பின்பற்ற வேண்டிய வியூகம் வகுப்பது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சோனியாகாந்தி ஆலோசனை நடத்தினார். சமையல் கியாஸ் விலை உயர்வு பிரச்சினையை எழுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், வருகிற 18-ந் தேதி தொடங்குகிறது. அடுத்த மாதம் 12-ந் தேதி முடிவடைகிறது. இந்நிலையில், இந்த தொடரில் பின்பற்ற வேண்டிய வியூகத்தை வகுப்பது தொடர்பாக ஆலோசிக்க நாடாளுமன்ற காங்கிரஸ் வியூகம் வகுக்கும் குழுவின் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி … Read more

மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு; சின்னியம்பாளையத்தில் நாளை மறுநாள் நடக்கிறது

ஈரோடு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகளில் பங்குகொள்ள ஈரோடு மாவட்ட அணிக்கு 16 வயது மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் தேர்வு நடைபெற உள்ளது. 19 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கான தேர்வு வருகிற 17-ந்தேதி (நாளை மறுநாள்) காலை 7 மணிக்கும், 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேர்வு பிற்பகல் 3 மணிக்கும், சின்னியம்பாளையத்தில் உள்ள கே.சி.எஸ். கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. விருப்பம் உள்ளவர்கள் பிறப்பு சான்றிதழ், வெள்ளை சீருடை மற்றும் … Read more

இத்தாலி பிரதமரின் ராஜினாமாவை ஏற்க மறுத்த அதிபர்

ரோம், இத்தாலியில் மரியோ டிராகி பிரதமராக பதவி வகித்து வருகிறார். கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கடந்த ஆண்டு அதிபர் செர்ஜியோ மெட்டரெல்லாவால், மரியோ டிராகி பிரதமராக நியமனம் செய்யப்பட்டார். இத்தாலியில் பொருளாதார நிலை தற்போது மிகவும் மோசடைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் கூட்டணி கட்சிகளால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து, பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து, மரியோ டிராகி திடீரென பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். தனது ராஜினாமா கடிதத்தை அதிபருக்கு … Read more

உலகின் மகத்தான 50 இடங்கள் பட்டியலில் 'ஆமதாபாத்' – அமித்ஷா பெருமிதம்

புதுடெல்லி, இந்தியாவின் முதலாவது யுனெஸ்கோ உலக பாரம்பரிய நகரான ஆமதாபாத், டைம் பத்திரிகையால் “2022-ம் ஆண்டின் உலகின் 50 மகத்தான இடங்கள்” பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பெருமிதம் அடைந்து ‘டுவிட்டரில்’ கருத்து பதிவிட்டு உள்ளார். அதில், “இந்தியாவின் முதலாவது யுனெஸ்கோ உலக பாரம்பரிய நகரான ஆமதாபாத், உலகின் 50 மகத்தான இடங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது ஒவ்வொரு இந்தியருக்கும், குறிப்பாக குஜராத் மக்களுக்கு மிகுந்த பெருமைக்குரிய விஷயம் ஆகும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்” … Read more

உலக தடகள சாம்பியன்ஷிப்: அமெரிக்காவில் இன்று தொடக்கம்

யூஜின், 18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 24-ந்தேதி வரை நடக்கிறது. தடகளத்தில் ஒலிம்பிக்குக்கு அடுத்து மிகப்பெரிய போட்டி இது தான். 49 வகையான பந்தயங்களில் 192 நாடுகளைச் சேர்ந்த 1,972 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மற்றும் பெலாரசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தலைமையில் 22 பேர் … Read more

பொருளாதார நெருக்கடியால் போராட்டம் – இலங்கை தலைவர்களுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் கோரிக்கை

நியூயார்க், இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் இலங்கை நிலவரம் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “இலங்கை நிலவரத்தை தொடர்ந்து கவனித்து வருகிறேன். கலவரத்திற்கான காரணம் மற்றும் போராட்டக்காரர்களின் குறைகளை சீர்செய்வது மிகவும் முக்கியம். அமைதியான முறையில் ஜனநாயக மாற்றத்திற்கு சமரசம் செய்யுமாறு அனைத்து கட்சித் தலைவர்களையும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். … Read more

மூக்கு வழியாக செலுத்தும் மருந்தால், கொரோனா தாக்கம் 94 சதவீதம் குறையும்..!! – ஆய்வில் கண்டுபிடிப்பு

புதுடெல்லி, கொரோனாவை குணப்படுத்த மூக்கு வழியாக செலுத்தும் ‘ஸ்பிரே’ மருந்துக்கு இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில், ‘பாபிஸ்பிரே’ என்ற பிராண்ட் பெயரில், இந்த மருந்து கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த மருந்தின் பலன்கள் குறித்து மும்பையை சேர்ந்த மருந்து உற்பத்தி நிறுவனமான ‘கிளன்மார்க்’ ஆய்வு நடத்தியது. தடுப்பூசி செலுத்திய மற்றும் தடுப்பூசி செலுத்தாத 306 பேரை பயன்படுத்தி ஆய்வு நடத்தப்பட்டது. இவர்கள் லேசான கொரோனா அறிகுறிகளுடன் இருந்தனர். நாட்டில் … Read more

டி.என்.பி.எல். கிரிக்கெட்: நெல்லை-திருச்சி அணிகள் இன்று மோதல்

கோவை, 8 அணிகள் இடையிலான 6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கோவையில் நடந்து வருகிறது. போட்டியில் நேற்று ஓய்வு நாளாகும். இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 19-வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ்-திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை அணி தொடர்ச்சியாக 5 வெற்றிகளை குவித்து அசைக்க முடியாத அணியாக விளங்குகிறது. அதே உத்வேகத்துடன் இன்றைய ஆட்டத்திலும் வாகை சூடி ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பை உறுதி செய்ய நெல்லை அணி … Read more