உக்ரைனின் 2 மாகாணங்களை சுதந்திர நாடுகளாக அங்கீகரித்த வடகொரியா

பியாங்யாங், உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷிய எல்லையில் அமைந்துள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய 2 மாகாணங்களில் ரஷிய வம்சாவளியினர் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அந்த மாகாணங்களை சேர்ந்த கிளர்ச்சிக் குழுக்கள், பல ஆண்டுகளாக உக்ரைன் அரசுக்கு எதிராக ஆயுத போராட்டம் நடத்தி வருகின்றன. இதற்கு ரஷியா ஆதரவு அளித்து வருகிறது. இந்த சூழலில் ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன்பு உக்ரைனின் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் … Read more

உத்தரகாண்ட்: பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவித்தொகை – முதல்-மந்திரி அறிவிப்பு

டேராடூன், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி பல்கலைக்கழகங்களில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 2 உதவித்தொகை திட்டங்களை முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி நேற்று அறிமுகப்படுத்தினார். அதன்படி, சிறந்த மாணவர்களுக்கு ‘ஜோதி உதவித்தொகை’ மற்றும் திறமையான விளையாட்டு வீரர்களுக்கு ‘விஜய் உதவித்தொகை’ என்ற 2 உதவித்தொகை திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி கூறுகையில், “பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவது மட்டுமல்லாமல், அருகிலுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையிலும் மாற்றங்களை கொண்டுவருகின்றன. அவை … Read more

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் – தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா

லண்டன், இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. லண்டன் ஓவலில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் போட்டி புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடக்கிறது. முதல் ஆட்டத்தில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி ஆகியோரது ஆக்ரோஷமான பந்து … Read more

அதிநவீன ஏவுகணைகள் மூலம் தாக்குதல்: ஒரே நாளில் 420 உக்ரைன் வீரர்கள் கொன்று குவிப்பு

மாஸ்கோ, உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 130 நாட்களை கடந்தும் உக்கிரமாக தொடர்கிறது. கிழக்கு உக்ரைனை கைப்பற்றுவதற்கான போரில் வேகமாக முன்னேறி வரும் ரஷிய படைகள் நாட்டின் பிற பகுதிகளிலும் தொடர்ந்து தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் தெற்கு உக்ரைனில் உள்ள மைகோலைவ் நகரில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதல்களில் ஒரே நாளில் 420 உக்ரைன் வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து ரஷிய ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மைக்கோலைவ் … Read more

பாகிஸ்தான் பத்திரிகையாளரை இந்தியாவுக்கு அழைக்கவில்லை – முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மறுப்பு

புதுடெல்லி, பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளரான நஷ்ரத் மிஸ்ரா என்பவர், கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது 5 முறை இந்தியா வந்ததாகவும், இங்கிருந்து திரட்டிய முக்கிய தகவல்களை அந்த நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு வழங்கியதாகவும் கூறியுள்ளதாக தெரிகிறது. மேலும் அப்போதைய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் அழைப்பின் பேரில் இந்தியா வந்ததாகவும், இந்தியாவில் அவரை சந்தித்ததாகவும் அவர் கூறியிருப்பதாகவும் பாஜக கூறியுள்ளது. பாஜக செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா இந்த தகவலை வெளியிட்டு, காங்கிரசையும், ஹமீது … Read more

'எல்.பி.டபிள்யூ. விதிமுறையில் மாற்றம் தேவை' – ரவிச்சந்திரன் அஸ்வின்

மும்பை, சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சில பேட்ஸ்மேன்கள் வித்தியாசமான ஷாட்டுகளை அடிக்க முயற்சிப்பது உண்டு. வலது கை பேட்ஸ்மேன் இடது கை பேட்ஸ்மேன் போன்றோ, இடக்கை வீரர் வலதுகை வீரர் போன்றோ திடீரென திரும்பி நின்று பந்தை அடித்து விரட்டுவார்கள். இன்னும் சிலர் உடலை திருப்பாமல் பேட்டை பிடிக்கும் ஸ்டைலை மட்டும் மாற்றிக்கொண்டு ஆடுவார்கள். பேட்டர்கள் இது போன்று ஆடுவது சகஜமாகி விட்டதால் எல்.பி.டபிள்யூ. விதிமுறைகளில் திருத்தம் தேவை என்று இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த சுழற்பந்து … Read more

உலகளாவிய நிலவர பட்டியல்: பாலின இடைவெளியில் மிக மோசமான நாடாக ஆப்கானிஸ்தான்

இஸ்லாமாபாத், 146 நாடுகளில் பாலின இடைவெளி அதிகமில்லாத முதல் 5 நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து, பின்லாந்து, நார்வே, நியூசிலாந்து, சுவீடன் ஆகியவை இடம் பிடித்துள்ளன.மிக மோசமான பாலின இடைவெளி உள்ள 5 நாடுகள் பட்டியலில் முதல் இடத்தில் தலீபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தான் உள்ளது. பாகிஸ்தான் இரண்டாவது இடம் வகிக்கிறது. அடுத்த இடங்களை காங்கோ, ஈரான், சாத் பிடித்துள்ளன.தற்போது பாலின இடைவெளியின் அதிகபட்ச அளவு 68.1 சதவீதமாக உள்ளது.இந்த இடைவெளி நீங்கி ஆண், பெண் பாலின சம நிலை … Read more

பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதை விட நிர்மலா சீதாராமனுக்கு கிரகங்களில் தான் ஆர்வம் – காங்கிரஸ் சொல்கிறது

புதுடெல்லி, அமெரிக்க ‘நாசா’ அமைப்பின் வெப் தொலைநோக்கி எடுத்த யுரேனஸ், புளுட்டோ, வியாழன் ஆகிய கிரகங்களின் புகைப்படங்களை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இந்தநிலையில், இதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கவுரவ் வல்லப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- இந்தியாவில் அதிகரித்து வரும் பணவீக்கம் குறித்த புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது பற்றிய திட்டத்துடன் நிதி மந்திரி வருவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அவரோ … Read more

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: சிந்து, சாய்னா 2-வது சுற்றுக்கு தகுதி

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-15, 21-11 என்ற நேர்செட்டில் பெல்ஜியத்தின் லியானி டானை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் 21-18, 21-14 என்ற நேர் செட்டில் சக நாட்டவரான மாளவிகா பான்சோத்தை வீழ்த்தி இந்திய ஓபன் போட்டியில் அவரிடம் கண்ட … Read more

கோத்தபய மாலத்தீவு தப்பி ஓட்டம்: இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமனம்

கொழும்பு, இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, அந்த நாட்டின் 2 கோடியே 20 லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. மக்கள் போராட்டம் அன்னியச்செலாவணி இல்லாமை, விஷம்போல நாளும் ஏறிவரும் விலைவாசி, எரிபொருட்கள் தட்டுப்பாடு, தொடர் மின்வெட்டு என பிரச்சினைகள் வரிசை கட்டி நிற்க, இனியும் பொறுப்பதற்கு இல்லை என்ற நிலையில் இலங்கை மக்கள் வெகுண்டெழுந்தனர். அவர்கள் வீதிகளில் இறங்கி போராடத்தொடங்கினர். நாட்டை இப்படியொரு நெருக்கடியில் தள்ளிவிட்டதற்கு ராஜபக்சே குடும்பத்தார்தான் காரணம் என ஒருமித்த குரலில் … Read more