நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் – புதிய பட்டியல்

புதுடெல்லி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. இந்தநிலையில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அதில் ஆங்கில வார்த்தைகளும், இந்தி வார்த்தைகளும் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுகேட்பு ஊழல், கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளாக சேர்க்கப்பட்டுள்ளன. இரட்டை வேடம், பயனற்றது, … Read more

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் சிறப்பாக செயல்படுவேன் – நீரஜ் சோப்ரா

புதுடெல்லி, 18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் யூஜின் நகரில் நாளை தொடங்கி 24-ந்தேதி வரை நடக்கிறது. இதில் 22 பேர் கொண்ட இந்திய தடகள அணி ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா தலைமையில் பங்கேற்கிறது. இதையொட்டி அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, உலக தடகள போட்டிக்கு நான் நன்றாக தயாராகி உள்ளேன். எனது நம்பிக்கையும் உயர்ந்த நிலையில் இருக்கிறது. சமீபத்தில் நான் 3 போட்டிகளில் கலந்து கொண்டேன். அவற்றில் இரண்டில் எனது தனிப்பட்ட … Read more

ஆப்கானிஸ்தானில் 2 நாட்களாக பெய்த கனமழை – 39 பேர் உயிரிழப்பு

காபூல், ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹர் மற்றும் நூரிஸ்தான் மாகாணங்களில் கடந்த இரு தினங்களாக இடைவிடாது கனமழை கொட்டியது. இதனால் அவ்விரு மாகாணங்களிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. சாலைகள், மேம்பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. கனமழை, வெள்ளத்தால் அங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கனமழை மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து பல இடங்களில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் பல வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. இந்த … Read more

கொச்சியில் குப்பையில் கிடந்த தேசிய கொடி – போலீசார் வழக்குப்பதிவு

கொச்சி, கேரள மாநிலம் கொச்சியின் புறநகர் பகுதியில் குப்பையில் இருந்து தேசிய கொடி மற்றும் இந்திய கடலோர காவல்படையின் கொடிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து கேரள போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தேசியக் கொடி மற்றும் கடலோர காவல்படையின் கொடிகள் தவிர, கடலோர காவல்படையின் லைப் ஜாக்கெட்டுகள் மற்றும் ரெயின்கோட்டுகள் ஆகியவையும் இருந்துள்ளன. இதைக் கண்டறிந்த உள்ளூர் மக்கள் ஹில்பேலஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து குப்பையில் இருந்த பொருட்களை மீட்ட போலீசார், … Read more

இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய சாதனை

லண்டன், இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில் ஒருநாள் தொடரையும் வெல்லும் நோக்கத்தில் இந்திய அணி களமிறங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்தின் 10 விக்கெட்டுகளையும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களே (பும்ரா-6, ஷமி-3, பிரசித் கிருஷ்ணா-1) சாய்த்தனர். ஒரு நாள் கிரிக்கெட்டில் இன்னிங்சின் 10 விக்கெட்டுகளையும் … Read more

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு தப்பியோட்டம்…!

கொழும்பு, இலங்கையில், கடந்த 9-ந் தேதி அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்து சூறையாடினர். போராட்டக்காரர்கள் வருவதற்கு முன்பு அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து வெளியேறினார். அவர் நாட்டை விட்டு தப்பி விட்டதாக தகவல் வெளியானது. ஆனால், கோத்தபய இலங்கையில்தான் இருப்பதாக சபாநாயகர் தெரிவித்தார். இதனிடையே, அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து தப்பிச்சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானப்படை விமானம் மூலம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே … Read more

கேரளாவில் வரதட்சணை கொடுமை, சாதி பாகுபாட்டால் பெண் தற்கொலை; கணவர் உள்பட 3 பேர் கைது

கொச்சி, கேரளாவின் திருச்சூரில் குன்னம்குளம் பகுதியில் வசித்து வந்த தம்பதி சுமேஷ் மற்றும் சங்கீதா. கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரலில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அவர்களில் சங்கீதா தலித் பிரிவை சேர்ந்தவர். சுமேஷ் ஈழவா பிரிவை சேர்ந்தவர். இந்நிலையில், எர்ணாகுளம் மத்திய போலீசார் கூறும்போது, சங்கீதாவை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியும், சாதி பாகுபாடு செய்தும் வந்துள்ளனர். இந்த கொடுமை பொறுக்க முடியாமல், அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். திருமணம் முடிந்த 2 வாரத்தில் கொச்சியில் … Read more

நியூயார்க்கில் தொடங்கும் அமெரிக்க ஓபன் டென்னிசில் ஜோகோவிச் களம் காணுவாரா?

பெல்கிரேடு, சமீபத்தில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் 7-வது முறையாக மகுடம் சூடிய செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 29-ந்தேதி நியூயார்க்கில் தொடங்கும் அமெரிக்க ஓபன் டென்னிசில் களம் காணுவாரா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தொடர்ந்து மறுத்து வரும் ஜோகோவிச், ‘தற்போதைய சூழலில் நான் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவுக்கு (கொரோனா தடுப்பூசி போட்டால் தான் இந்த நாடுகளுக்குள் நுழைய முடியும்) செல்ல முடியாது. ஆனால் அமெரிக்க ஓபனில் விளையாட … Read more

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தாக்குதல் திறனை ராணுவம் குறைத்து விட்டது; அமெரிக்க அதிபர் பைடன்

வாஷிங்டன், சிரியாவின் வடமேற்கே ஜிண்டாய்ரிஸ் நகருக்கு வெளியே அமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஒன்று வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது. இதில், டாப் 5 ஐ.எஸ். தலைவர்களில் ஒருவரான மற்றும் பயங்கரவாத குழுக்களின் தலைவரான மஹெர் அல்-அகல் கொல்லப்பட்டு உள்ளார். இதேபோன்று, நடந்த மற்றொரு தாக்குதலில், அல்-அகலுடன் நெருங்கிய தொடர்புடைய ஐ.எஸ். மூத்த அதிகாரி ஒருவர் படுகாயமடைந்து உள்ளார். எனினும், இந்த வான்வழி தாக்குதலில் பொதுமக்களில் யாரும் கொல்லப்படவில்லை என தொடக்க கட்ட ஆய்வு தெரிவித்து உள்ளது. இந்த தாக்குதலால், … Read more

ஆர்.ஏ.புரம் குடிசைப்பகுதியை 4 வாரங்களில் இடித்து அகற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடெல்லி, ஆர்.ஏ.புரம் கோவிந்தசாமி நகர், இளங்கோ தெருவில் உள்ள குடிசைப்பகுதியை 4 வாரங்களுக்குள் இடித்து அகற்றுமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி கான்வில்கர் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது தமிழக அரசின் தரப்பில் ஆஜரான கூடுதல் சாலிசிட்டர் ஜெனரல், ஆர்.ஏ.புரம் குடிசைப்பகுதியை இடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், தீ குளிப்பு போன்ற அசம்பாவித சம்பவம் நிகழ்ந்து விட்டதால், குடிசைகளை அப்புறப்படுத்த அக்டோபர் வரை அவகாசம் அளிக்க வேண்டும் என்று வாதிட்டார். … Read more