உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

சாங்வான், உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி தென்கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 10 மீட்டர் ஏர்ரைபிள் கலப்பு அணிகள் பிரிவின் தகுதி சுற்றில் இந்தியாவின் மெகுலி கோஷ்-சாகு துஷார் மானே இணை 634.4 புள்ளிகள் குவித்து முதலிடத்தை தனதாக்கி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ஹங்கேரியின் முன்னணி ஜோடியான இஸ்வான் பெனி-எஸ்தர் மெஸ்ஜாரோஸ் 630.3 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்தது. இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய ஜோடி, ஹங்கேரி இணையுடன் மோதுகிறது. … Read more

அத்தியாவசிய சேவைகளுக்காக கூடுதலாக 1.7 பில்லியன் டாலர் நிதியுதவி பெற்றது உக்ரைன்…!

கீவ், உக்ரைன் மீது ரஷியா 139-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ரஷியாவை எதிர்த்து தொடர்ந்து போராடி வரும் உக்ரைனில் இருந்து பல மருத்துவ ஊழியர்கள் வெளியேறிய நிலையில், சில மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ள்ன. மற்ற மருத்துவமனைகள் குண்டுவீசி தாக்கப்பட்டுள்ளன. உக்ரைனில் இருக்கும் சுகாதாரப் பணியாளர்கள் இக்கட்டான சூழ்நிலையில் தங்கள் வேலையைச் செய்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்கா மற்றும் உலக வங்கியிடமிருந்து கூடுதலாக 1.7 பில்லியன் டாலர் நிதி உதவியை … Read more

தேசிய நியமன ஆணைய பணிகளுக்கு இனி ஆன்லைனில் தேர்வு – மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் தகவல்

பெங்களூரு, பெங்களூருவில் நேற்று நடைபெற்ற நல்லாட்சி நிர்வாகம் குறித்த மாநாட்டில் மத்திய அறிவியல்-தொழில்நுட்பம் மற்றும் மற்றும் பொது குறைதீர் துறை இணை மந்திரி ஜிதேந்திரசிங் கலந்து கொண்டு பேசியதாவது:- “நாட்டில் மோடி பிரதமரான பிறகு கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சான்றிதழ்களின் உறுதி தன்மையை நிரூபிக்க உயர் அதிகாரிகளிடம் பிரமாண பத்திரம் பெற வேண்டும் என்று இருந்தது. அதை பிரதமர் மோடி பதவி ஏற்று மூன்றே மாதத்தில் ரத்து செய்தார். அது ஒரு புரட்சிகரமான … Read more

'ரோகித் சர்மா சரியாக ஆடாத போது யாரும் பேசுவதில்லை' – கவாஸ்கர்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, இந்திய கேப்டன் ரோகித் சர்மா ரன் எடுக்காத போது அது குறித்து யாரும் பேசுவதில்லை. ஆனால் விராட் கோலி குறித்து மட்டும் தொடர்ந்து விமர்சிக்கிறார்கள். அது ஏன் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இங்கு எல்லா வீரர்களும் ஒன்று தான். ‘பார்ம்’ என்பது தற்காலிகமானது. தரமும், திறமையும் தான் நிரந்தரமானது. நம்மிடம் மிகச்சிறந்த தேர்வு குழு இருக்கிறது. 20 … Read more

இங்கிலாந்து புதிய பிரதமர் தேர்தல்; வேட்பாளர்கள் எண்ணிக்கை 8 ஆக குறைவு

லண்டன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அமைச்சரவையில் ஊழல் புகார் எழுந்தது. முன்னாள் துணை தலைமை கொறடா கிறிஸ்டோபர் பின்சர் தொடர்புடைய சமீபத்திய ஊழலால் அக்கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, இங்கிலாந்து சுகாதார மந்திரி சாஜித் ஜாவித், இந்திய வம்சாவளி எம்.பி.யான ரிஷி சுனாக் உள்ளிட்ட அரசின் உயர் பதவியில் இருந்த 30 பேர்பதவி விலகினர். மொத்தம் 58 மந்திரிகள் அரசில் இருந்து வெளியேறினர். இதனால், பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலக … Read more

இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும் – வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்

திருவனந்தபுரம், கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார். இதுதொடர்பாக, திருவனந்தபுரத்தில் மந்திரி ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;- “இலங்கையின் தற்போதைய நிலைமை பதற்றமானது மற்றும் சிக்கலானது. இந்தியாவின் அண்டை நாட்டினர் என்பதனால் இலங்கை மக்களுக்கு நமது ஆதரவை அளிக்க வேண்டும். அவர்களின் வாழ்க்கையில் மிகவும் கடினமான கட்டத்தை கடக்க அவர்களுக்கு உதவ நாம் விரும்புகிறோம். இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும். விரைவில் … Read more

பெண்கள் உலக கோப்பை ஆக்கி – இந்திய அணிக்கு முதல் வெற்றி

தெரசா, 15-வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி நெதர்லாந்து மற்றும் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த 9 முதல் 16-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி, கனடாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் வழக்கமான நேரம் முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. கனடா அணியில் மாட்லின் செக்கோ 11-வது நிமிடத்திலும், இந்திய தரப்பில் சலிமா டெடி 58-வது நிமிடத்திலும் கோல் போட்டனர். ஆட்டம் சமனில் முடிந்ததால் … Read more

பிரேசிலில் போலீசாருக்கும், கும்பலுக்கும் இடையே துப்பாக்கி சூடு; 6 பேர் பலி

ரியோ டி ஜெனீரோ, பிரேசில் நாட்டின் மிக பெரிய நகரங்களில் ஒன்றான ரியோ டி ஜெனீரோவின் வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட மங்கினோஸ் பகுதியில் சென்று கொண்டிருந்த ஒரு குழுவினர் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது. இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் படையுடன் சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து, போலீசாருக்கும் துப்பாக்கி சூடு நடத்திய நபர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இரு தரப்பினரும் துப்பாக்கிகளால் சுட்டுள்ளனர். இந்த கடுமையான மோதலில் 6 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். … Read more

தங்க கடத்தல் வழக்கில் உண்மை நிச்சயம் வெளிவரும் – வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்

பெரும்பாவூர், திருவனந்தபுரத்தில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:- இலங்கையில் அதிபரை பதவி விலகக்கோரி மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். இது தீவிரம் அடைந்து உள்ளது. இதை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும். விரைவில் அங்கு நிலையான அரசு அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. கேரள தங்க கடத்தல் வழக்கு விசாரணையின் முடிவில், உண்மை நிச்சயம் வெளிவரும். திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரசு … Read more

சூப்பர் டிவிசன் ஆக்கி: தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றி..!

சென்னை, சென்னை மாவட்ட ஆக்கி சங்கம் சார்பில் சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு போலீஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் சென்னை துறைமுகத்தை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் வரி அணி 5-1 என்ற கோல் கணக்கில் ஸ்டேட் வங்கியை தோற்கடித்தது. இன்று நடைபெறும் ஆட்டங்களில் சென்னை மாநகர போலீஸ்-இந்திய உணவு … Read more