உக்ரைன் மக்கள் அனைவருக்கும் ரஷிய குடியுரிமை ஆணையில் கையெழுத்திட்டார் அதிபர் புதின்

கார்கிவ், உக்ரைனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக ரஷியா கிட்டத்தட்ட 150 நாட்களாக அந்த நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இந்த சூழலில் உக்ரைனியர்கள் அனைவருக்கும் ரஷிய குடியுரிமை வழங்குவதற்கான விரைவான பாதையை மேலும் விரிவுபடுத்துவதற்கான ஆணையில் ரஷிய அதிபர் புதின் நேற்று கையெழுத்திட்டார். கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்களில் உள்ள உக்ரைனியர்கள் எளிதில் ரஷிய குடியுரிமையை பெறுவதற்கான விரைவு குடியுரிமை திட்டத்தை கடந்த 2019-ம் … Read more

ராஜீவ் கொலை கைதி ரவிச்சந்திரன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

புதுடெல்லி, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் கைதான ஆர்.பி.ரவிச்சந்திரன் தமிழக கவர்னர் ஒப்புதல் இல்லாமல் விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்த மனுக்களை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. அப்போது நீதிபதிகள், பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்டு அதன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுவித்துள்ளது. அந்த சிறப்பு அதிகாரம் ஐகோர்ட்டுக்கு இல்லை. எனவே இந்த மனுக்களை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தனர். இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக ரவிச்சந்திரன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் … Read more

பெண்கள் உலக கோப்பை ஆக்கி: ஸ்பெயினிடம் தோல்வியடைந்த இந்தியா கால்இறுதி வாய்ப்பை இழந்தது..!

தெரசா, 15-வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி நெதர்லாந்து மற்றும் ஸ்பெயினில் நடந்து வருகிறது. 16 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் நேற்று முன்தினம் இரவு தெரசாவில் நடந்த கால்இறுதிக்கு முந்தைய சுற்று (கிராஸ் ஓவர்ஸ்) ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் 3-வது இடம் பிடித்த இந்திய அணி, ‘சி’ பிரிவில் 2-வது இடம் பெற்ற ஸ்பெயினை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டினாலும் தடுப்பு அரணை தகர்த்து கோல் அடிப்பதில் தடுமாறின. … Read more

யுரேனியம் செறிவூட்டலை 20 சதவீதம் அதிகரித்த ஈரான்

தெஹ்ரான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் 2015 ஆம் ஆண்டு போடப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் ஈரான் 300 கிலோ யுரேனியத்தை வைத்திருக்கலாம் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா, ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. இதனால் அதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அந்த ஒப்பந்தத்தை மீறி ஈரான் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், அணு ஆயுதங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் யுரேனியத்தை 20 சதவீதம் வரை செறிவூட்டும் பணியை … Read more

நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரியாக பரமேஸ்வரன் ஐயர் பொறுப்பேற்பு

புதுடெல்லி, ‘நிதி ஆயோக்’ தலைமை செயல் அதிகாரியாக பரமேஸ்வரன் ஐயர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். தனக்கு இந்த வாய்ப்பை அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக பரமேஸ்வரன் ஐயர் கூறியுள்ளார். இவர் உத்தரபிரதேச பிரிவை சேர்ந்த 1981-ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். இவருக்கு குடிநீர் மற்றும் தூய்மை பணிகள் துறையில் 25 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. அதனால். மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தை அமல்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார். கடந்த 2016-ம் … Read more

இந்தியா-இங்கிலாந்து மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது..!

லண்டன், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலாவது ஆட்டத்தில் 50 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 49 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றியை ருசித்தது. நாட்டிங்காமில் நடந்த 3-வது மற்றும் கடைசி போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி கண்டது. இதனை … Read more

'ஜேம்ஸ் வெப்' விண்வெளி தொலைநோக்கியின் முதல் வண்ணப்படம் வெளியீடு…!

வாஷிங்டன், நாசாவால் விண்ணில் ஏவப்பட்ட உலகின் மிகப்பெரிய சக்தி மற்றும் திறன் வாய்ந்த ‘ஜேம்ஸ் வெப்’ விண்வெளி தொலைநோக்கி, பிரெஞ்ச் கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏரியன் 5 ராக்கெட் மூலம் கடந்த டிசம்பர் மாதம் 25-ந்தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்திய மதிப்பில் சுமார் 75 ஆயிரம் கோடி என்ற மிகப்பெரிய பட்ஜெட்டில் பல ஆண்டுகளாக கடினமாக உழைத்து ஆய்வாளர்கள் இந்த தொலைநோக்கியை உருவாக்கியுள்ளனர். நிலவில் இருந்து மூன்று மடங்கு தொலைவுக்கு சென்று, சூரியனை … Read more

ஜல்லிக்கட்டில் நாட்டுமாடுகளுக்கு மட்டுமே அனுமதி: ஐகோர்ட்டு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை

புதுடெல்லி, சென்னை ஒக்கியம் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த சேஷன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு இன மாடுகளை மட்டும் அனுமதிக்க உத்தரவிட வேண்டும். வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகள் பங்கேற்க தடை விதிக்க வேண்டும்’ எனவும் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, ‘ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ள நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும்’ என உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் வக்கீல் டி.குமணன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு … Read more

உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் அர்ஜூன் தங்கப்பதக்கம் வென்றார்..!

சாங்வான், உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி தென்கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் போட்டியில் ரேங்கிங் சுற்றில் இந்திய வீரர் அர்ஜூன் பபுடா 261.1 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் அர்ஜூன் பபுடா 17-9 என்ற புள்ளி கணக்கில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான அமெரிக்காவின் லூகாஸ் கோசெனீஸ்கியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். பஞ்சாப்பை சேர்ந்த 23 வயதான அர்ஜூன் … Read more

கொரோனா பரவல் அதிகரிப்பு: உலகின் மிகப்பெரிய சூதாட்ட தளமான மக்காவ் பிராந்தியத்தில் சூதாட்ட விடுதிகள் மூடல்

மக்காவ், சீனாவின் தெற்கு கடலோர பகுதியில் அமைந்துள்ள தன்னாட்சி அதிகாரம் பெற்ற பிராந்தியம் மக்காவ். இது உலகின் மிகப்பெரிய சூதாட்ட தளமாக விளங்குகிறது. மக்காவ் அரசின் வருவாயில் 80 சதவீதத்துக்கும் அதிகமான பங்கு அங்குள்ள சூதாட்ட விடுதிகள் மூலமே கிடைக்கிறது. இந்த நிலையில் மக்காவ் பிராந்தியத்தில் திடீரென கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் சுமார் 2½ ஆண்டுகளுக்கு பிறகு மக்காவ் பிராந்தியத்தில் உள்ள அனைத்து சூதாட்ட விடுதிகளும் நேற்று மூடப்பட்டன. தினத்தந்தி Related Tags : Macau casino … Read more