சீன ஆக்கிரமிப்பு பற்றி மோடி பேட்டி அளிக்கவேண்டும் – காங்கிரஸ் கோரிக்கை

புதுடெல்லி, மக்களவை காங்கிரஸ் துணைத்தலைவர் கவுரவ் கோகாய் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- சீனாவுக்கு எதிராக சுட்டெரிக்கும் விழிகளை காட்டுவேன் என்று முன்பு வாக்குறுதி அளித்தபிரதமர் மோடி, தற்போது சீனா என்ற பெயரை சொல்லவே பயப்படுகிறார்.தனது கவுரவத்தை காப்பாற்றிக்கொள்ள சீனாவை தாஜா செய்வதை அவர் நிறுத்த வேண்டும். லடாக்கில் சீன ஆக்கிரமிப்பு தொடங்கி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இருப்பினும், மோடியின் வியூகம் இன்னும் ‘மறுத்தல், திசைதிருப்புதல், பொய் சொல்லுதல், நியாயப்படுத்துதல்’ என்பதாக உள்ளது. அரசின் … Read more

விராட்கோலியை நீக்க வேண்டும் என்ற கபில்தேவ் கருத்துக்கு கேப்டன் ரோகித் சர்மா பதிலடி..!

நாட்டிங்காம், 2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு முன்னாள் கேப்டன் விராட்கோலி சர்வதேச போட்டிகளில் சதம் எதுவும் அடிக்கவில்லை. அவர் சமீபகாலமாக ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். பார்மின்றி தவிக்கும் விராட்கோலியை 20 ஓவர் அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் சமீபத்தில் கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில் ‘நடப்பு பார்மை பொறுத்து களம் இறங்கும் வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். ஒருவர் தொடர்ந்து சொதப்பினாலும் புகழ் பெற்ற வீரர் என்பதற்காக … Read more

இலங்கை: இடைக்கால அதிபர் பதவிக்கு சஜித் பிரமேதாசா பெயர் பரிந்துரை

கொழும்பு, இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாட்டால் கொதித்தெழுந்த மக்கள் அங்கு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், அதிபர் மாளிகையை கைப்பற்றினர். இலங்கை அதிபர் மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போராட்டக்காரர்கள் பலர் தற்போது அங்கேயே தங்கியுள்ளனர். இதனைதொடர்ந்து அனைத்துக் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கும் வகையில் இலங்கை அமைச்சரவை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர். மேலும் கொழும்பு ரத்மலானை விமானப்படை தளத்தில் இலங்கை அதிபர் கோத்தபய … Read more

கொறடா உத்தரவை மீறியதாக இரு அணியினர் புகார் 53 சிவசேனா எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ்

மும்பை, மராட்டியத்தில் சிவசேனா தலைமையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் அங்கம் வகித்த மகாவிகாஸ் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இந்தநிலையில் கடந்த மாதம் 20-ந் தேதி சிவசேனா மந்திரி ஏக்நாத் ஷிண்டே கட்சி தலைமைக்கு எதிராக அதிருப்தி அணியை உருவாக்கினார். மேலும் அவர் பா.ஜனதா ஆதரவுடன் கடந்த 30-ந் தேதி முதல்-மந்திரியாக பொறுப்பேற்று கொண்டார். இதில் அவர் சட்டசபையில் கடந்த 4-ந் தேதி பெரும்பான்மையை நிருபித்தார். அப்போது உத்தவ் தாக்கரே அணி கொறடா சுனில் பிரபு சிவசேனா … Read more

உலக விளையாட்டு வில்வித்தை: இந்திய ஜோடி வெண்கலப்பதக்கம் வென்று சாதனை

பர்மிங்காம், உலக விளையாட்டு வில்வித்தை பந்தயம் அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது. இதில் காம்பவுண்ட் பிரிவில் அணிகளுக்கான கலப்பு அரைஇறுதியில் 2 புள்ளி வித்தியாசத்தில் கொலம்பியாவிடம் தோல்வி அடைந்த இந்தியாவின் அபிஷேக் வர்மா, ஜோதி சுரேகா வென்னம் ஜோடி அடுத்து வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் மெக்சிகோவின் ஆன்ட்ரீயா பெசிரா- மிக்யூல் பெசிரா இணையை எதிர்கொண்டது. திரில்லிங்கான இந்த மோதலில் அபிஷேக்-ஜோதி சுரேகா ஜோடி 157-156 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப்பதக்கத்தை … Read more

இலங்கையில் போராட்டம் நீடிப்பு: பதுங்கு குழி வழியாக கோத்தபய தப்பினாரா? பரபரப்பு தகவல்கள்

கொழும்பு, இலங்கையின் பொருளாதார நெருக்கடி, அந்த நாட்டின் அரசியல் நெருக்கடிக்கும் வழிவகுத்து உலக அரங்கில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. போராட்டம் உச்சம் விடுதலைப்புலிகளுடனான உள்நாட்டு போர் வெற்றிக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பம்தான் காரணம் என கொண்டாடிய இலங்கை சிங்கள மக்கள், இப்போது நாட்டின் நிலவுகிற வாழ்வாதார நெருக்கடிக்கு அதே ராஜபக்சே குடும்பம்தான் காரணம் என கூறி போர்க்கொடி உயர்த்தி இருப்பது வரலாற்று திருப்பமாக மாறி இருக்கிறது. பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகினாலும், … Read more

அடுக்குமாடி குடியிருப்பின் 11-வது தளத்தில் குடையுடன் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் தவறி விழுந்து உயிரிழப்பு

மும்பை, மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பின் 11-வது தளத்தில் குடையுடன் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு மும்பையின் பைகுல்லா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த சிறுவனின் குடும்பம் பைகுல்லா பகுதியில் உள்ள ஹவுசிங் சொசைட்டியின் 11-வது தளத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளனர். நேற்று காலையில் சிறுவன் ஜன்னலுக்கு அருகே உள்ள பெட்டில் இருந்து குடையுடன் விளையாடிக்கொண்டு இருந்துள்ளான். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக … Read more

சூர்யகுமார் யாதவ் சதம் வீண்: கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி

நாட்டிங்காம், இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து நேற்று நடைபெற்ற 2-வது போட்டியில் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று நடைபெற்றது. … Read more

இலங்கையில் அனைத்துக்கட்சி அரசு இன்று முக்கிய ஆலோசனை

கொழும்பு, இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரம சிங்கே ஆகியோர் அதிகாரபூர்வமாக பதவி விலகியதும் அனைத்துக்கட்சி அரசு அமைய உள்ளது. இது தொடர்பாக அரசியல் கட்சிகள் ஆலோசனைகள் நடத்தி வருகின்றன. நேற்று முக்கிய எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி., அதன் கூட்டணி கட்சிகள் ஆலோசனை நடத்தின. அதில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ராவுப் ஹக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் மனோ கணேசன், அனைத்து இலங்கை மக்கள் காங்கிரஸ் ரிஷாத பாதியுதீன் … Read more

ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம்: 2 ஆண்டுகளுக்கு பிறகு மாடவீதிகளில் வாகன சேவை நடத்த ஏற்பாடு

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவில், 2 ஆண்டுகளுக்கு பிறகு மாடவீதிகளில் வாகன சேவை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருவதாக அதிகாரி தெரிவித்தார். திருமலை அன்னமய பவனில் பக்தர்களிடம் குைறகள் ேகட்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் ேதவஸ்தான முதன்ைமச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்று ேபசியதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற செப்டம்பர் மாதம் 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது. கொரோனா தொற்று பரவல் … Read more