கோத்தகிரியில் மண்டல கால்பந்து போட்டி: இறுதிப்போட்டியில் சென்னை அணி சாம்பியன்..!

கோத்தகிரி, தெற்கு மண்டல மூத்தோர் கால்பந்து சங்கத்தின் சார்பில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி காந்தி மைதானத்தில் மூத்தோர் கால்பந்து போட்டிகள் நேற்று முன் தினம் தொடங்கின. இதில் நீலகிரி, கோவை சிட்டி, சென்னை, பாலக்காடு ஒட்டப்பாலம், தஞ்சாவூர், பெங்களூர், காரைக்குடி, கோவை நேதாஜி கால்பந்து அணி உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்று விளையாடின. இதில் இறுதிப்போட்டியில் சென்னை மற்றும் கோவை சிட்டி அணிகள் நுழைந்து விளையாடின. இதில் சிறப்பாக விளையாடிய சென்னை அணி 3-0 என்ற கோல்கள் … Read more

இலங்கையில் அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் நிகழ வேண்டும்- அமெரிக்க தூதர் ஜூலி சுங்

கொழும்பு, இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதனிடையே, ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர். போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபயா தனது குடும்பத்துடன் தப்பிச்சென்றுவிட்டார். போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது … Read more

தென்மேற்கு பருவமழை கோரத்தாண்டவம்; கர்நாடகத்தில் வெள்ளத்தில் தத்தளிக்கும் மாவட்டங்கள்

பெங்களூரு: கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. இதனால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மேலும் நிலச்சரிவால் பல கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. கனமழையால் காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 51 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால் எதிர்பார்த்த மழை பெய்யாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. … Read more

கோவை கிங்ஸ் அணி வெற்றி

கோயம்புத்தூர் கோவை கோவையில் நடைபெற்ற டி.என்.பி.எல். கிரிக்கெட் 15-வது லீக் போட்டியில் திருச்சி வாரியர்ஸ் அணியை வீழ்த்தி கோவை கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. 15-வது லீக் போட்டி கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் இன்று இரவு நடைபெற்ற டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 15-வது லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணியும், திருச்சி வாரியர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணியின் கேப்டன் ஷாருக்கான் பந்துவீச்சை தேர்வு செய்தார். … Read more

ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதநேயத்திற்கான கோல்டன் விசா பெற்ற முதல் தமிழர்

அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகம் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் மற்றும் அந்நாட்டில் அதிக முதலீடு செய்யும் தொழிலதிபர்கள் ஆகியோருக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்து வருகிறது. கோல்டன் விசா என்பது ஐக்கிய அமீரகத்தின் குடியுரிமை போன்றது. இந்த விசாவை வைத்திருப்பவர்கள் பத்து வருடங்களுக்கு அந்நாட்டின் குடிமகன்களாக கருதப்படுவார்கள். அந்த வகையில் பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், துஷார் கபூர், ஊர்வசி ரவுதலா உட்பட பலர் இந்த விசாவை பெற்றுள்ளனர். மேலும், தென்னிந்தியாவைச் சேர்ந்த மம்மூட்டி, … Read more

தந்தையைக் கொன்று வயலில் வீசிய மகன் கைது..!

பரான், ராஜஸ்தான் மாநிலம் பரான் மாவட்டத்தில் கெர்கெடா கிராமத்தைச் சேர்ந்த கன்ஹயலால் (வயது 70) என்பவர் கடந்த ஜூன் 30-ந்தேதி அவருடைய குடிசைக்கு அருகிலிருந்த வயலில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். விசாரணையில் அவரது மகன் ஹேம்ராஜ் (வயது 35) தனது தந்தையை கோடரியால் கொன்றதை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து மேற்கொண்ட விசாரணையில், இறந்தவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதும் தனியாக குடிசை அமைத்து வசித்து வந்ததும், சட்டவிரோதமாக நாட்டு மதுபானம் விற்பனை செய்ததும் தெரியவந்தது. குடும்பத்துக்கு அவப்பெயர் … Read more

டிஎன்பிஎல்: திருச்சி அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோவை கிங்ஸ் வெற்றி..!

கோவை, 6-வது டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க சுற்று நெல்லையில் கடந்த மாதம் 23 ஆம் தேதி தொடங்கியது. அதை தொடர்ந்து கடந்த வாரம் அடுத்த கட்ட லீக் போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து முடிந்தது. இந்த நிலையில் 2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு இன்று கோவையில் அடுத்த கட்ட லீக் போட்டிகள் தொடங்கின. இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ் -கோவை கிங்ஸ் அணிகள் மோதின. … Read more

இலங்கை அரசியல் தலைவர்களுக்கு போப் ஆண்டவர் வேண்டுகோள் 'ஏழைகளின் அழுகுரலை புறக்கணிக்க வேண்டாம்'

வாடிகன் சிட்டி, பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையில், ஆள்வோருக்கு எதிராக மக்களின் கிளர்ச்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் தீவு நாடான அங்கு பெரும் அரசியல் மற்றும் சமூக குழப்பம் நீடித்து வருகிறது. இந்த நெருக்கடியான நிலை தொடர்பாக ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ், இந்த சிக்கலில் இருந்து மக்களை பாதுகாக்குமாறு அங்குள்ள அரசியல் தலைவர்களை கேட்டுக்கொண்டு உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘அரசியல் மற்றும் பொருளாதார நிலையற்ற தன்மையால் தொடர்ந்து … Read more

மத நம்பிக்கைகளை இழிவுபடுத்த யாருக்கும் உரிமை கிடையாது – வெங்கையா நாயுடு

புதுடெல்லி, பெங்களூருவில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:- ஒருவர் தான் விரும்பும் மதத்தை கடைபிடிக்கலாம், தனது மதத்தை குறித்து பெருமைப்பட்டு கொள்ளலாம். ஆனால் மற்றவர்களின் மத நம்பிக்கைகளை இழிவுப்படுத்த யாருக்கும் உரிமை கிடையாது. மதச்சார்பின்மை மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவை இந்தியாவின் நெறிமுறைகளின் முக்கிய பகுதியாகும். பன்மைத்துவம் மற்றும் அதன் மதிப்புகள் மீதான இந்தியாவின் உறுதிப்பாட்டை, நாட்டின் சில பகுதிகளில் நடக்கும் சம்பவங்களால் குறைத்து விட முடியாது. இந்தியர்கள் அனைத்து … Read more

ஆசிய போட்டிக்கு தகுதி பெற்ற மதுரை வாலிபர்

மதுரை மதுரை கருப்பாயூரணி பகுதியை சேர்ந்தவர் பாலகுமரன்(வயது 30). இவர் கடந்த 8 வருடங்களாக பாக்சிங், கிக் பாக்சிங், டேக்வாண்டோ போட்டிகளை விளையாடி வருகிறார். இந்தநிலையில், அவர் அடுத்த மாதம் இந்தோனேசியாவில் நடக்கும் ஆசிய போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- பாக்சிங், கிக் பாக்சிங் போட்டிகளில் தேசிய அளவில் பங்கேற்று பல முறை 2-வது பரிசை வென்றிருக்கிறார். இதுபோல், டேக்வாண்டோ போட்டியில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் தங்கபதக்கங்களை பெற்றிருக்கிறேன். இந்தநிலையில், இந்தோனேசியாவில் … Read more