இலங்கையில் 2 மந்திரிகள் ராஜினாமா

கொழும்பு, பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் இலங்கை மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இன்று இலங்கை அதிபர் மாளிகையை நோக்கி வந்த போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால், அதிபர் மாளிகையை விட்டு கோத்தபய ராஜபக்சே வெளியேறினார். கொழும்பில் நடந்த அமைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலக வேண்டும் என்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். அவர்களின் கோரிக்கையை ஏற்று எனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய … Read more

தெலுங்கானாவில் தொடர் மழை; 3 பேர் பலி

ஐதராபாத், தெலுங்கானாவில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.தலைநகர் ஐதராபாத் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் விட்டு விட்டு பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. இதைப்போல நல்கொண்டா, பத்ராத்ரி கொதகுடம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அத்துடன் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அவை வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் பல நீர்த்தேக்கங்கள் திறக்கப்பட்டு … Read more

விம்பிள்டன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் எலினா ரைபகினா

லண்டன், ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற சாம்பியன் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் துனிசியாவின் ஒன்ஸ் ஜபீர் மற்றும் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா ஆகியோர் மோதினர். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய எலினா ரைபகினா 3-6,6-2,6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று விம்பிள்டன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.மேலும் இது எலினா ரைபகினா … Read more

ஷின்ஜோ அபே படுகொலை: போப் ஆண்டவர் இரங்கல்

வாடிகன் சிட்டி, ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் உலக அளவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஷின்ஜோ அபே சுட்டுக்கொல்லப்பட்டதற்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ், ஷின்ஜோ அபே படுகொலை செய்யப்பட்டதற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “ஷின்ஜோ அபே படுகொலையை அறிந்து … Read more

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் அதானி நிறுவனம் பங்கேற்பு அம்பானி நிறுவனத்துடன் போட்டி

புதுடெல்லி, இந்தியாவில் 5ஜி தொலைதொடர்பு சேவைகளுக்கான அலைக்கற்றை ஏலம் வருகிற 26-ந்தேதி நடைபெறுகிறது.இந்த ஏலத்தில் பங்கேற்க அம்பானியின் ஜியோ நிறுவனம், ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் விண்ணப்பித்து இருந்தன. இதில் தற்போது அதானி குழுமமும் குதித்து உள்ளது. இது குறித்து அதானி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவில் அடுத்த தலைமுறை 5ஜி சேவைகளை தொடங்க தயாராகி வரும் நிலையில், அதற்கான ஏலத்தில் நாங்களும் பங்கேற்கிறோம்’ என்று கூறப்பட்டு இருந்தது. விமான நிலையம், துறைமுகங்கள் மற்றும் தளவாடங்கள், … Read more

இங்கிலாந்துக்கு எதிரான 2 வது டி20: 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா..!

பர்மிங்காம், இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று பர்மிங்காமில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் களமிறங்கினர். இந்த ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது. கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். அணியின் எண்ணிக்கை 49 ஆக இருந்தபோது ரோகித் சர்மா 20 … Read more

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளின் உக்ரைன் தூதர்கள் நீக்கம் – ஜெலென்ஸ்கி அறிவிப்பு

கீவ், இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளின் உக்ரைன் தூதர்கள் பதவி நீக்கப்படுவதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார். இந்தியா,ஜெர்மனி, செக் குடியரசு, நார்வே மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளில் உள்ள தூதர்களை பதவி நீக்கம் செய்வதாக உக்ரைன் அதிபரின் அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவித்துள்ளது. உக்ரைன் தூதர்களின் பதவிநீக்கத்திற்கான காரணம் குறித்தும் அவர்களுக்கு புதிய பணிகள் வழங்கப்படுவது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. தினத்தந்தி Related Tags : உக்ரைன் தூதர்கள் நீக்கம்

மனைவியிடம் வெளிநாடு சென்றதை மறைக்க பாஸ்போர்ட் பக்கங்களை கிழித்தவர் கைது..!

மும்பை, மும்பையைச் சேர்ந்த 32 வயதாகும் நபர் ஒருவர் வெளிநாடு சென்றதை தனது மனைவியிடம் இருந்து மறைப்பதற்காக பாஸ்போர்ட்டில் இருந்து சில பக்கங்களை கிழித்ததற்காக கைது செய்யப்பட்டார். அந்த நபருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. சமீபத்தில் அவர் தன்னுடைய காதலியை சந்திப்பதற்காக வெளிநாடு சென்றுள்ளார். கடந்த வியாழன் இரவு அவர், இந்தியாவுக்குத் திரும்பியபோது, ​​மும்பை விமான நிலையத்தில் குடியேற்ற அதிகாரிகள் அவரது சமீபத்திய பயணத்திற்கான விசா முத்திரைகளைக் கொண்டிருக்க வேண்டிய பாஸ்போர்ட்டின் சில பக்கங்களைக் காணாதது … Read more

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் : முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

காலே ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறக்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் 5 ரன்னிலும், உஸ்மான் கவாஜா 37 ரன்னிலும் ஆட்டமிழந்தனர் . அடுத்து வந்த லபுசேன், ஸ்மித் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர் .லபுசேன் சிறப்பாக ஆடி சதமடித்து 104 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த … Read more

நியூசிலாந்தில் நுழைந்தது, குரங்கு அம்மை நோய் பாதிப்பு

ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை பரவி வருகிறது. 55-க்கும் மேற்பட்ட நாடுகளில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த நோய்க்கு ஆளாகி உள்ளனர். இந்த நோய் இப்போது நியூசிலாந்திலும் நுழைந்திருக்கிறது. அங்கு ஆக்லாந்தில் வசிக்கிற 30 வயதான ஒரு நபருக்கு இந்த தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இவர் குரங்கு அம்மை நோய் தாக்கத்திற்கு ஆளாகியுள்ள வெளிநாடு ஒன்றுக்கு சென்று விட்டு திரும்பியவர் என தகவல்கள் கூறுகின்றன. இப்படி குரங்கு அம்மை பாதித்துள்ள நாடுகளுக்கு சென்று வந்தவர்கள், … Read more