கொச்சியில் கடல் சீற்றம் காரணமாக 10 வீடுகள் சேதம்

பெரும்பாவூர், கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளை கேரள அரசு தீவிரமாக செய்து வருகிறது. மேலும் கொச்சி, எடவணக்காடு, வைப்பின் பகுதிகளில் கடல் சீற்றம் அதிகரித்து உள்ளது. குறிப்பாக எடவணக்காடு பகுதியில் கடற் கரை பகுதிகளில் கடல் சீற்றம் மிக அதிகளவு உள்ளது. இதனால் 10 வீடுகள் சேதம் அடைந்தது. கடற்கரை ஓரங்களில் உள்ள வீடுகள் அனைத்திலும் கடல் நீர் புகுந்ததால் அங்கு மக்கள் வசிக்க இயலாமல், மீட்கப்பட்டு தனி … Read more

இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 : இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு

சவுத்தம்டன், இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. முதலாவது டி20 போட்டி சவுத்தம்டனில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரு அணிகளும் மோதும் 2வது போட்டி இன்று நடைபெறுகிறது.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டதுஅதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வுசெய்துள்ளது .அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இந்திய அணி : ரோகித் … Read more

55-க்கும் மேற்பட்ட நாடுகளில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குரங்கு அம்மை நோயால் பாதிப்பு

வெலிங்டன், ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை பரவி வருகிறது. 55-க்கும் மேற்பட்ட நாடுகளில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த நோய்க்கு ஆளாகி உள்ளனர். இந்த நோய் இப்போது நியூசிலாந்திலும் நுழைந்திருக்கிறது. அங்கு ஆக்லாந்தில் வசிக்கிற 30 வயதான ஒரு நபருக்கு இந்த தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இவர் குரங்கு அம்மை நோய் தாக்கத்திற்கு ஆளாகியுள்ள வெளிநாடு ஒன்றுக்கு சென்று விட்டு திரும்பியவர் என தகவல்கள் கூறுகின்றன. இப்படி குரங்கு அம்மை பாதித்துள்ள நாடுகளுக்கு சென்று … Read more

கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா வழிகாட்டல் குழுவில் நடிகை குஷ்பு

புதுடெல்லி, 53-வது சர்வதேச திரைப்பட விழா வருகிற நவம்பர் மாதம் 20-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை கோவாவில் நடைபெற உள்ளது. மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகமும், கோவா மாநில அரசும் இணைந்து நடத்தும் விழாவுக்கு ஒரு வழிகாட்டல் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவுக்கு தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி, தலைவராக இருப்பார். தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி மற்றும் துறை செயலாளர் உள்பட 13 பேர் அலுவல்சார் உறுப்பினர்களாக செயல்படுவார்கள். மேலும், அலுவல் சாரா … Read more

மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: பிரனாய் அரையிறுதிக்கு முன்னேற்றம்..!

கோலாலம்பூர், மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் ஜப்பான் வீரர் கன்டா சுமேயமாவுடன் மோதினார். இந்த காலிறுதி ஆட்டத்தில் எச்.எஸ்.பிரனாய் 25-23, 22-20 என்ற நேர்செட்டில் கன்டா சுமேயமாவை வீழ்த்தி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். தினத்தந்தி Related Tags : Malaysia Masters மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்

இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு இந்தியா வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் போட்டி

லண்டன், இங்கிலாந்து பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துள்ள போரிஸ் ஜான்ஸனுக்கு அடுத்தபடியாக, அந்தப் பதவியைப் பெற போட்டியிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், வெளிவிவகாரங்களுக்கான சிறப்புக் குழு தலைவராக பொறுப்பு வகித்து வரும் டாம் டுகென்தாட்டும் பிரதமா் பதவிக்கான போட்டியில் பங்கேற்கப்போவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தாா். அதைடுத்து இங்கிலாந்தின் அடுத்த பிரதமரைத் தோந்தெடுப்பதற்காக ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சி நடத்தவிருக்கும் வாக்கெடுப்பில் பங்கேற்கவிருக்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கை 4-ஆக உயா்ந்துள்ளது. இது தவிர, நிதிமந்திரி பதவியிலிருந்து அண்மையில் விலகிய இந்திய வம்சாவளியைச் … Read more

அன்னிய செலாவணி சட்டத்தை மீறிய சர்வதேச அமைப்புக்கு ரூ.51 கோடி அபராத நோட்டீஸ் அமலாக்கத்துறை நடவடிக்கை

புதுடெல்லி, சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இன்டர்நேஷனலின் இந்திய பிரிவான ஆம்னஸ்டி இந்தியா இன்டர்நேஷனல் அமைப்புக்கு ரூ.51 கோடியே 72 லட்சம் அபராதம் விதிப்பதற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் விடுத்துள்ளது. அந்த அமைப்பின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஆகர் படேலுக்கு ரூ.10 கோடி அபராதத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இங்கிலாந்தில் உள்ள ஆம்னஸ்டி இன்டர்நேஷனல், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தை மீறி, பதிவு செய்யப்படாத தனது இந்திய அமைப்புகளுக்கு பெருமளவு நன்கொடையை அனுப்பி வந்துள்ளது. இது, … Read more

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் 100 நாள் கவுண்ட்டவுன் தொடங்கியது..!

மெல்போர்ன், இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட 16 அணிகள் பங்கேற்கும் 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16-ந்தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இந்த போட்டிக்கான 100 நாள் கவுண்ட்டவுனை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று தொடங்கியது. 4 கண்டங்களை சேர்ந்த 13 நாடுகளில் 35 இடங்களுக்கு இந்த உலக கோப்பை எடுத்து செல்லப்படுகிறது. ஜெர்மனி, கானா, சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் இதில் அடங்கும். … Read more

பிலிப்பைன்ஸ் அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி

மணிலா, பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபராக கடந்த 30-ந் தேதி பதவி ஏற்றவர், பெர்டினான்ட் மார்கோஸ் (வயது 64). இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை அவரது ஊடக செயலாளர் ரோஸ் பீட்ரிக்ஸ் குரூஸ் ஏஞ்சல்ஸ் நேற்று மணிலாவில் நிருபர்களிடம் அறிவித்தார். அப்போது அவர், “அதிபர் பெர்டினான்ட் மார்கோசுக்கு லேசான காய்ச்சல் உள்ளது, மற்றபடி நலமாக உள்ளார்” என தெரிவித்தார். அவருடன் நெருக்கமாக இருந்தவர்கள் கொரோனா கால நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதிபர் … Read more

தேசிய கொடி விற்பனைக்கு ஜி.எஸ்.டி. விலக்கு

புதுடெல்லி, தற்போது, பருத்தி, பட்டு, கம்பளி, கதர் ஆகியவற்றை பயன்படுத்தி, கையால் நூற்கப்பட்ட இந்திய தேசிய கொடிகளின் விற்பனைக்கு ஜி.எஸ்.டி. கிடையாது. இந்தநிலையில், பாலியஸ்டர் அல்லது எந்திரத்தால் உருவாக்கப்பட்ட தேசிய கொடி விற்பனைக்கும் ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இந்திய கொடி சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் மூலம், இந்த விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அலுவலகம் தெரிவித்துள்ளது. தினத்தந்தி Related Tags : தேசிய கொடி