சூப்பர் டிவிசன் ஆக்கி: ஸ்டேட் வங்கியை வீழ்த்தி ஏ.ஜி.அலுவலக அணி வெற்றி..!

சென்னை, சென்னை மாவட்ட சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஏ.ஜி.அலுவலக அணி 5-1 என்ற கோல் கணக்கில் ஸ்டேட் வங்கியை தோற்கடித்தது. ஏ.ஜி.அலுவலக அணியில் ரஞ்சித், சஞ்சய் தலா 2 கோலும், யுவராஜ் ஒரு கோலும் அடித்தனர். மற்றொரு ஆட்டத்தில் சென்னை துறைமுக அணி 5-0 என்ற கோல் கணக்கில் இந்திரா காந்தி கிளப்பை வென்றது. துறைமுக அணியில் … Read more

அமெரிக்கா: ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு 'சுதந்திரத்துக்கான ஜனாதிபதி விருது'

வாஷிங்டன், அமெரிக்காவில் அரசியல், சமூகம், கலை, விளையாட்டு என பல்வேறு துறைகள் வாயிலாக நாட்டின் மேம்பாட்டிற்கு சிறந்த பங்களிப்பை வழங்கும் நபர்களுக்கு அந்த நாட்டின் உயரிய விருதான ‘சுதந்திரத்துக்கான ஜனாதிபதி விருது’ ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான விருது பெறும் நபர்களை வெள்ளை மாளிகை அண்மையில் அறிவித்தது. அதை தொடர்ந்து நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விழாவில் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு ஜனாதிபதி ஜோ பைடன் பதக்கங்களை அணிவித்து கவுரவித்தார். அமெரிக்க … Read more

மத்திய மந்திரி அமித்ஷா உடன் மராட்டிய முதல்-மந்திரி மற்றும் துணை முதல்-மந்திரி சந்திப்பு

புதுடெல்லி, மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை நேற்று அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில், மராட்டிய அமைச்சரவை விரிவாக்கம் குறித்து விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் பட்னாவிஸ் ஆகிய இருவரும் பிரதமர் நரேந்திரமோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரையும் சந்திக்க … Read more

தேசிய அளவிலான கைப்பந்து போட்டி தொடக்கம்

புதுக்கோட்டை வடகாட்டில் அண்ணா கைப்பந்து கழகத்தின் பொன்விழாவையொட்டி தேசிய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கைப்பந்து போட்டி 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் ஆண்கள் பிரிவில் கேரளா காவல் துறை, சென்னை எஸ்.ஆர்.எம்., சென்னை ஜி.எஸ்.டி., பெங்களூர் அணி ஆகிய அணிகள் கலந்துகொள்கின்றன. பெண்கள் பிரிவில் கேரளா கே.எஸ்.இ.பி. அணி, கேரளா காவல் துறை, சென்னை எஸ்.ஆர்.எம்., சென்னை ஐ.சி.எப். ஆகிய அணிகள் கலந்துகொள்கின்றன. இந்த போட்டியை சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை … Read more

இலங்கையில் 2 நாட்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எரிபொருள் விற்பனை நிறுத்தம் போராட்ட அச்சுறுத்தல் எதிரொலி

கொழும்பு, இலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அரசின் சிலோன் பெட்ரோலிய கார்பரேஷனுக்கு சொந்தமான விற்பனை நிலையங்களில் கடந்த 27-ந்தேதி முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிபொருள் விற்பனை நடந்து வருகிறது. அதேநேரம் இந்தியன் ஆயில் கார்பரேஷனின் (ஐ.ஓ.சி.) இலங்கை கிளையான லங்கா ஐ.ஓ.சி.யின் சில்லறை விற்பனை நிலையங்களில் மட்டுமே பெட்ரோல்-டீசல் விற்பனை நடந்து வந்தது. இந்த நிலையில் நாட்டின் நெருக்கடிக்கு தீர்வு காண முடியாத இலங்கை அரசு பதவி விலகக்கோரி போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. குறிப்பாக … Read more

கர்நாடகத்தில், மழை பாதிப்புகளை நேரில் சென்று ஆய்வு செய்யும்படி கலெக்டர்களுக்கு முதல்-மந்திரி உத்தரவு

பெங்களூரு: கர்நாடகத்தில் மழை பாதித்த பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்யும்படி கலெக்டர்களுக்கு முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் கடலோர மாவட்டங்களுக்கு மேலும் 5 நாள் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை ருத்ரதாண்டவமாட தொடங்கி உள்ளது. மாநிலத்தில் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, மலைநாடு மாவட்டங்களான குடகு, சிக்கமகளூரு, ஹாசன், சிவமொக்கா மற்றும் வடகர்நாடக மாவட்டங்களான ஹாவேரி, பாகல்கோட்டை, பீதர், பெலகாவி, கலபுரகி ஆகிய பகுதிகளில் … Read more

விம்பிள்டன் : இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

லண்டன்: கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இங்கிலாந்தின் கேமரூன் நூரியுடன் மோதினார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 2-6,6-3,6-2,6-4 ஜோகோவிச் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் ரபேல் நடால், ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோசுடன் மோத இருந்தார். காயம் காரணமாக நடால் அரையிறுதியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, விம்பிள்டன் இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச், நிக் … Read more

தேர்தல் பிரசாரம் செய்தபோது ஜப்பான் முன்னாள் பிரதமர் அபே சுட்டுக்கொலை உலக தலைவர்கள் இரங்கல்

டோக்கியோ, ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே, தேர்தல் பிரசாரம் செய்தபோது, சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே (வயது 67). இவர் 2006-07, 2012-20 கால கட்டத்தில் அங்கு பிரதமர் பதவி வகித்தவர். அந்த நாட்டில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவரும் அவர்தான். மேலும், லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவராகவும் இருந்தவர் ஆவார். கடந்த 2020-ம் ஆண்டு, அவர் உடல்நல பிரச்சினையை (பெருங்குடல் அழற்சி) … Read more

கர்நாடக கடலோர பகுதிகளில் தொடர் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி

மங்களூரு: கர்நாடக கடலோர மாவட்டங்களில் இடைவிடாது தொடர் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழையால் பண்ட்வால் அருகே கஜேபையலுவில் நிலச்சரிவில் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. ெதன்மேற்கு பருவமழை தீவிரம் கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால் பெரிய அளவில் மழை பெய்யாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கர்நாடகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து … Read more

சூப்பர் டிவிசன் ஆக்கி: ஐ.சி.எப் அணியிடம் எஸ்.டி.ஏ.டி. தோல்வி

சென்னை, சென்னை மாவட்ட ஆக்கி சங்கம் சார்பில் சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஐ.ஓ.பி. அணி 4-2 என்ற கோல் கணக்கில் ஜி.எஸ்.டி.மற்றும் மத்திய கலால் வரி அணியை தோற்கடித்தது. ஐ.ஓ.பி. அணியில் ஹர்மன்பிரீத் சிங், சுரேஷ் பாபு, நம்பி கணேஷ், வினோத் ராயர் ஆகியோர் கோல் அடித்தனர். மத்திய கலால் வரி அணியில் பிச்சைமணி, ஹசன் பாஷா … Read more