ெசாத்து குவிப்பு புகார் எதிரொலி: காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீடுகளில், ஊழல் தடுப்பு படை சோதனை

பெங்களூரு: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜமீர் அகமதுகான் வீடு, அலுவலகங்களில் ஊழல் தடுப்பு படையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின. ஜமீர் அகமதுகான் எம்.எல்.ஏ. பெங்களூரு சாம்ராஜ்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வாக பணியாற்றி வருபவர் ஜமீர் அகமதுகான். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் ஜனதாதளம் (எஸ்), காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மந்திரியாகவும் பணியாற்றியவர் ஆவார். தொழில் அதிபரான ஜமீர் அகமதுகான் டிராவல்ஸ் நிறுவனம் உள்பட பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறார். … Read more

விம்பிள்டன் டென்னிஸ் – ஜோகோவிச், நூரி அரையிறுதிக்கு முன்னேறினர்

லண்டன், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இத்தாலியின் ஜானிக் சின்னருடன் மோதினார். இதில் முதல் இரு செட்களை 7-5, 6-2 என சின்னர் கைப்பற்றினார். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட ஜோகோவிச் அதிரடியாக ஆடி 6-3, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் அடுத்த 3 சுற்றுகளை வென்றார். இதன்மூலம் ஜோகோவிச் அரையிறுதிச் … Read more

டெல்லியில் இருந்து புறப்பட்டு தொழில்நுட்ப கோளாறால் கராச்சியில் தரையிறங்கிய விமானம் மீண்டும் துபாய் புறப்பட்டது…!

கராச்சி, டெல்லியில் இருந்து இன்று காலை 138 பயணிகளுடன் துபாய் நோக்கி ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பெயிங் 737 மெக்ஸ் ரக விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் தொழில்நுப்ட கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, காலை 9.15 மணியளவில் விமானம் பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. பாகிஸ்தான் விமான நிலையத்தில் இந்திய விமானம் தரையிரக்கப்பட்டு அதில் இருந்த பயணிகளுக்கு போதிய வசதிகள் செய்துகொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாற்று விமானம் மும்பையில் … Read more

போக்குவரத்து விதிகளை மீறியதாக 55 வழக்குகள்: போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த வாலிபர் பிடிபட்டார்

பெங்களூரு: பெங்களூரு விஜயநகர் போக்குவரத்து போலீஸ் நிலைய ஏட்டு ஹரீஷ் கடந்த 3-ந்தேதி மாரேனஹள்ளி சந்திப்பு பகுதியில் போக்குவரத்து விதிமீறும் வாகன ஓட்டிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது ஸ்கூட்டரில் ஒரு வாலிபர் போக்குவரத்து விதிகளை மீறி வேகமாக வந்தார். இதை நவீன கருவி உதவியுடன் கண்காணித்த ஏட்டு ஹரீஷ், அந்த ஸ்கூட்டரின் பதிவெண் பலகை போலி என்பதையும் கண்டறிந்தார். உடனே அந்த வாலிபரை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில், பிடிபட்ட வாலிபர் விஜயநகர் அருகே … Read more

நடுவரின் தவறான முடிவுக்காக சிந்துவிடம் வருத்தம் தெரிவித்த ஆசிய பேட்மிண்டன் கூட்டமைப்பு

பிலிப்பைன்சில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-13, 19-21, 16-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் அகானே யமாகுச்சியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இந்த ஆட்டத்தில் முதல் செட்டை கைப்பற்றிய சிந்து 2-வது செட்டில் 14-11 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது போட்டி நடுவர் சிந்துவுக்கு ஒரு புள்ளியை அபராதமாக விதித்தார். அதாவது அந்த புள்ளி எதிராளி கணக்கில் சேர்க்கப்பட்டது. சர்வீஸ் … Read more

இத்தாலியில் 70 ஆண்டுகளில் இல்லாத வறட்சி; 5 பிராந்தியங்களில் அவசர நிலை பிரகடனம்

ரோம், இத்தாலியில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக மோசமான வறட்சி நிலையை அந்த நாடு எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக இத்தாலியின் மிக நீளமான நதியான போ நதியை சுற்றியுள்ள 5 வடக்கு பிராந்தியங்கள் வறட்சியால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வறட்சியால் இத்தாலியின் 30 விழுக்காட்டுக்கும் கூடுதலான விவசாய உற்பத்திகள் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டின் விவசாயச் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மேசமான வறட்சியை எதிர்கொண்டுள்ள லோம்பார்டி, … Read more

மங்களூருவில் மோசமான வானிலை: துபாய் விமானம் பெங்களூருவுக்கு திருப்பப்பட்டது

மங்களூரு: கர்நாடகத்தில் கடலோர மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை ெபய்து வருகிறது. இதனால், மங்களூரு பகுதியில் மோசமான வானிலை நிலவுகிறது. இந்த நிலையில் நேற்று துபாயில் இருந்து மங்களூருவுக்கு வந்த விமானம் ஒன்று, மோசமான வானிலை காரணமாக பெங்களூருவுக்கு திருப்பப்பட்டது. இதேபோல், சவுதி அரேபியா தமாம் நகரில் இருந்து மங்களூருவுக்கு வந்த விமானமும் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டது. தினத்தந்தி Related Tags : துபாய் விமானம்

ஆஸ்திரேலிய பெண்கள் அணி சாதனையை முறியடித்த இந்திய பெண்கள் அணி

பல்லேகல்லே, இலங்கை அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக காஞ்சனா 46 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ரேனுகா சிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகளாக ஷவாலி வர்மா-மந்தானா ஆடினர். 25.4 ஓவரில் இந்திய அணி விக்கெட் ஏதும் … Read more

ரூ.489 கோடி செலவில் வர்ணம் பூசப்படுகிறது, ஈபிள் கோபுரம் துருப்பிடித்ததா?

பாரீஸ், பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் உலகப்புகழ் பெற்ற ஈபிள் கோபுரம் அமைந்துள்ளது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குஸ்டாவ் ஈபிள் என்பவரால் கட்டப்பட்ட முற்றிலும் இரும்பினாலான இந்த கோபுரம் 1,063 அடி உயரம் கொண்டதாகும். உலகில் அதிகம் பார்வையிடப்பட்ட சுற்றுலா தளங்களில் ஒன்றாக இந்த ஈபிள் கோபுரம் விளங்குகிறது. இந்த நிலையில் ஈபிள் கோபுரம் துருப்பிடித்து மோசமான நிலையில் இருப்பதாகவும், முழுமையான பழுதுபார்ப்பு தேவை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் பழுதுபார்ப்புக்கு பதிலாக ஈபிள் … Read more

13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை; 5 பேருக்கு வலைவீச்சு – அதிர்ச்சி சம்பவம்

ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்பம் மாவட்டம் ஷங்கர்பூர் கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தனது வீட்டிற்கு அருகே உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு இருந்த 5 பேர் கொண்ட கும்பல் சிறுமியை கழிவறைக்குள் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டது. தனக்கு நடந்த கொடூரம் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இந்த சம்பவம் … Read more