பெண்கள் உலக கோப்பை ஆக்கி: இந்தியா-சீனா அணிகள் இன்று மோதல்

ஆம்ஸ்டெல்வீன், 15-வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி நெதர்லாந்து மற்றும் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. இதில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இங்கிலாந்துடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா கண்டது. இந்த நிலையில் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி தனது … Read more

லெபனானில் சட்டவிரோத குடியேற்ற முயற்சியில் ஈடுபட்ட 31 பேர் கைது..!

பெய்ருட், லெபனான் அரச பாதுகாப்பு, நேற்று பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 31 பேரை சட்டவிரோத குடியேற்ற முயற்சியில் ஈடுபட்டதாக கூறி கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள், எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடப்படவில்லை. வடக்கு நகரமான கலாமூனில் இருந்து படகு மூலம் லெபனானில் இருந்து தப்பிக்க முயன்றனர். விசாரணை மற்றும் பிற சட்ட நடைமுறைகளுக்காக அவர்கள் நீதித்துறை அமைப்புகள் முன்பாக அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக லெபனானில் நிலவும் கடுமையான நிதி நெருக்கடியினால் நூற்றுக்கணக்கான அகதிகள் … Read more

கேரளாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நபர் உயிரிழப்பு

கோட்டயம், கேரளாவில் உள்ள கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நபர் நேற்று உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்திய மருத்துவக் கல்லூரி அதிகாரிகள், அவர் உயிரிழந்தது குறித்து போலீசாரிடம் கூறியுள்ளதாகவும், தூதரகத்தை தொடர்பு கொண்ட பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தனர். தொடக்கத்தில் எர்ணாகுளம் பொது மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அந்த நபர், பின்னர் களமசேரி மருத்துவக் கல்லூரியிலும் சிகிச்சை பெற்றார். … Read more

விம்பிள்டன் டென்னிஸ்: கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா கால்இறுதிக்கு தகுதி

லண்டன், ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 23-வது இடத்தில் இருக்கும் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா 7-5, 6-3 என்ற நேர்செட்டில் குரோஷியாவின் பெட்ரா மார்டிக்கை வீழ்த்தி முதல்முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான சிமோனா ஹலெப் (ருமேனியா) 6-1, 6-2 என்ற நேர்செட்டில் ஸ்பெயினின் பாலா படோசாவை வீழ்த்தி … Read more

வயது முதிர்வால் பதவி விலகலா? போப் ஆண்டவர் பதில்

ரோம், கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் சமீபகாலமாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறார். மூட்டு தசைநார் வீக்கமடைந்த நிலையில் அவர் ஒரு மாதத்துக்கும் மேலாக சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில் 85 வயதாகும் போப் ஆண்டவர் பிரான்சிஸ் வயது மூப்பு மற்றும் உடல்நிலை பிரச்சினைகள் காரணமாக எந்த நேரத்திலும் பதவி விலகலாம் என தகவல்கள் பரவி வருகின்றன. குறிப்பாக கோடை காலத்தின் இறுதியில் அவர் பதவி விலகும் முடிவை அறிவிக்கலாம் என … Read more

உங்களால் நெருப்புடன் விளையாட முடியாது; நுபுர்சர்மாவை கைது செய்யுங்கள் – மம்தா பானர்ஜி

கொல்கத்தா, நுபுர்சர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்து பாஜகவின் பிளவுப்படுத்தும் கொள்கையை மேலும் மேம்படுத்துவதற்கான சதி என மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குற்றம் சுமத்தினார். கொல்கத்தாவில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அவர் பேசினார்.அதில் அவர் கூறியதாவது, “நுபுர் ஷர்மா சர்ச்சை முற்றிலும் ஒரு சதி…வெறுப்பு மற்றும் பாஜகவின் பிளவுபடுத்தும் கொள்கை. நுபுர் சர்மா ஏன் கைது செய்யப்படவில்லை. நுபுர் சர்மாவை கைது செய்யுங்கள் ஏனென்றால் உங்களால் நெருப்புடன் விளையாட முடியாது. நமது நாட்டில் அனைவரும் … Read more

விம்பிள்டன் டென்னிஸ்: ஹாலெப், ரிபகினா காலிறுதிக்கு தகுதி..!

லண்டன், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டத்தில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப், ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசாவுடன் மோதினார். இந்த போட்டியில் ஹாலெப் 6-1, 6-2 என்ற நேர் செட்களில் படோசாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரிபகினா, குரோஷியாவின் பெட்ரா மார்டிக்குடன் மோதினார். இந்த போட்டியில் மார்டிக்கை 7-5, 6-3 என்ற … Read more

அமெரிக்கா: சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கிச்சூடு – 6 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவின் சுதந்திர தினம் ஆண்டுதோறும் ஜூன் 4-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 246-வது சுதந்திர தினம் இன்று (இந்திய நேரப்படி நேற்று) கொண்டாடப்பட்டது. சுதந்திரதினத்தையொட்டி அந்நாட்டில் பல்வேறு மாகாணங்களில் சுதந்திர தின அணிவகுப்புகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிகோகோ நகரின் புறநகர் பகுதியில் உள்ள ஹைலண்ட் பூங்காவில் சுதந்திரதின அணிவகுப்பு இன்று காலை 10 மணிக்கு (அந்நாட்டு நேரப்படி) தொடங்கியது. அப்போது, சுதந்திரதின அணிவகுப்பில் கலந்துகொண்டிருந்த நபர் … Read more

நண்பர்களின் எதிர்காலத்தை பாதுகாத்து விட்டு இளைஞர்களை வேலையின்றி விட்டுவிட்டார், பிரதமர் – ராகுல்காந்தி

துணை ராணுவ படை தேர்வில் தேர்ச்சி ெபற்ற போதிலும், இன்னும் பணி நியமன கடிதம் வழங்கப்படாததை கண்டித்து சில இளைஞர்கள் சமீபத்தில் போராட்டம் நடத்தினர். அந்த வீடியோவை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- பிரதமர் மோடி வெளிநாடுகளில் கூட தன்னுடைய நண்பர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கிறார். ஆனால் சொந்த நாட்டு இளைஞர்களை வேலை இல்லாதவர்களாக விட்டு விட்டார். அந்த இளைஞர்கள் மீது ஏன் இவ்வளவு பாரபட்சம் காட்டுகிறார்? இவ்வாறு … Read more

வெற்றியை நெருங்கும் இங்கிலாந்து; 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் சேர்ப்பு

பர்மிங்கம், கடந்த ஆண்டு கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட இங்கிலாந்து-இந்தியா இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் எட்ஜ்பாஸ்டன் நகரில் உள்ள பர்மிங்கம் மைதானத்தில் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 146 ரன்களையும், ரவிந்திர ஜடேஜா 104 ரன்களையும் … Read more