அமெரிக்க குடியுரிமையை அதிகம் விரும்பும் இந்தியர்கள்..!

வாஷிங்டன், கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு மத்தியில் நடப்பு நிதி ஆண்டில் இந்தியர்கள் பலரும் அமெரிக்க குடியுரிமையை விரும்பி பெற்றுள்ளனர். அமெரிக்கா 246-வது சுதந்திரதினத்தை கொண்டாடி வருகிறது. அமெரிக்க குடியுரிமை பெறும் வெளிநாட்டினரை ஆண்டு தோறும் ஜூலை மாதம் வரவேற்பது வழக்கம். அந்த வகையில் 32 கோடி மக்கள் தொகை கொண்ட அமெரிக்காவில் குடியுரிமை பெற அதிகம் விரும்பி வரும் வெளிநாட்டினரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மெக்சிகோவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் இந்தியர்கள் உள்ளனர். நடப்பு … Read more

இமாசலபிரதேசத்தில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் உள்பட 12 பேர் சாவு

சிம்லா, கட்டுப்பாட்டை இழந்தது இமயமலை பிராந்தியத்தில் அமைந்துள்ள இமாசல பிரதேச மாநிலம், மலைப்பிரதேச பகுதிகள் மற்றும் பள்ளத்தாக்குகளை கொண்டதாகும். இந்த மாநிலத்தின் குலுவில் இருந்து ஷைன்ஷெர் பகுதிக்கு நேற்று காலையில் தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமான பயணிகள் இருந்தனர். இந்த பஸ் ஜங்லா கிராமத்துக்கு அருகே உள்ள கொண்டை ஊசி வளைவு ஒன்றில் திரும்பியபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் … Read more

டிஎன்பிஎல்: திருப்பூரை வீழ்த்தி திண்டுக்கல் அபார வெற்றி…!

திண்டுக்கல், டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 9-வது லீக் ஆட்டம் இன்று திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி திண்டுக்கல் டிராகஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் திண்டுக்கல் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து திருப்பூர் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் அனிருதா மற்றும் சித்தார்த் களமிறங்கினர். சித்தார்த் ரன் எதுவும் எடுக்காமலும் (0), அனிருதா 8 ரன் எடுத்திருந்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். அடுத்துவந்த அரவிந்த் சற்று நிலைத்து … Read more

அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பு பகுதியில் திடீர் துப்பாக்கி சூடு

வாஷிங்டன் டி.சி., அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் தேசிய சுதந்திர தின அணிவகுப்பு நடந்து வருகிறது. அமெரிக்கா உருவான 246வது ஆண்டு தினத்தினை முன்னிட்டு நிகழ்ச்சிகள் களை கட்டி வருகின்றன. இல்லினாய்ஸ் மாகாணத்தில், சிகாகோ புறநகரில் உள்ள ஐலேண்ட் பூங்கா பகுதியிலும் சுதந்திர தின அணிவகுப்பு நடந்தது. இந்த நிலையில், அணிவகுப்பு தொடங்கிய பின்னர் 10 நிமிடங்கள் வரை துப்பாக்கி சூடு சத்தம் கேட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடையே அச்ச உணர்வு எழுந்தது. ஐலேண்ட் பூங்காவில் … Read more

மராட்டிய சபாநாயகர் தேர்தலில் பா.ஜனதா வெற்றி; ஷிண்டே அரசு இன்று பலப்பரீட்சை

மராட்டியத்தில் கடந்த 2½ ஆண்டுகளாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தது. ஆட்சி கவிழ்ந்தது இந்தநிலையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் இந்த ஆட்சி கவிழ்ந்தது. கடந்த புதன் கிழமை உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த நாளே அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியானார். இந்தநிலையில் காங்கிரஸ் தலைவர் நானா படோலே ராஜினாமா செய்ததால், … Read more

ரோஜர் பெடரர் வருகை… 'வாத்தி கம்மிங்' என்று பதிவிட்ட விம்பிள்டன்

லண்டன், ஆண்டுதோறும் 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 1877 முதல் விம்பிள்டன் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர், 8 முறை ஒற்றையர் ஆடவர் பிரிவில் பட்டம் வென்றுள்ளார். அவர் நடப்பு தொடரில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், அவர் சென்டர் கோர்ட்டின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வந்திருந்தார். அப்போது அவர் … Read more

பிரான்சில் அதிகரிக்கும் கொரோனா – முககவசம் அணிய மக்களுக்கு அறிவுறுத்தல்

பாரீஸ், ஐரோப்பா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் சூழலில் பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்றுக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த நாட்டு அரசு தரவுகளின்படி ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 1,000 நோயாளிகள் கொரோனா தொற்றுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகின்றனர். சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் சுற்றுலா மீண்டும் வளர்ந்து வரும் நிலையில் அங்கு தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியிருப்பது அந்த நாட்டு அரசை கவலையடைய செய்துள்ளது. எனினும் சுற்றுலா பயணிகளுக்கான … Read more

கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் யஷ்வந்த் சின்கா ஆதரவு திரட்டினார்; தேவேகவுடாவை சந்திக்க மறுப்பு

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வருகிற 24-ந்தேதி முடிவடைவதால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 18-ந்தேதி நடக்க இருக்கிறது. ஜனாதிபதி தேர்தல் இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜனதா கூட்டணி சார்பில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பழங்குடி இன தலைவரும், ஜார்கண்ட் மாநில முன்னாள் கவர்னருமான திரவுபதி முர்மு (வயது 64) போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய நிதி மந்திரியான யஷ்வந்த் சின்கா (84) களமிறக்கப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் திரவுபதி … Read more

பெண்கள் உலக கோப்பை ஆக்கி: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் 'டிரா'

ஆம்ஸ்டெல்வீன், 15-வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி நெதர்லாந்து மற்றும் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி, நேற்று தனது தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. 9-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் இசபெல்லா பீட்டரும், 28-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பில் இந்தியாவின் வந்தானா கட்டாரியாவும் … Read more

ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 51 இலங்கை அகதிகள் கைது

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பட்டினியை நோக்கி அவர்கள் தள்ளப்பட்டு உள்ளனர். எனவே அவர்கள் இலங்கையில் இருந்து வெளியேறி இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவ்வாறு செல்பவர்களை இலங்கை கடற்படை அடிக்கடி கைது செய்து வருகிறது. அந்தவகையில் இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் கடற்படையினர் நேற்று காலையில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மிகப்பெரிய மீன்பிடி படகு … Read more