உ.பி: மின்னல் தாக்கி 3 பேர் பலி

லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தின் சிதாபூர் மாவட்டம் சீம்ரா நக்ரூல் கிராமத்தை சேர்ந்த சம்பத் (வயது 32) மற்றும் அவரது தேவி (30) நேற்று வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்தது. அப்போது, இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. திடீரென வயலில் வேலை செய்துகொண்டிருந்த சம்பத், தேவி மீது மின்னல் பாய்ந்தது. இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதேபோல், கீவழ்பூர்வா கிராமத்தை சேர்ந்த சஞ்சய் (35) அவரது மகளும் … Read more

டி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல்-திருப்பூர் அணிகள் இன்று மோதல்

6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க சுற்று நெல்லையில் நடந்தது. அடுத்தகட்ட லீக் ஆட்டங்கள் தற்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. மூன்று நாள் இடைவெளிக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) நடக்கும் 9-வது லீக் ஆட்டத்தில் அனிருதா தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி, ஹரி நிஷாந்த் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்சை எதிர்கொள்கிறது. இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் நேரடி ஒளிபரப்பு … Read more

இஸ்ரேலில் எரிவாயு கிணறு மீது தாக்குதல் நடத்த முயற்சி

ஜெருசலேம், இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமான இயற்கை எரிவாயு கிணறு ஒன்று மத்திய தரைக்கடலில் அமைந்துள்ளது. ஆனால் இந்த எண்ணெய் கிணறு தங்களுக்கு சொந்தமானது என அண்டை நாடான லெபனான் சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த விவகாரத்தில் இருநாடுகளுக்கும் இடையில் மோதல் நீடிக்கிறது. இந்த நிலையில் லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு நேற்று சர்ச்சைக்குரிய அந்த எரிவாயு கிணறு மீது தாக்குதல் நடத்தும் முயற்சியாக 3 ‘டிரோன்’ களை இஸ்ரேல் வான்பரப்புக்கு அனுப்பியது. எனினும் இதை உடனடியாக … Read more

நில தகராறு: பழங்குடியின பெண்ணுக்கு தீ வைப்பு – கொடூர சம்பவம்

போபால், மத்தியபிரதேச மாநிலம் கனா மாவட்டம் தனொரியா கிராமத்தை சேர்ந்த 38 வயதான பழங்குடியின பெண் ராம்பிரயாரி பாய். இவரது கணவர் அர்ஜூன். இந்த தம்பதிக்கு சொந்தமான விவசாய நிலத்தை அதேபகுதியை சேர்ந்த சிலர் அபகரித்துள்ளனர். இது தொடர்பாக ஆக்கிரமிப்பு கும்பலுக்கும் ராம்பிரியாரிக்கும் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலயில் ராம்பிரியாரை தாக்கிய அந்த கும்பல் விவசாய நிலத்திலேயே அவர் மீது பெட்ரோல் வீசி தீ வைத்தது. தீ வைத்த பின்னர் அதை வீடியோவாகும் … Read more

விம்பிள்டன் டென்னிஸ்: ஜெர்மனி வீராங்கனைகள் கால்இறுதிக்கு தகுதி

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 97-வது இடம் வகிக்கும் ஜூலே நீமையர் (ஜெர்மனி) 6-2, 6-4 என்ற நேர் செட்டில் உள்ளூர் வீராங்கனை ஹீதர் வாட்சனை தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார். 22 வயதான நீமையர் தனது அறிமுக விம்பிள்டன் தொடரிலேயே கால்இறுதியை எட்டி கவனத்தை ஈர்த்துள்ளார். மற்றொரு ஜெர்மனி வீராங்கனை தாட்ஜனா மரியா 5-7, 7-5, … Read more

டென்மார்க்: வணிகவளாகத்தில் துப்பாக்கிச்சூடு – பலர் படுகாயம்

கோபன்ஹேகன், டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் உள்ள விமான நிலையம் அருகே வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில், அந்த வணிக வளாகத்தில் இன்று திடீரென துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. வணிக வளாகத்திற்கு வந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு திடீரென தாக்குதல் நடத்தினார். இதனால், அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் வணிக வளாகத்தில் இருந்து அலறியடித்து வெளியே ஓடினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் வணிக … Read more

மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் ராணுவ அதிகாரி பலி – சத்தீஸ்கர் முதல்-மந்திரி இரங்கல்

ராய்ப்பூர், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் நோனே மாவட்டத்தில் துபுல் என்ற இடத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 27 ராணுவ வீரர்கள் உட்பட 42 பேர் உயிரிழந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம், துர்க் மாவட்டத்தைச் சேர்ந்த லெப்டினன்ட் கர்னல் கபில்தேவ் பாண்டே மணிப்பூரில் நிலச்சரிவில் உயிரிழந்ததற்கு அம்மாநில முதல்-மந்திரி பூபேஷ் பாகேல் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “பிலாய் நேரு நகர் பகுதியில் வசிக்கும் லெப்டினன்ட் கர்னல் கபில் தேவ் … Read more

சாத்தூரில் ஐவர் கால்பந்தாட்ட போட்டி

விருதுநகர் சாத்தூர், சாத்தூரில் புனித தனிஸ்லாஸ் மேல்நிலைப்பள்ளியில் ஐவர் கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை, திருச்சி, மதுரை, தேனி, நாகர்கோவில், கோவில்பட்டி, சிவகாசி, விருதுநகர், நெல்லை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம் 32 அணிகள் பங்கேற்றன. இப்போட்டியில் சிறப்பு விருந்தினராக துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் சிவகாசி அணியினர் முதல் பரிசையும், நாகர்கோவில் அணியினர் 2-வது பரிசையும், விருதுநகர் அணியினர் 3-வது பரிசையும் வென்றனர். போட்டிக்கான … Read more

ரஷியாவில் உக்ரைன் எல்லை அருகே தொடர் குண்டு வெடிப்பு; 3 பேர் உயிரிழப்பு

மாஸ்கோ, உக்ரைன் நாட்டின் மீது ரஷியா 4 மாதங்களுக்கும் மேலாக போர் தொடுத்து வருகிறது. இதில் உக்ரைனின் பல நகரங்கள் முற்றிலுமாக சின்னாபின்னமாகி உள்ளன. ஆனாலும் உக்ரைன் வீரர்கள் தொடர்ந்து ரஷிய படைகளை எதிர்த்து உறுதியுடன் சண்டையிட்டு வருகின்றனர். இதனிடையே உக்ரைன் வீரர்கள் ரஷிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக ரஷியா அவ்வப்போது குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் நாட்டின் எல்லையில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள ரஷியாவின் பெல்கோரோட் நகரில் நேற்று … Read more

திருவனந்தபுரம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை

திருவனந்தபுரம், இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- ஓட்டலில் சோதனை திருவனந்தபுரம் அருகே உள்ள கல்லம்பலத்தை சேர்ந்தவர் மணிக்குட்டன் (வயது 46). இவர் அந்த பகுதியில் சிறிய ஓட்டல் நடத்தி வந்தார். இவருடைய மனைவி சந்தியா (36). இவர்களுக்கு அஜீஷ் (19) என்ற மகனும், அமேயா (13) என்ற மகளும் இருந்தனர். மேலும் சந்தியாவின் தாய் வழி உறவினர் தேவகி (85) என்பவரும் மணிக்குட்டன் வீட்டில் வசித்து வந்தார். ஓட்டல் தொழிலில் வியாபாரம் சுமாராக … Read more