விம்பிள்டன் டென்னிஸ்: பிரான்ஸ் வீராங்கனையிடம் வீழ்ந்தார் ஸ்வியாடெக்

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து), 37-ம் நிலை வீராங்கனை அலிசே கோர்னெட்டை (பிரான்ஸ்) சந்தித்தார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அனுபவம் வாய்ந்த கோர்னெட் 6-4, 6-2 என்ற நேர் செட்டில் ஸ்வியாடெக்குக்கு அதிர்ச்சி அளித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் சர்வதேச டென்னிசில் தொடர்ச்சியாக … Read more

ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் தலையிடாதீர்கள்; உலக நாடுகளுக்கு தலீபான் எச்சரிக்கை

காபூல், ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தலீபான் பயங்கவராதிகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். அப்போது முதல் ஆப்கானிஸ்தான் மக்கள் பொருளாதார நெருக்கடி, உணவு பற்றாக்குறை போன்ற பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இது ஒரு புறமிருக்க ஆப்கானிஸ்தான் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தலீபான்கள் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றனர். இதனை சர்வதேச நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என உலக நாடுகளை … Read more

மணிப்பூர் நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு

இம்பால், நிலச்சரிவு வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் நோனே மாவட்டத்தில் துபுல் என்ற இடத்தில் ரெயில்வே கட்டுமானப் பணி நடந்துவருகிறது. கடந்த புதன்கிழமை இரவு அப்பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களும், அவர்களின் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டிருந்த ராணுவ வீரர்களும் நிலச்சரிவில் சிக்கினர். மறுநாள் காலை ராணுவத்தினர் உள்ளிட்ட மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியை மேற்கொண்டனர். 25 உடல்கள் மீட்பு நேற்று 3-வது நாளாக மீட்புப் பணி … Read more

விம்பிள்டன் : கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா ஜோடி இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்

லண்டன், ஆண்டுதோறும் 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடக்கிறது. இதில் இன்று நடந்த கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் (இந்தியா ) சானியா மிர்சா – மேட் பாவிக் (குரோஷியா ) இணை டேவிட் வேகா ஹெர்னாண்டஸ் (ஸ்பெயின்) – நடேலா டிசலமிட்ஸே (ஜார்ஜியா ) இணையை எதிர்கொண்டனர். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 6-4 3-6, 7-6(3) … Read more

குரங்கு அம்மைக்கு தடுப்பூசி போட வேண்டுமா? உலக சுகாதார அமைப்பு பதில்

மாஸ்கோ, இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், ஜெர்மனி என உலக நாடுகள் பலவற்றில் குரங்கு அம்மை நோய் பாதித்துள்ளது. 51 நாடுகளில் 5,100 பேருக்கு இந்த நோய்த்தாக்கம் உள்ளது. இதனால் இந்த நோய்க்கு எதிராக தடுப்பூசி போட வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் ரஷிய பிரிவின் தலைவர் மெலிட்டா வுஜ்னோவிக் கூறுகையில், ” குரங்கு அம்மைக்கு எதிராக பெருந்திரளான மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டிய தேவை இப்போதைக்கு இல்லை. ஆனால் சில குறிப்பிட்ட … Read more

மராட்டியத்தில் மேலும் 2 ஆயிரத்து 971 பேருக்கு கொரோனா

மும்பை, மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, மராட்டியத்தில் மேலும் 2 ஆயிரத்து 971 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 79 லட்சத்து 82 ஆயிரத்து 334 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 3 ஆயிரத்து 515 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 78 லட்சத்து 10 ஆயிரத்து 953 … Read more

2-ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் சேர்ப்பு

பர்மிங்கம், கடந்த ஆண்டு கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட இங்கிலாந்து-இந்தியா இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் எட்ஜ்பாஸ்டன் நகரில் உள்ள பர்மிங்கம் மைதானத்தில் நேற்று முன் தினம் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் எடுத்தது. போட்டியின் 2-ம் நாள் நேற்று நடைபெற்ற நிலையில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து … Read more

அடுத்த ஆண்டு முதல் வெனிஸ் நகரில் சுற்றுலா பயணிகளுக்கு நுழைவு கட்டணம்

வெனிஸ், இத்தாலியின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள வெனிஸ் நகரம், நூற்றுக்கும் மேற்பட்ட தீவுகளை உள்ளடக்கியது. பாரம்பரிய கட்டிடங்கள் மற்றும் கலாசாரம் கொண்ட நகரமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட வெனிஸ் நகரம் உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. ஆண்டு தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வெனிசூலா வந்து செல்கின்றனர். இந்த சூழலில் சமீபத்திய ஆண்டுகளில் வெனிஸ் நகரில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருவது அந்த நகருக்கு பெரும் ஆபத்தாக மாறி வருகிறது. இந்த நிலையில் அதிகப்படியான … Read more

புலி வரும்போது நரிகள் ஓடிவிடும்; பிரதமர் மோடியின் தெலுங்கானா வருகை குறித்து பாஜக தலைவர் கருத்து

ஐதராபாத், பாஜக தேசிய பொதுக்குழு கூட்டம் மற்றும் அரசு பொதுநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தெலுங்கானா வந்துள்ளார். தெலுங்கானாவுக்கு வந்த பிரதமர் மோடியை அம்மாநில மந்திரி ஸ்ரீனிவாஸ் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார். ஆனால், பிரதமர் மோடியை வரவேற்க தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் விமான நிலையம் வரவில்லை. அதேவிமான நிலையத்தில் சில மணி நேரத்திற்கு முன் வந்த ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை முதல்-மந்திரி சந்திரசேகர … Read more

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5வது டெஸ்ட் போட்டி மழையால் பாதிப்பு

பர்மிங்காம், கடந்த ஆண்டு கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.முதல் இன்னிங்சில் இந்திய அணி 84.5 ஓவர்களில் 416 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக அதிரடியா விளையாடிய பண்ட் 146 ரன்களும் ,ஜடேஜா 104 ரன்களும் ,பும்ரா 31 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய … Read more