மங்களூரு-டெல்லி இடையே நேரடி விமான சேவை தொடக்கம்

மங்களூரு, தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு பஜ்பே பகுதியில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து துபாய், யூ.ஏ.இ. நாடுகளுக்கும், மும்பை, பெங்களூருவுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மங்களூருவில் இருந்து தலைநகர் டெல்லிக்கு நேரடி விமான சேவை தொடங்க வேண்டும் என்று கடலோர மாவட்ட மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி நேற்று முதல் மங்களூருவில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்ட இண்டிகோ … Read more

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் : ரிஷப் பண்ட் அதிரடி சதம்

பர்மிங்காம், கடந்த ஆண்டு கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில்லும், புஜாராவும் களமிறங்கினர். கில் 17 ரன்னிலும், புஜாரா 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். விகாரியும் 20 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 11 ரன்னில் போல்டானார். ஸ்ரேயஸ் அய்யர் … Read more

உக்ரைனில் குடியிருப்பு கட்டிடம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்: 21 பேர் பலி

கீவ், உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலானது சுமார் 5 மாதங்களை எட்டி விட்டது. உக்ரைனின் பல நகரங்களை கைப்பற்றிய ரஷியா தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி கொண்டே வருகிறது. மறுபுறம் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவி, நிதி உதவி அளித்து வருகின்றன. இந்த நிலையில், உக்ரைனின் … Read more

"இந்தியாவிற்கு தற்போது ஒற்றுமை மிகவும் தேவை" – அமர்த்தியா சென் கருத்து

கொல்கத்தா, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், கொல்கத்தாவின் சால்ட் லேக் பகுதியில் அமைந்துள்ள அமர்த்தியா சென் ஆய்வு மையத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது அவர் பேசியதாவது;- “யாரேனும் என்னிடம் நீங்கள் பயப்படுகிறீர்களா என இப்போது கேட்டால், அதற்கு துளி கூட யோசிக்காமல் ஆமாம் என சொல்வேன். நான் அச்சம் கொள்வதற்கு காரணம் உள்ளது. நாட்டின் தற்போதைய நிலை தான் நான் அச்சம் கொண்டுள்ளதற்கு காரணம். நாடு ஒற்றுமையாக … Read more

ரிஷப் பண்ட் அரைசதம்: தேநீர் இடைவேளை வரை இந்திய அணி 174-5

பர்மிங்காம், கடந்த ஆண்டு கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில்லும், புஜாராவும் களமிறங்கினர். கில் 17 ரன்னிலும், புஜாரா 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். விகாரியும் 20 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 11 ரன்னில் போல்டானார். ஸ்ரேயஸ் அய்யர் … Read more

"காற்றில் பறந்துவரும் பொருட்கள்" மற்றும் பலூன்களால் கொரோனா பரவுகிறது; எச்சரிக்கை தேவை – வடகொரியா

பியோங்யாங்(வடகொரியா), உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், வடகொரியாவையும் கொரோனா விட்டுவைக்கவில்லை.கொரிய தீபகற்பத்தில் வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே காலங்காலமாக மோதல் இருந்து வருகிறது. அங்கு வைரசால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்நாட்டு அரசு வெளியிடும் கொரோனா பாதிப்பு விவரங்கள், யதார்த்த கள நிலவரத்தை பிரதிபலிக்கவில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. இந்நிலையில், வடகொரியாவின் குடிமக்களை உஷாராக இருக்குமாறு அந்நாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தென்கொரியாவை ஒட்டிய எல்லை பகுதிகளில் இருந்து ‘காற்றில் … Read more

மத்திய விசாரணை அமைப்பு முன் ஆஜராவது நமது கடமை – சஞ்சய் ராவத்

மும்பை, நிலமோசடி தொடர்பாக பதியப்பட்ட வழக்கில் இன்று நேரில் ஆஜராகும்படி சிவசேனா மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன் சஞ்சய் ராவத் இன்று ஆஜரானார். அவரிடம் 10 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணைக்கு பின் சஞ்சய் ராவத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சஞ்சய் ராவத் பேசுகையில், மத்திய விசாரணை குழு மனதில் எதேனும் சந்தேகங்கள் அவர்களின் முன் நேரில் ஆஜராவது … Read more

பெண்கள் கிரிக்கெட் : முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி

பல்லேகலே , இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணி 48.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக நிலாக்ஷி டி சில்வா 43 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் … Read more

"மேலாடையின்றி இருந்தால் அருவெறுப்பாக இருக்கும்" மேற்கு நாடுகள் தலைவர்கள் குறித்து புதின் கிண்டல்

மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷிய அதிபர் புதின் போர் தொடுத்து இருப்பதால், மேற்கு நாடுகளின் வெறுப்புக்கு ஆளாகி இருக்கிறார். இந்நிலையில், ஜெர்மனியில் சில தினங்களுக்கு முன் நடந்த ஜி-7 மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் டிருடேவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மேல் சட்டை இல்லாமல் வெறும் உடம்புடன் குதிரையில் செல்லும் வீடியோ காட்சியை பார்த்து, இந்த தலைவர்கள் கிண்டலடித்தனர். … Read more

உதய்பூர் படுகொலை சம்பவம்: பயங்கரவாதிகளுக்கு தொடர்பு – முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை

பெங்களூரு, பெங்களூருவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய தையல்காரரான கன்னையா லால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலை பயங்கரவாதத்தின் ஒரு பாகம் ஆகும். இதற்கு பின்னணியில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதற்கான சந்தேகங்கள் உள்ளது. இதற்கு பின்னால் சர்வதேச அளவில் சதிநடந்திருக்கிறது. தையல்காரர் படுகொலைக்கு பின்னால் இருப்பவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இந்த படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை தூக்கில் விட … Read more