இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

லண்டன், ஒரு டெஸ்ட், மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இதனிடையே கடந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட இந்தியா- இங்கிலாந்து கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்குகிறது. இந்த ஒரே டெஸ்ட் 2021-ம் ஆண்டு கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட போட்டியாகும். கடந்த ஆண்டு ஆகஸ்டு- செப்டம்பரில் இந்திய அணி இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் முதல் 4 டெஸ்டுகளில் … Read more

ஒப்பந்ததாரர்களிடம் இருந்து ஆவணங்களை பெற்ற மத்திய உள்துறை அதிகாரிகள்

பெங்களூரு: 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு கர்நாடக அரசு ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவராக இருந்து வருபவர் கெம்பண்ணா. இவர், கடந்த ஆண்டு(2021) பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில், கர்நாடக அரசின் திட்ட பணிகளில் 40 சதவீதம் வரை கமிஷன் வழங்குமாறு வற்புறுத்தப்படுவதாகவும், இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கெம்பண்ணா கூறி இருந்தார். பிரதமருக்கு எழுதப்பட்ட இந்த கடிதம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பையும், ஆளும் பா.ஜனதா அரசு … Read more

டிஎன்பிஎல்: மதுரை அணிக்கு 152 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது கோவை கிங்ஸ்

திண்டுக்கல், 8 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் 8-வது லீக் ஆட்டத்தில் சதுர்வேத் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணியும், ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி கோவை கிங்ஸ் அணி முதலில் களமிறங்க உள்ளது. தொடக்க வீரர்களாக ஸ்ரீதர் ராஜுவும், சுரேஷ் குமாரும் களமிறங்கினர். ஸ்ரீதர் ராஜு ரன் … Read more

அனைத்து மதங்களையும் மதித்தால் ஒற்றுமையுடன், அமைதியாக வாழலாம் – ஐ.நா

நியூயார்க், ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் கன்னையா லால் என்பவரை, ரியாஸ் அக்தாரி, கவுஸ் முகமது ஆகியோர் கொலை செய்து, அதை ‘வீடியோ’ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதனால், உதய்பூரில் கலவரம் ஏற்பட்டதை அடுத்து, அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது பற்றியும், சர்ச்சைக்குரிய கருத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட, ‘தனியார் செய்தி நிறுவனத்தின்’ இணை நிறுவனர் முகமது சுபைர் கைது குறித்தும், ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரசின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறியதாவது:- … Read more

கர்நாடக சட்டசபை தேர்தலில் 150 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும் -சித்தராமையா பேட்டி

பெங்களூரு: காங்கிரஸ் மேலிடம் அழைப்பின் பேரில் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமைய டெல்லியில் முகாமிட்டுள்ளனர். டெல்லியில் ராகுல்காந்தியை சந்தித்து 2 பேரும் பல மணிநேரம் ஆலோசனை நடத்தினார்கள். இந்த நிலையில் டெல்லியில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- கர்நாடக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி எப்போது வேண்டுமானாலும் தயாராக உள்ளது. சட்டசபை தேர்தலில் கருத்து கணிப்பு குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. … Read more

இந்திய கிரிக்கெட் வீரர் லோகேஷ் ராகுலுக்கு அறுவை சிகிச்சை – ஜெர்மனியில் நடந்தது

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரும், துணை கேப்டனுமான லோகேஷ் ராகுல் வயிற்றின் அடிப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அடிக்கடி அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் சமீபத்தில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் இருந்து விலகினார். இங்கிலாந்து தொடருக்கான அணியிலும் இடம் பெறவில்லை. இந்த நிலையில் அவரை சிறப்பு சிகிச்சைக்காக இந்திய கிரிக்கெட் வாரியம் ஜெர்மனிக்கு அனுப்பி வைத்தது. அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட லோகேஷ் ராகுலுக்கு அடிவயிற்று பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை … Read more

சட்டை இல்லாமல் பார்க்க "கேவலமாக" இருப்பீர்கள் – ஜி-7 மாநாட்டில் கேலி செய்த தலைவர்களுக்கு புதின் பதிலடி!

மாஸ்கோ, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மேல் சட்டையின்றி, வெறும் மார்போடு குதிரை சவாரி செய்யும் புகைப்படம் வெளியாகியது. ரஷிய அதிபர் புதின் ஒரு திறமையான டேக்வாண்டோ பயிற்சியாளர் ஆவார். அவர் பலமான மனிதர் என்பதை காட்டுவதற்காக அவருடைய இது போன்ற புகைப்படங்கள் ரஷிய அதிபர் மாளிகையால் அடிக்கடி வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்தை பார்த்த பின், பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இருவரும் புதினைப் பற்றி கேலி … Read more

தெருநாய் கடித்து பலியான குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

தார்வார்: ரூ.10 லட்சம் நிவாரணம் பெலகாவி மாவட்டம் பாலிகுந்தரா கிராமத்தை சேர்ந்தவர் யூசுப். இவருக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருந்தது. இந்த நிலையில், சமீபத்தில் அந்த குழந்தையை தெரு நாய் கடித்து கொன்று இருந்தது. ஆனால் தெரு நாய் கடித்து குழந்தை பலியானதற்காக பெலகாவி மாநகராட்சி சார்பில் எந்த நிவாரணமும் வழங்காமல் இருந்தது. இதுபற்றி தார்வார் ஐகோர்ட்டு கிளையில் யூசுப் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தனது குழந்தை தெரு … Read more

டிஎன்பிஎல்: கோவைக்கு எதிராக டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சு தேர்வு

திண்டுக்கல், 8 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் 8-வது லீக் ஆட்டத்தில் சதுர்வேத் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணியும், ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி கோவை கிங்ஸ் அணி முதலில் களமிறங்க உள்ளது. தினத்தந்தி Related Tags : டிஎன்பிஎல் மதுரை பந்துவீச்சு TNPL Madurai Bowling

நிலக்கரி தேவை அதிகரிப்பால் சுரங்கப் பணிகளை தொடர செக் குடியரசு முடிவு

ப்ராக், உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததை தொடர்ந்து ரஷிய நிலக்கரியை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்யதது. இதன் காரணமாக செக் குடியரசு நாடுகள் உள்ளிட்ட நாடுகளில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முன்தாக, செக் குடியரசு தனது நிலக்கரி சுரங்கங்களில் பணியை நிறுத்தி வைக்க திட்டிமிட்டிருந்தது. இந்த நிலையில், மீண்டும் அந்த சுரங்கங்களில் மீண்டும் பணியை தொடர அந்நாடு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் நிதி மந்திரி தெரிவிக்கையில், நாட்டின் வடக்கு பகுதியில் … Read more