தலையில் தேங்காய் விழுந்ததால் நடுரோட்டில் ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த பெண்! அதிர்ச்சி வீடியோ

கோலாலம்பூர், மலேசியாவில் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த பெண்ணின் தலையில் தேங்காய் விழுந்ததில் அவர் ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்தார். இந்த சம்பவம் அங்கிருந்த கேமராவில் பதிவாகி இணையத்தில் பரவி வருகிறது. புவான் அனிதா என்பவர் சாலையில் தன் மகளுடன் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தார். ஸ்கூட்டரை அவரது மகள் ஓட்டிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்ற ஒரு தென்னை மரத்திலிருந்து தேங்காய் ஒன்று கீழே விழுந்தது. அது அனிதாவின் தலையில் காயத்தை ஏற்படுத்தியது. இதை சற்றும் எதிர்பார்க்காத அவர், … Read more

பெங்களூருவில், 8 லட்சம் லிட்டர் டீசல் கையிருப்பு உள்ளது-மந்திரி ஸ்ரீராமுலு பேட்டி

பெங்களூரு: சில்லரை சந்தைகள் பெங்களூருவில் பி.எம்.டி.சி. பஸ்களின் பணிமனைகளுக்கு டீசல் வினியோகம் செய்ய கூடாது என்று பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் நகரில் பஸ்களை இயக்குவதில் சிக்கல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து மந்திரி ஸ்ரீராமுலு பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- டீசல் கையிருப்பு பெங்களூருவில் உள்ள பி.எம்.டி.சி. பணிமனைகளில் 8 லட்சம் லிட்டர் டீசல் கையிருப்பு உள்ளது. நகரில் அனைத்து பஸ்களும் தங்கு தடையின்றி இயக்கப்படுகின்றன. … Read more

இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ கடும் கண்டனம்

பர்மிங்காம், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்தியா- லீசெஸ்டர்ஷைர் அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் நடந்தது. இந்த பயிற்சி ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. போட்டியின் போது இந்திய கேப்டன் ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்திய அணியில் சில வீரர்களுக்கு பிசிசிஐ … Read more

ஜெர்மனியில் ஜி-7 மாநாட்டை நிறைவு செய்து ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டார் பிரதமர் மோடி

பெர்லின், ஜெர்மனியில் 48-வது ஜி7 மாநாடு நேற்றும், இன்றும் நடைபெற்றது. அம்மாநாட்டில் கலந்துகொள்ளும்படி இந்திய பிரதமர் மோடிக்கு ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். சுற்றுச்சூழல், எரிசக்தி, காலநிலை, உணவு பாதுகாப்பு, சுகாதாரம், பாலின சமத்துவம் மற்றும் ஜனநாயகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஜி7 மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். … Read more

ஆவணங்கள் சரிபார்ப்பு என்ற பெயரில் தேவையில்லாமல் வாகன ஓட்டிகளை நிறுத்தி சோதனை செய்யக்கூடாது

பெங்களூரு: டுவிட்டர் மூலம் புகார் கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்து வருபவர் பிரவீன்சூட். இவருக்கு டுவிட்டர் மூலமாக பெங்களூருவை சேர்ந்த ஸ்ரீவஸ்தவ் வாஜபேயம் என்பவர் நேற்று முன்தினம் ஒரு புகார் அளித்திருந்தார். அதில், பெங்களூரு போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனராக நீங்கள்(அதாவது டி.ஜி.பி. பிரவீன்சூட்) இருந்த போது, நகரில் தேவையில்லாமல் வாகனங்ளை தடுத்து நிறுத்தி ஆவணங்களை பரிசோதனை செய்யக்கூடாது என்று கூறி இருந்தீர்கள். தற்போது நீங்கள் கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி.யாக உள்ளீர்கள். இதற்கு முன்பு … Read more

தேசிய கைப்பந்து போட்டியில் தேனி அரசு விளையாட்டு விடுதி மாணவி சாதனை

தேனி மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் ஆனந்தி (வயது 17). இவர் தேனி அரசு விளையாட்டு விடுதியில் தங்கி கைப்பந்து பயிற்சி பெற்று வருகிறார். அவர் பழனிசெட்டிபட்டி பழனியப்பா மேல்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு பிளஸ்-2 படித்து முடித்துள்ளார். இந்த மாணவி அரியானாவில் கடந்த 4-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடந்த தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் தமிழக அணியின் சார்பில் பங்கேற்றார். இந்த போட்டியில் அவர் தங்கப்பதக்கம் வென்றார். மேலும், இந்த மாணவி பிரான்ஸ் நாட்டில் நடந்த … Read more

இலங்கையில் ஜூலை 10-ம் தேதி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல்..!!

கொழும்பு, அன்னியச் செலாவணி பற்றாக்குறை, அதையடுத்து தொடர்வினையாய் ஏற்பட்ட பிரச்சினைகளால் அண்டை நாடான இலங்கை தவித்துவருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து பொதுமக்களின் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இதுதொடர்பான வன்முறைகளில் ஒரு எம்.பி. உள்பட 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர். பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட கொந்தளிப்பான சூழ்நிலையால் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட மந்திரிகள் ராஜினாமா செய்திருக்கின்றனர். இந்த சூழலில் இலங்கையில் 2 மாதங்களில் 3-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இலங்கையில் ஜூலை … Read more

2 மாத பெண் குழந்தையை கொன்ற வழக்கில் தாய் விடுவிப்பு- போதிய ஆதாரம் இல்லை என கூறி கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு

பெங்களூரு: 2 மாத குழந்தையை கொன்ற வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என கூறி தாயை விடுவித்து கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. 2 மாத பெண் குழந்தை ஆந்திர மாநிலம் அனந்தபுரா மாவட்டம் மடகஷிரா கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது மனைவி கவிதா. இந்த தம்பதிக்கு 2 மாத பெண் குழந்தை இருந்தது. ஆனால் அந்த குழந்தை பிறந்தது முதல் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தது. இதனால் குழந்தைக்கு துமகூரு மாவட்டம் கொரட்டகெரே டவுனில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்து … Read more

இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மோர்கன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..? ரசிகர்கள் அதிர்ச்சி

லண்டன், இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மோர்கன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளார். அயர்லாந்தை சேர்ந்த இயன் மோர்கன் அயர்லாந்து அணியில் அறிமுகமாகி பின்னர் இங்கிலாந்துக்காக ஆடி வருகிறார். 2015இல் அப்போதைய இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக்கிற்கு பின் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 2015 உலக கோப்பையில் படுதோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறிய இங்கிலாந்து அணியை, அதன்பின்னர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அச்சமற்ற கிரிக்கெட் ஆடி அசாத்திய ஸ்கோர்களை அடிக்கவல்ல மற்றும் எதிரணிகளை அடித்து … Read more

ஜி-7 மாநாடு நடைபெறும் ஸ்க்லோஸ் எல்மாவ் பகுதிக்கும் இந்தியாவுக்கும் உள்ள இணைப்பு – சுவாரசியமான வரலாறு!

பெர்லின், ஜெர்மனியில் உள்ள ஸ்க்லோஸ் எல்மாவ் நகரில் நடைபெறும் ஜி7 மாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் ஜி-7 நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான ஜி-7 மாநாடு, ஜெர்மனியின் எல்மாவ் நகரில் 2 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டது. நேற்று மாநாடு தொடங்கியது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்பட 7 நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். அதில் சுவாரசியம் என்னவென்றால், இந்த … Read more