ஜி-20 நாடுகள் உச்சி மாநாடு குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையுடன் வெளியுறவு முன்னாள் செயலாளர் சந்திப்பு

பெங்களூரு: 10 கூட்டங்கள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை மத்திய அரசின் முன்னாள் வெளியுறவு செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஸ்ரீங்கலா பெங்களூருவில் நேற்று நேரில் சந்தித்து பேசினார். இதில் ஜி-20 நாடுகள் உச்சி மாநாடு குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசும்போது கூறியதாவது:- ஜ-20 நாடுகள் உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த 20 நாடுகளுடன் ஏதாவது ஒரு வகையில் நமக்கு தொடர்பு இருக்கிறது. அதனால் கர்நாடகத்தில் 10 கூட்டங்கள் … Read more

டிஎன்பிஎல்: திருச்சி அணிக்கு எதிரான ஆட்டத்தில் திருப்பூர் பந்துவீச்சு தேர்வு..!

நெல்லை, 6-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லை சங்கர் நகரில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி வாரியர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், லைகா கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை … Read more

கடும் மின்சார நெருக்கடியால் இருளில் மூழ்கிய ஜப்பான்…!

டோக்கியோ, மின்சார நெருக்கடியில் சிக்கியிருக்கும் ஜப்பான் அரசு மக்கள் மின்சிக்கனத்தை கடைபிடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. ஜப்பானில் மழைக்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கியிருக்கிறது. இதுவரை இல்லாத வகையில் அங்கு ஜூன் மாதத்தில் 35 டிகிரி செல்சியசுக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஜப்பானில் வெப்பக்காற்று காரணமாக மின்சார பயன்பாடு அதிகரித்துள்ளது. ஏற்கெனவே நிலநடுக்கம் காரணமாக நாட்டின் அணுமின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தேவை அதிகரித்திருப்பதால் அங்கு மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் மின்சிக்கனத்தை கடைபிடிக்குமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டிருக்கும் ஜப்பான் … Read more

அரிசி மூட்டைகள் சரிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் பலி

ராய்ச்சூர்: ராய்ச்சூர் மாவட்டம் புறநகர் சதர்பஜார் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மன்சலாபுரா கிராமத்தில் ஒரு அரிசி ஆலை உள்ளது. அங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த உபேந்திரா (வயது 40) மற்றும் நதீஸ் (27) ஆகிய 2 பேரும் தொழிலாளா்களாக வேலை பார்த்து வந்தனர். அந்த ஆலையில் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், வியாபாரத்தி்ற்காக அரிசி மூட்டைகளை உபேந்திரா, நதீஸ் எடுத்தார்கள். அப்போது திடீரென்று அரிசி மூட்டைகள் சரிந்து 2 பேர் மீதும் விழுந்து … Read more

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் அணியில் மயங்க் அகர்வால் சேர்ப்பு..!

பர்மிங்காம், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்தியா- லீசெஸ்டர்ஷைர் அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் நடந்தது. இந்த பயிற்சி ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. போட்டியின் போது இந்திய கேப்டன் ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். முன்னதாக டெஸ்ட் அணியில் காயம் காரணமாக விலகிய கேஎல் … Read more

ஜி7 மாநாடு: பிரதமர் மோடியின் தோளில் தட்டி அழைத்து கைகுலுக்கிய அமெரிக்க அதிபர் பைடன்! -வீடியோ வைரல்

பெர்லின், ஜெர்மனியில் உள்ள ஸ்க்லோஸ் எல்மாவ் நகரில் நடைபெறும் ஜி7 மாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். இந்த ஆண்டுக்கான மாநாடு, ஜெர் மனியின் எல்மாவ் நகரில் 2 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் ஜி-7 நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. நேற்று மாநாடு தொடங்கியது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்பட 7 நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் ஜி-7 நாடுகள் … Read more

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் வீடுகளுக்கு மத்திய அரசின் ஒய் – பிளஸ் பிரிவு பாதுகாப்பு

மும்பை, சிவசேனா மந்திரி ஏக்நாத் ஷிண்டே ஆளும் கூட்டணி, கட்சி தலைமைக்கு எதிராக ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளார். இந்தநிலையில் மும்பை, புனே உள்ளிட்ட இடங்களில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் அலுவலகங்களை சிவசேனா தொண்டர் அடித்து நொறுக்கினர். இதையடுத்த சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை மாநில அரசு சட்டவிரோதமாக திரும்ப பெற்றுவிட்டதாக ஏக்நாத் ஷிண்டே குற்றம்சாட்டினார். எனினும் இந்த குற்றச்சாட்டை மாநில உள்துறை மந்திரி திலீப் வால்சே பாட்டீல் மறுத்தார். … Read more

இந்தியா – லீசெஸ்டர்ஷைர் அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் டிரா..!!

லீசெஸ்டர், இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக அணி லீசெஸ்டர்ஷைர் அணிக்கு எதிராக 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 246 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது. பின்னர் களமிறங்கிய லீசெஸ்டர்ஷைர் அணி 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 2 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 9 விக்கெட்டுக்கு 364 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அரைசதம் கடந்த … Read more

ஜி-7 மாநாட்டில் ரஷியா மீது அதிகமான பொருளாதார தடைகள் விதிக்க வாய்ப்பு..?

பெர்லின், ஜெர்மனியில் ஜி-7 நாடுகள் மாநாடு இன்று தொடங்கியது. அதில் பங்கேற்க பிரதமர் மோடி ஜெர்மனி சென்றுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜாண்சன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் இதில் கலந்துகொள்கிறார்கள். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஜி-7 மற்றும் நேட்டோ மாநாடுகளில் நாளை கலந்துகொள்வார்.முன்னதாக, ரஷியா மீது தங்கம் இறக்குமதி மீதான தடை அறிவிப்புடன் ஜி7 பேச்சுவார்த்தை தொடங்கியது. முன்னதாக, இன்று அதிகாலை உக்ரைன் … Read more

டெல்லியில் முதன்முறையாக ரோபோ மூலம் தீயணைப்பு முயற்சி..!

புதுடெல்லி, டெல்லியில் முதன் முறையாக ரோபோ மூலம் தீயணைப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. டெல்லியின் சமய்புர் பத்லி என்ற இடத்தில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை 2.18 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.உடனடியாக தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள், முதன் முறையாக ரோபோ உதவியுடன் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 36 தீயணைப்பு வாகனங்கள் உட்பட ஒரு ரோபோவும் சேர்த்து முழுவீச்சில் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டன. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் ரோபோ … Read more