அக்னிபத் திட்டத்தில் பா.ஜனதாவினர் தங்களது பிள்ளைகளை சேர்ப்பார்களா? காங்கிரஸ் கேள்வி

பெங்களூரு, இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதால் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் நடத்துவதாகவும், அந்த திட்டத்தில் பா.ஜனதாவினர் தங்களது பிள்ளைகளை சேர்ப்பாா்களா? என்று டி.கே.சிவக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார். பெங்களூரு சதாசிவநகரில் உள்ள தனது வீட்டில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பதற்காக மத்திய அரசு அக்னிபத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் ராணுவத்தில் சேர்க்கப்படுகிறார்கள். … Read more

டிஎன்பிஎல் : சேப்பாக் சூப்பர் கில்லீஸ் -க்கு எதிரான ஆட்டத்தில் மதுரை அணி பந்துவீச்சு தேர்வு

நெல்லை, 6-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லை சங்கர் நகரில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி வாரியர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் … Read more

ஒற்றை காலில் 10 வினாடிகளுக்கு மேல் நிற்க முடியவில்லையா? நெருங்குகிறது மரணம்

லண்டன், இங்கிலாந்து, அமெரிக்கா, பிரேசில், ஆஸ்திரேலியா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த சர்வதேச நிபுணர்கள் இறப்பு மற்றும் சமநிலை ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு பற்றிய ஆய்வு ஒன்றை நடத்த முடிவு செய்தனர். இதன்படி, கடந்த 2008ம் ஆண்டு அந்த ஆய்வு தொடங்கியது. ரியோ டி ஜெனீரோவை சேர்ந்த டாக்டர் கிளாடியோ கில் அராவ்ஜோ தலைமையிலான ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வில் 51 முதல் 75 வயது வரையிலான 1,702 பேர் கலந்து கொண்டனர். 2020ம் ஆண்டு … Read more

42 லட்சம் உயிரிழப்புகளை தடுத்த கொரோனா தடுப்பூசி; ஆய்வில் தகவல்

புதுடெல்லி, சீனாவின் உகான் நகரில் 2019ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசானது உலகம் முழுவதும் பெருந்தொற்றாக பரவி உள்ளது. டெல்டா, டெல்டா பிளஸ் மற்றும் ஒமைக்ரான் என பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து வருகிறது. இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா முதல் அலை பாதிப்புகளை ஏற்படுத்தி சென்றது. அதன்பின்னர் 2021ம் ஆண்டில் 2வது அலை நாட்டையே புரட்டி போட்டது. எனினும், அந்த ஆண்டு தொடக்கத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டு இருந்தன. இதனால், உயிரிழப்புகள் … Read more

டிஎன்பிஎல்: திருச்சி அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது திண்டுக்கல் அணி..!

நெல்லை, டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டம் இன்று நெல்லையில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி எதிர்கொண்டு விளையாடி வருகிறது. டாஸ் வென்ற ரூபி திருச்சி வாரியர்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து திண்டுக்கல் அணி பேட்டிங் செய்தது. திண்டுக்கல் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய பிரதீப் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் முதல் ஓவரிலேயே அவுட்டானார். அணியின் கேப்டன் ஹரி நிஷாந்த் … Read more

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 1,150 ஆக உயர்வு

காபுல், ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த புதன்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.0 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் 3 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் இடிந்தன. பக்திகா மாகாணம் இந்த நிலநடுக்கத்தால் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளது. இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தால் ஏற்கனவே 1,000 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியான நிலையில் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் நிலநடுக்கத்தால் இதுவரை 1,150 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. மேலும், … Read more

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வயநாடு அலுவலகம் மீது தாக்குதல் – பினராயி விஜயன் கண்டனம்

திருவனந்தபுரம், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யாக உள்ளார். இவரது கட்சி அலுவலகம் வயநாடுவில் உள்ளது. இந்த அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை இந்திய மாணவர் கூட்டமைப்பு (எஸ்.எப்.ஐ.) நடத்தியதாக காங்கிரஸ் கட்சி தொிவித்தது. இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கேரள முதல்-மந்திாி பினராயி விஜயன் கண்டனம் தொிவித்து உள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட டுவிட்டா் பதிவில், … Read more

விம்பிள்டன் முதல் சுற்றில் ,பிரான்ஸ் வீராங்கனையுடன் மோதும் செரினா வில்லியம்ஸ்

லண்டன், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் வருகிற 27-ந் தேதி முதல் ஜூலை 10-ந் தேதி வரை நடக்கிறது. இந்த நிலையில் விம்பிள்டன் டென்னிஸ் முதல் சுற்றில் செரினா வில்லியம்ஸ் பிரான்ஸ் வீராங்கனை ஹார்மனி டன் -ஐ எதிர்கொள்கிறார். ஒரு வருடத்திற்குப் பிறகு செரினா வில்லியம்ஸ் மகளிர் ஒற்றையர்பிரிவு ஆட்டத்திற்குத் திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தினத்தந்தி Related Tags : செரினா வில்லியம்ஸ்

பாகிஸ்தானில் காகிதத் தட்டுப்பாடு; பாடப்புத்தகங்கள் வழங்குவதில் சிக்கல்

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. குறைந்து வரும் அன்னிய செலாவணி கையிருப்பு, அதிகரித்து வரும் திருப்பி செலுத்த வேண்டிய கடன், டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற பல சிக்கல்களை அந்த நாடு எதிர் கொண்டு வருகிறது. இந்நிலையில், பணவீக்கம் மற்றும் பொருளாதார சூழல் காரணமாக பாகிஸ்தானில் தற்போது காகிதத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் கல்வியாண்டில் மாணவர்களுக்கு புத்தகங்களை விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாடு காகித … Read more

வான் இலக்குகளை தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி…!

புவனேஷ்வர், போர்கப்பலில் இருந்து வான் இலக்குகளை தாக்கி அழிக்கும் நவீன திறன் கொண்ட ஏவுகணையை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரித்தது. நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை, ஒடிசா மாநிலம் சண்டிபூர் பகுதியில் இன்று சோதித்து பார்க்கப்பட்டது. இதற்காக வான் பரப்பில் தொலைதூரத்தில் அதிவேகமாக செல்லும் விமானம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து, ஏவுகணையை இயக்கியவுடன் போர்கப்பலில் இருந்து பாய்ந்து சென்று குறிப்பிட்ட நேரத்தில் அந்த விமானத்தை துல்லியமாக தாக்கி அழித்தது. இதனையடுத்து … Read more