பயனர்களிடம் நன்கொடை கோரும் விக்கிப்பீடியா… பணம் செலுத்த ஒப்புக்கொண்ட கூகுள் நிறுவனம்..!!

வாஷிங்டன், தொடர்ந்து பல ஆண்டுகளாக பயனர்களுக்கு இலவசமாக தகவல் சேவைகளை வழங்கி வருகிறது விக்கிப்பீடியா நிறுவனம். சமீப காலங்களாக தளத்தின் சேவைகளை மேலும் மேம்படுத்துவதற்காக விக்கிப்பீடியா பயனர்களிடம் நன்கொடை கோரி வருகிறது. இதற்காக விக்கிமீடியா அறக்கட்டளை வணிக நோக்கத்திற்காக விக்கிமீடியா எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை துவக்கியது. இந்த நிலையில் இந்த நிறுவனத்திற்கு பணம் செலுத்த கூகுள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. “எல்லா இடங்களிலும் உள்ள மக்களுக்கான அறிவையும் தகவல் அணுகலையும் விரிவுபடுத்தும் எங்களின் பகிரப்பட்ட இலக்குகளைப் பின் தொடர்வதற்காக … Read more

எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நாளை டெல்லி பயணம்

பெங்களூரு: கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்கள் கடந்த 21-ந் தேதி டெல்லி சென்றனர். அங்கு 22-ந் தேதி நடைபெற்ற காங்கிரசின் போராட்டத்தில் அவர்கள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து அவர்கள் பெங்களூரு திரும்பினர். இந்த நிலையில் சித்தராமையா மீண்டும் நாளை (வெள்ளிக்கிழமை) டெல்லி செல்கிறார். இரவு 7.40 மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்லும் அவர் நாளை மறுநாள் (சனிக்கிழமை) டெல்லியில் நடைபெறும் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்கிறார். … Read more

டி.என்.பி.எல். கிரிக்கெட் : டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்துவீச்சு தேர்வு

நெல்லை, 6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கி அடுத்த மாதம் (ஜூலை) 31-ந்தேதி வரை நெல்லை, சேலம், கோவை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது. போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி வாரியர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன முதல் நாளான இன்று நெல்லை சங்கர் நகரில் அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில் கவுசிக் காந்தி … Read more

இலங்கை அதிபர் உடன் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சந்திப்பு

கொழும்பு, இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பொருள் தட்டுப்பாட்டில் சிக்கி தவித்து வரும் நிலையில் மனிதாபிமான அடிப்படையில் இந்தியா சாா்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா சந்தித்து பேசினாா். இந்த சந்திப்பில் இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்தும், இந்தியாவின் ஆதரவு குறித்தும் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடந்தன. மேலும், இலங்கையில் முதலீடுகளை ஊக்குவித்தல், பொருளாதார தொடர்பை வலுப்படுத்துதல் … Read more

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

பெங்களூரு: பெங்களூரு பேடராயனபுரா போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 வாலிபர்களை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் விஜயநகர் அருகே அத்திகுப்பேயை சேர்ந்த அபிஷேக் (வயது 28), பாபுஜிநகரை சேர்ந்த அபி (26) என்று தெரிந்தது. இவர்கள் 2 பேரும் குறைந்த விலைக்கு கஞ்சாவை வாங்கி தங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. கைதான 2 பேரிடம் இருந்து 7 கிலோ 550 கிராம் கஞ்சா, செல்போன்கள், ரூ.800 பறிமுதல் … Read more

விமர்சிப்பவர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள் – கோலிக்கு கபில் தேவ் அறிவுரை

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சதமடித்து 2 ஆண்டுகள் கடந்துவிட்டது. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல போட்டிகளில் பூர்த்தி செய்யவில்லை. பெரிய ரன்கள் குவிக்க தவறிவரும் விராட் கோலி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் விராட் கோலி குறித்து பேசியுள்ளார். ஒரு வீரர் சரியாக விளையாடவில்லை என்றால் அவரின் செயல்திறனைக் கேள்விக்குட்படுத்தும் … Read more

குரங்கு அம்மை நோய்; சர்வதேச அளவில் பொதுசுகாதார அவசரநிலையாக அறிவித்த உலக சுகாதார நிறுவனம்!

ஜெனீவா, உலகம் முழுவதும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இதுவரை 58 நாடுகளில் இந்த நோய் தாக்கியுள்ளது. உலகளவில், 3,417க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், குரங்கு அம்மை நோய் தொற்று பரவல் தொடர்பாக, இன்று அவசரக் கூட்டத்தை நடத்தவுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருந்தது. குரங்கு அம்மை நோய் தொற்றானது, சர்வதேச அளவில், கொரோனா போன்று பொதுசுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட வேண்டுமா என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க இந்த ஆலோசனை … Read more

துப்பரவு தொழிலாளர்கள் 1-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்

பெங்களூரு: கர்நாடக அரசு துப்புரவு தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டு போராட்ட குழு தலைவர் நாராயணா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கர்நாடகத்தில் மாநகராட்சிகள், நகரசபைகள், புரசபைகள் மற்றும் பட்டண பஞ்சாயத்துகளில் துப்புரவு பணி வெளிஒப்பந்தத்திற்கு (அவுட்சோர்சிங்) வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய முறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் சுரண்டப்படுகிறார்கள். இது ஒரு அடிமை முறையாக உள்ளது. இதை அரசே ஊக்கப்படுத்துவது ஏற்கத்தக்கது அல்ல. அதனால் இந்த வெளிஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்தோம். அரசு … Read more

கால்பந்து ஜாம்பவான் மரடோனா மரணம் தொடர்பாக 8 மருத்துவ ஊழியர்கள் மீது விசாரணை – திடுக்கிடும் தகவல்

பியூனஸ் அயர்ஸ், அர்ஜென்டினா நாட்டின் முன்னாள் கால்பந்து வீரர் டியாகோ மரடோனா. இவர் கடந்த நூற்றாண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீரராக அறியப்படுகிறார். அர்ஜென்டினா அணிக்காக 1977 முதல் 1994 வரையில் சர்வதேச அளவில் தனது அசத்தலான ஆட்டத்தால் பல வெற்றிகளை தேடி கொடுத்துள்ளார். 1986 நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பையை வென்றிருந்த அர்ஜென்டினா அணியின் கேப்டனாக செயல்பட்டவர் மரடோனா. 2020ஆம் ஆண்டு, மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து மரடோனாவுக்கு அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை … Read more

நியூயார்க்கில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 100 சட்டவிரோத பைக்குகள் மீது புல்டோசர் ஏற்றி சிதைக்கப்பட்ட சம்பவம் – வைரல் வீடியோ

நியூயார்க், நியூயார்க் போலீசாரால் கைப்பற்றப்பட்ட கிட்டத்தட்ட 100 சட்டவிரோத பைக்குகள் மற்றும் பிற வாகனங்கள் மற்றும் பிற சட்டவிரோத மோட்டார் சைக்கிள்கள் நேற்று புல்டோசர் மூலம் இடித்து தூள் தூளாக்கப்பட்டன. இந்த சம்பவத்தை நியூயார்க நகர நிர்வாகம் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளது. மேயர் அலுவலகம் தரப்பில் பேஸ்புக்கில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், புரூக்ளினில் உள்ள எரி பேசின் வாகன பார்க்கிங் இடத்தில், புல்டோசரின் அடியில், 92 சட்டவிரோத வாகனங்கள் தூள் தூளாக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. மேயர் எரிக் … Read more