அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி அடித்துக் கொலை

பெங்களூரு: பெங்களூரு அம்ருதஹள்ளி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்தவர் குமாரநாயக் (வயது 45). இவர், கொடிகேஹள்ளி அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்தாா். கடந்த 12-ந் தேதி அடுக்குமாடி குடியிருப்பில் அவர் காவல் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அங்கு ஆன்லைன் விற்பனை பிரதிநிதியான கார்த்திக் என்பவர் அடுக்குமாடி குடியிருப்பு முன்பாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். இதுபற்றி குமாரநாயக் கார்த்திக்கிடம் கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த கார்த்திக், … Read more

இலங்கைக்கு எதிரான முதல் டி20 : 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய பெண்கள் அணி வெற்றி

கொழும்பு, இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் 20 ஓவர் போட்டி தம்புல்லா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். … Read more

அறுவை சிகிச்சை செய்து கொண்ட முன்னாள் பிரேசில் அழகி மரணம்

மெகே 2018ஆம் ஆண்டு மிஸ் பிரேசில் பட்டம் வென்ற அழகி கிளெய்சி கொரிய்யா. தென்கிழக்கு நகரமான மெகேயில் ஒப்பனை நிரந்தர ஒப்பனை நிபுணராகப் பணிபுரிந்து வந்தார். சில மாதங்களுக்கு முன் டான்சில் பிரச்சனைக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அடுத்த 5 நாட்களில் மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிளெய்சிக்கு ஏப்ரல் மாதம் மாரடைப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து 2 மாதங்களாக கோமா நிலையில் இருந்த கிளெய்சி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட … Read more

மாமனார்-மாமியார் மீது புகார்; வீட்டில் அடைத்துவைத்துள்ள மனைவியை மீட்டுத்தரக்கோரி கணவன் கோர்ட்டில் மனு

புதுடெல்லி, உத்தரபிரதேச மாநிலத்தை சோ்ந்த நபா் ஒருவா், தனது மனைவி மற்றும் மகளை அவரது பெற்றோா் சட்ட விரோதமாக அடைத்து வைத்திருப்பதாக கூறி டெல்லி ஐகோா்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளாா். அவரது வக்கீல் தாக்கல் செய்த மனுவில், மனுதாரா் கடந்த ஜனவாி மாதம் விதவை பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளாா். அந்த பெண்ணுக்கு 7 வயதி்ல் பெண் குழந்தை உள்ளது. திருமணத்தின் போது அந்த பெண் கா்ப்பமாகவும் இருந்துள்ளாா். இந்த திருமணத்திற்கு பெண்ணின் குடும்பத்தினா் எதிா்ப்பு … Read more

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த விராட் கோலி – பயிற்சி ஆட்டம் நடைபெறுவதில் சிக்கல் ?

பர்மிங்காம், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. கடந்த ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது கொரோனா பரவல் காரணமாக 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் தள்ளி வைக்கப்பட்டது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் வருகிற 1-ந் தேதி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் 5-வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்த … Read more

நாடு முழுவதும் பொது நீச்சல் குளங்களில் 'புர்கினி' நீச்சல் உடை அணிய தடை – பிரான்ஸ் கோர்ட்டு அதிரடி

பாரிஸ், பிரான்ஸ் நாட்டில் கிரினொபெல் நகரில் பொது நீச்சல் குளங்களை பயன்படுத்த பிகினி என்ற குறிப்பிட்ட உடையை அணிய வேண்டுமென்ற விதி உள்ளது. ஆனால், பொதுநீச்சல் குளங்களை இஸ்லாமிய மத பெண்கள் பயன்படுத்தும் வகையில் புர்கானி என்ற உடையும் அனுமதிக்கப்பட்டது. புர்கானி என்பது பர்தா மற்றும் பிகினி என்ற வார்த்தைகளின் கூட்டு சொல்லாக கூறப்படுகிறது. புர்கினி என்பது உடல் முழுவதையும் மூடி முகம் மட்டும் தெரியும் வகையிலான உடையாகும். இந்த உடைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். … Read more

சிவன் கோவில் வளாகத்தை சுத்தம் செய்த பாஜக ஜனாதிபதி வேட்பாளா் திரவுபதி முர்மு

புவனேஷ்வா், இந்திய ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக பழங்குடியின சமூகத்தை சேர்ந்த திரவுபதி முர்மு போட்டியிடுவாா் என அறிவிக்கப்பட்டது. இவா், ஒடிசாவில் பாஜக, பிஜு ஜனதா தளம் கூட்டணி ஆட்சியில் (2000-2004) வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறை மந்திரியாகவும், கால்நடை வளர்ச்சித் துறை மந்திரியாகவும் … Read more

இளம் கிரிக்கெட் வீரரிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல்: உத்தரகாண்ட் கிரிக்கெட் சங்க செயலாளர் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு

டேராடூன், உத்தரகாண்ட் மாநிலத்தில் இளம் கிரிக்கெட் வீரரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த உத்தரகாண்ட் கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த 21 வயது பேட்ஸ்மேனான ஆர்யா சேத்தி கடந்த ஆண்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, மாநில கிரிக்கெட் வீரரான ஆர்யா அந்த அணியின் பயிற்சியாளரால் தாக்கப்பட்டார். அதனை தொடர்ந்து இந்த சம்பவத்தை கிரிக்கெட் சங்கத்திடம் தெரிவித்தபோது, பயிற்சியாளருக்கு ஆதரவாக பேசிய நிர்வாகிகள், இது வெளியே தெரியவந்தால் … Read more

ரஷிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

மாஸ்கோ, ரஷியாவின் தென் மேற்கு பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலை மீது இன்று ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஆலை முழுவதும் தீப்பிடித்து எாிந்து நாசமானது. இந்த தாக்குதல் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினா் அரைமணி நேரமாக போராடி தீயை அணைத்தனா். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தீயணைப்பு துறை அதிகாாிகள் தொிவித்தனா். 2 ஆளில்லா விமானங்கள் நடத்திய தாக்குதலில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், … Read more

முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக தயார் – உத்தவ் தாக்கரே அறிவிப்பு

மும்பை, மும்பை, மராட்டியத்தில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் மகாவிகாஸ் அகாடி என்ற கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியில் சிவசேனா தலைவர் மராட்டிய முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே செயல்பட்டு வருகிறார். 288 சட்டசபை தொகுதிகளை கொண்ட மராட்டியத்தில் 2019-ல் நடந்த தேர்தலில் சிவசேனா 55, தேசியவாத காங்கிரஸ் 53 மற்றும் காங்கிரஸ் 44 இடங்களை கைப்பற்றின. பெரும்பான்மைக்கு 144 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலையில் சுயேட்சைக்குள் உதவியுடன் 167 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் சிவசேனா-தேசியவாத … Read more