இந்திய கால்பந்து அணிக்கு ரூ 16. லட்சம் சம்பளத்தில் ஜோதிடர் நியமனம்…!

புதுடெல்லி சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஏஎஃப்சி ஆசியக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் இந்தியா சிறப்பாக ஆடி பிரதான ஆசியக் கோப்பைக்குத் தகுதி பெற்றது. ஜோதிடர்களின் ஊக்குவித்ததுதான் இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது. இதுதொடர்பாக கால்பந்து அணியின் நிர்வாகி ஒருவர் பிடிஐ-செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ஆசியக் கோப்பை கால்பந்து அணிக்கு மோட்டிவேட்டர் நியமிக்கப்பட்டுள்ளார். பின்னர்தான் தெரிந்தது அது ஜோதிட நிறுவனம் என்று” என்றார். அகில இந்திய கால்பந்து சம்மேளனம் இந்த மாத ஏஎஃப்சி ஆசிய கோப்பை தகுதிச் … Read more

இங்கிலாந்தில் ரெயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தம் – பொதுமக்கள் கடும் அவதி

லண்டன், இங்கிலாந்தில் ரெயில்வே ஊழியர்கள், சம்பளத்தை உயர்த்தக்கோரி நேற்று வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். நாட்டில் விலைவாசி உயர்வுக்கு ஈடாக தங்களது சம்பளம் போதவில்லை என்றும் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தி ரெயில்வே ஊழியர்கள் இந்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் இங்கிலாந்து முழுவதும் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரெயில் நிலையங்கள் அனைத்தும் வெறிச்சோடிப் போய் காணப்படுகின்றன. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரெயில் … Read more

'முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தயார்… ஆனால்…' – உத்தவ் தாக்கரே அதிரடி பேச்சு

மும்பை, மராட்டியத்தில் அரசியல் குழப்பம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் மாநில முதல்-மந்திரியும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே மாநில மக்களுக்கு இன்று சமூகவலைதளமான பேஸ்புக் பக்கம் மூலம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, நமது எம்.எல்.ஏ.க்களுக்கு என்ன ஆனது?, அவர்கள் எங்கு சென்றார்கள் அல்லது எங்கு கொண்டு செல்லப்பட்டார்கள் என்று நான் பேச விரும்பவில்லை. எனது உடல்நலம் மற்றும் அறுவை சிகிச்சை காரணமாக நான் கடந்த சில மாதங்களாக மக்களை சந்திக்கவில்லை என்பது உண்மை. ஆனால், தற்போது … Read more

இந்திய அணியின் 3-வது வேகப்பந்து வீச்சாளராக புவனேஸ்வர் குமார் இருப்பார் – முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான 5 போட்டிகள் கொண்ட தொடரில் புவனேஸ்வர் குமார் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் டி20 உலகக்கோப்பைக்கான பந்துவீச்சு வரிசை தொடர்பாக எழும் விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் கருத்து தெரிவித்துள்ளார். பும்ராவுடன் இணைந்து விளையாடும் ஆடும் லெவனில் இடம் பெறுவதற்கு புவனேஷ்வர் குமார் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார் என்று அவர் கூறினார். இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் … Read more

விருச்சிகாசன நிலையில் 29 நிமிடங்கள் இருந்து கின்னஸ் சாதனை படைத்த இந்தியர்..!!

துபாய், துபாயில் உள்ள இந்திய யோகா ஆசிரியர் ஒருவர் யோகாசனத்தில் புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 21 வயதாகும் யாஷ் மன்சுக்பாய் மொராடியா என்பவர் தொடர்ந்து 29 நிமிடங்களாக விருச்சிகாசனா நிலையில் இருந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவரின் இந்த சாதனை வீடியோ கின்னஸ் உலக சாதனைகளின் அதிகாரபூர்வ சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 29 நிமிடங்கள் மற்றும் நான்கு வினாடிகளாக அவரின் சாதனை நேரம் கணக்கிடப்பட்டுள்ளது. ஜூன் 21 ஆம் தேதியான நேற்று சர்வதேச யோகா தினம் … Read more

பள்ளியில் இருந்து வீடு திரும்பிய 3 மாணவ-மாணவிகள் குட்டையில் பிணமாக மீட்பு

போபால், மத்தியபிரதேச மாநிலம் பாலஹட் மாவட்டம் சீதாபூர் கிராமத்தில் அங்கன்வாடி பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் நேற்று மாலை வகுப்பு முடிந்த பின் மாணவ-மாணவிகள் வீடு திரும்பினர். அப்போது, அந்த பள்ளியில் படித்த மாணவன், 2 மாணவிகள் வீடு திரும்பவில்லை. இதனால், சந்தேகமடைந்த பெற்றோர் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும், அக்கம்பக்கத்திலும் திவிரமாக தேடினர். அப்போது, கிராமத்திற்கு அருகே உள்ள குட்டையில் 3 பேரும் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து … Read more

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டம்: மும்பை-மத்திய பிரதேச அணிகள் இன்று பலப்பரீட்சை

பெங்களூரு, 38 அணிகள் பங்கேற்ற 87-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று முடிவில் மும்பையும், மத்தியபிரதேசமும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த நிலையில் இவ்விரு அணிகளில் சாம்பியன் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் (5 நாள்) பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. பிரித்வி ஷா தலைமையிலான மும்பை அணி கால்இறுதியில் 725 ரன்கள் வித்தியாசத்தில் உத்தரகாண்டை ஊதித்தள்ளியது. உத்தரபிரதேசத்துக்கு எதிரான அரைஇறுதியிலும் ரன்மழை பொழிந்த மும்பை … Read more

3ம் உலகப் போர் ஏற்பட்டால் பிரிட்டன் முழுமையாக அழிக்கப்படுவது உறுதி – ரஷியாவின் ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் எச்சரிக்கை !

மாஸ்கோ, மூன்றாம் உலகப் போர் ஏற்பட்டால் பிரிட்டன் முழுமையாக அழிக்கப்படுவது உறுதி என்று ரஷியாவின் ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் ஈவ்ஜெனி புஷ்கின்ஸ்கை எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரிட்டனில் புதிய ராணுவ தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள சர் பேட்ரிக் சாண்டர்ஸ், 3-ம் உலகப் போரில் ரஷியாவைத் தோற்கடிக்க வேண்டும் என்று படை வீரர்களுக்கு அறைகூவல் விடுத்திருந்தார். இந்நிலையில், இதற்கு பதிலளித்துள்ள ரஷிய அதிபர் புதினின் ஆதரவாளரும் ஓய்வு பெற்ற ராணுவ தளபதியுமான ஈவ்ஜெனி, மூன்றாம் உலகப்போரின் விளைவாக பிரிட்டன் … Read more

மராட்டிய அரசியலில் சூடு பிடித்த கட்சி மாறி ஓட்டளித்த விவகாரம்; ஷிண்டேவை நீக்க கடிதம்

புனே, மராட்டிய மேல்சபைக்கான தேர்தலில் கட்சி மாறி ஓட்டு போட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கட்சி மாறி ஓட்டு போட்டது இதற்கு காரணம் என்ற சந்தேகம் நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து, சிவசேனா தலைவர்களில் ஒருவரான மற்றும் மராட்டிய அமைச்சரவையில் மந்திரியாக உள்ள ஏக்நாத் ஷிண்டேவை கட்சியால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவருடன் சேர்ந்து 26 எம்.எல்.ஏ.க்களும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளனர் என மராட்டிய … Read more

அயர்லாந்து சுற்றுப்பயணத்திற்கு இந்திய அணியில் அவரை சேர்த்திருக்க வேண்டும் – சுனில் கவாஸ்கர்

புதுடெல்லி, அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி அந்த அணிக்கு எதிராக இரண்டு 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த 15-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக புவனேஸ்வர் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல் போட்டி 26-ந் தேதியும், 2-வது ஆட்டம் 28-ந் தேதியும் நடைபெறுகிறது. இந்திய அணியில் இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், தீபக் … Read more