பாரசீக வளைகுடாவில் அமெரிக்க போர்க்கப்பலை இடைமறித்த ஈரான் கடற்படை படகு; எச்சரிக்க துப்பாக்கிச்சூடு

தெஹ்ரான், வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் தினமும் பல கப்பல்கள் பாரசீக வளைகுடா பகுதியில் வழியாக அரபிக்கடலில் பயணம் மேற்கொள்கிறது. இந்த கப்பல்களின் பாதுகாப்பிற்காக அமெரிக்க கடற்படையின் போர் கப்பல்களும் அதேபகுதியில் பயணம் மேற்கொள்கின்றன. இந்நிலையில், வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு பாரசீக வளைகுடாவின் கடல் பகுதியில் எண்ணெய் கப்பல்கள் இன்று வழக்கபாக பயணித்துக்கொண்டிருந்தன. இந்த கப்பல்களுக்கு பாதுகாப்பிற்காக அமெரிக்க போர் கப்பலும் உடன் பயணித்து. பாரசீக வளைகுடாவின் ஸ்ரிட் ஜலசந்தி பகுதியில் கப்பல்கள் … Read more

ராகுல் காந்தியிடம் 40 மணி நேரம் விசாரணை நடத்த வேண்டியதின் அவசியம் என்ன?டி.கே.சிவக்குமார் கேள்வி

பெங்களூரு, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் அமலாக்கத்துறை மூலம் மத்திய அரசு விசாரணை நடத்துகிறது. காங்கிரசார் அமைதி வழியில் போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் போலீசார் அவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். அரசியலில் மாற்றங்கள் ஏற்படும். இதை பா.ஜனதாவினர் புரிந்து கொள்ள வேண்டும். … Read more

விம்பிள்டன் தகுதிச்சுற்றுப் போட்டி : இந்திய வீரர்கள் தோல்வி

கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி வருகிற 27-ந் தேதி முதல் ஜூலை 10-ந் தேதி வரை நடக்கிறது.விம்பிள்டன் போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் நடந்து வருகிறது இன்று நடைபெற்ற தகுதி சுற்று முதல் சுற்றில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், செக் குடியரசின் கோப்ரிவாவிடம் 7-5,6-4 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார் . மற்றோரு இந்திய வீரரான யுகி பாம்ப்ரி,தகுதி சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினின் மிரால்லஸிடம் 7-5, 6-1 என நேர் செட்களில் தோல்வி அடைந்தார் … Read more

பிறந்த குழந்தையின் தலை துண்டிப்பு; துண்டிக்கப்பட்ட தலை தாயின் வயிற்றிலேயே வைத்து தைத்த கொடூரம்

இஸ்லாமாபாத் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கிராமப்புற சுகாதார மையத்தின் ஊழியர்களின் அலட்சியத்தால், பிறந்த குழந்தையின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி துண்டிக்கப்பட்ட அந்தத் தலை தாயின் வயிற்றிலேயே வைத்துத் தைத்தும் உள்ளனர். இந்த காரணமாக 32 வயது இந்து பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதற்கு காரணமானவர்களைக் கண்டறிய மருத்துவ விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பேராசிரியர் ரஹீல் சிக்கந்தர் கூறியதாவது:- தார்பார்கர் மாவட்டத்தில் … Read more

மராட்டிய அரசை கவிழ்க்க 3-வது முறை முயற்சி; நிலைமையை உத்தவ் தாக்கரே கையாளுவார் – சரத் பவார்

மும்பை, மராட்டியத்தில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் மகாவிகாஸ் அகாடி என்ற கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியில் சிவசேனா தலைவர் மராட்டிய முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே செயல்பட்டு வருகிறார். இதனிடையே, சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், மாநில மந்திரியுமான எக்நாத் ஷிண்டே திடீரென குஜராத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் தன்னுடன் சிவசேனா மற்றும் சுயேட்சைகள் உள்பட 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களை அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மராட்டியத்தில் சிவசேனா கட்சிக்கும், மராட்டிய … Read more

105 வயதில் 100 மீட்டர் தடகள போட்டியில் கலந்து கொண்டு அசத்திய மூதாட்டி..!!

வதோதரா, குஜராத் மாநிலம் வதோதராவில் தேசிய ஓபன் மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது, இதில் 100 மீட்டர் ஓட்டபந்தயத்தில் 105 வயது மூதாட்டி ராம்பாய் என்பவர் கலந்து கொண்டார். 85 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில் தனிநபராக கலந்து கொண்டு ராம்பாய் அசத்தியுள்ளார். 45.40 வினாடிகளில் 100 மீட்டர் இலக்கை 105 வயதில் எட்டி அவர் புதிய சாதனை படைத்துள்ளார். மேலும் அவர் 200 மீட்டர் ஓட்டத்தில் 1 நிமிடம் 52.17 வினாடிகளில் இலக்கை கடந்து அசத்தினார். … Read more

மாலத்தீவில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது சரமாரி தாக்குதல் – பரபரப்பு வீடியோ…!

மெல், சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த யோகா நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்று யோகா பயிற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவின் அருகே அமைந்துள்ள தீவு நாடான மாலத்தீவிலும் இன்று யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அந்நாட்டின் தலைநகர் மெலில் உள்ள ஒரு கால்பந்து மைதானத்தில் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யபட்டிருந்தது. இந்த யோகா நிகழ்ச்சி மாலத்தீவு அரசு மற்றும் இந்திய கலாச்சார … Read more

சர்வதேச யோகா தினம் : பிரதமர் மோடியின் சிறப்பு மணல் சிற்பத்தை அமைத்த சுதர்சன் பட்நாயக்

ஒடிசா, உலகம் முழுவதும் இன்று சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி இந்தியாவில் பல்வேறு இடங்களில் சிறப்பு யோகா பயிற்சி நடந்து வருகின்றன. நாடு முழுவதும் 75 ஆயிரம் இடங்களில் யோகா பயிற்சிக்கு பா.ஜனதா ஏற்பாடு செய்து உள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரு அரண்மனையில் இன்று காலை நடைபெற்ற பிரமாண்ட யோகா நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இந்த நிலையில் ஒடிசாவின் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசாவின் பூரி கடற்கரையில் சர்வதேச … Read more

4வது ஒருநாள் போட்டி : டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு

கொழும்பு, இலங்கை – ஆஸ்திரேலியா இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 3 போட்டிகளில் இலங்கை அணி 2 போட்டிகளிலும் .ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் இரு அணிகளும் மோதும் 4வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்கிறது..இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் … Read more

நோபல் பரிசை விற்று ரூ.808 கோடியை உக்ரைன் குழந்தைகளுக்காக வழங்கிய ரஷிய பத்திரிகையாளர்

நியூயார்க், உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடந்து வருகிறது. இந்த போரினால் பொதுமக்கள் பலர் உயிர் இழந்துள்ளனர். குறிப்பாக பல குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை இழந்துள்ளனர். இந்த போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் குழந்தைகளுக்கு உதவும் வகையில் தனக்கு வழங்கப்பட்ட நோபல் தங்க பதக்கத்தை விற்க ரஷியாவை சேர்ந்த பத்திரிகையாளர் டிமிட்ரி முரடோவ் முடிவு செய்தார். கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுயுடன் இவருக்கு தங்க பதக்கமும், 5 லட்சம் டாலரும் … Read more