அக்னிபத் போராட்டம்; 595 ரெயில்கள் இன்று ரத்து: இந்திய ரெயில்வே அறிவிப்பு

புதுடெல்லி, ராணுவம் உள்ளிட்ட முப்படைகளில் இந்திய இளைஞர்களை சேர்க்கும் அக்னிபத் என்ற புதிய திட்டம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் தேர்வாகும் இளைஞர்கள் 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்படுவார்கள். அதன்பின் பணியில் இருந்து ஓய்வு பெறுவோருக்கு ஓய்வூதியம் எதுவும் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டது. இதனால், இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் பலர் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தின்போது, பீகார், உத்தர பிரதேசம், டெல்லி, அரியானா, ஒடிசா, பஞ்சாப் … Read more

காமன்வெல்த் போட்டிகள் 2022 : மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஆக்கி அணி அறிவிப்பு

புதுடெல்லி, 2022ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் பிரிட்டனின் பர்மிங்காம் நகரில் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்டு 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த காமன்வெல்த் போட்டிகள் நடைபெறும். இந்த ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் பெண்கள் கிரிக்கெட் முதல் முறையாக இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் பெயர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. மன்பிரீத் சிங் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ஹர்மன்ப்ரீத் … Read more

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அறுவை சிகிச்சை

லண்டன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு சைனஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு தற்போது தனது இல்லத்தில் போரிஸ் ஜான்சன் ஓய்வெடுத்து வருவதாகவும் அந்நாட்டு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று லண்டனில் உள்ள அரசு நிதி அளிக்கும் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை நடக்கும் சமயத்தில் பிரதமர் பொறுப்பை துணை பிரதமர் பொறுப்பை டோமினிக் ராப் கவனித்துக்கொண்டார். 58-வயது ஆகும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த … Read more

வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் நடிகை பிணமாக மீட்பு – அதிர்ச்சி சம்பவம்

புவனேஷ்வர், ஒடிசா மாநில டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ராஷ்மிர்ஹா ஓஜா (வயது 23). இவர் சந்தோஷ் பத்ரா என்ற நபருடன் திருமணம் செய்துகொள்ளாமல் ‘லிவ் இன்’ உறவு முறையில் வாழ்ந்து வந்துள்ளார். ராஷ்மிர்ஹாவும் சந்தோஷ் பத்ராவும் நியப்பள்ளி நகரில் ஒரு வாடகை வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், நடிகை ராஷ்மிர்ஹா வீட்டில் தூக்கிட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்தோஷுடன் வசித்து வந்த வாடகை வீட்டில் உள்ள ஒரு அறையில் ராஷ்மிர்ஹா … Read more

நெதர்லாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பீட்டர் சீலர் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

அம்ஸ்டர்டம், நெதர்லாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பீட்டர் சீலர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் முதுகுவலி பிரச்சனையால் அவதிப்பட்டார். இந்த நிலையில், அவர் தனது ஓய்வு முடிவினை அறிவித்து உள்ளார். பீட்டர் சீலர் நெதர்லாந்து அணிக்காக 57 ஒருநாள் மற்றும் 77 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2011 உலகக் கோப்பையில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இந்தியாவுக்கு எதிராக அவர் 10 ஓவர்களில் 53 … Read more

கொலம்பியாவில் முதல்முறையாக இடதுசாாிகள் ஆட்சி

கொலம்பியா, கொலம்பியாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, சமத்துவமின்மை, மற்றும் வன்முறை காரணமாக அரசிற்கு எதிராக மக்கள் போராடி வந்தனா். இந்த நிலையில் அங்கு கடந்த மாதம் தோ்தல் நடைபெற்றது. அதில் இடதுசாரி கட்சியை சோ்ந்த குஸ்டாவோ பெட்ரோ அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தோ்தலில் மொத்தம் 50.48 சதவீதம் ஓட்டுகளை பெற்று குஸ்டாவோ பெட்ரோ வெற்றி பெற்றாா். அவரை எதிா்த்து போட்டியிட்ட ரியல் எஸ்டேட் அதிபா் ரோடோல்போ ஹெர்னாண்டஸ் 47.26 சதவீதம் ஓட்டுகளை பெற்று தோல்வி அடைந்தாா். புதிய … Read more

நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை, ஒவ்வொரு நிமிடமும் மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன் – பிரதமர் மோடி

பெங்களூரு, பெங்களூருவில் ரூபாய் 28,000 கோடி மதிப்பிலான ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். அதை தொடர்ந்து அந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது : பெங்களூருவை போக்குவரத்து நெரிசலில் இருந்து விடுவிப்பதற்காக, இரயில், சாலை, மெட்ரோ மற்றும் சுரங்கப்பாதை, மேம்பாலம் கட்டுதல் உள்ளிட்ட சாத்தியமான அனைத்து வழிகளிலும் அரசு செயல்பட்டு வருகிறது. பெங்களூரு புறநகர் பகுதிகளுடன் சிறந்த போக்குவரத்து இணைப்பை வழங்க எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது. 40 … Read more

"அதிக எடை உடையவராக இருக்கிறார் " – ரிஷப் பண்ட் உடற்தகுதி குறித்து முன்னாள் பாக். வீரர் பேச்சு

கராச்சி, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் ரிஷப் பண்ட் கேப்டன்சி குறித்து பலர் விமர்சனம் செய்தனர். இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. குறிப்பாக அவர் கேப்டன் பொறுப்பை ஏற்ற காரணத்தால் அவர் தனது தனிப்பட்ட பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த திணறி வருவதாக விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா ரிஷப் பண்ட் குறித்து … Read more

உலகின் 6-வது பெரிய பணக்காரரான செர்ஜி பிரின் விவாகரத்து கோரி மனு தாக்கல்

கலிபோர்னியா, கூகுள் இணை நிறுவனர் மற்றும் உலகின் 6-வது பெரிய பணக்காரர் செர்ஜி பிரின். இவர் தனது மனைவி நிக்கோல் ஷனாஹனிடம் இருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் இருக்கிறான். “சமரசம் செய்ய முடியாத வேறுபாடுகள்” என்பதை சுட்டிக்காட்டி செர்ஜி பிரின் இந்த மனுவை கலிபோர்னியாவின் சாண்டா கிளாராவில் தாக்கல் செய்துள்ளார். பிரின் சொத்து மதிப்பு சுமார் 94 பில்லியன் அமெரிக்க … Read more

அக்னிபத் திட்டத்தை கைவிடுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம்: ப.சிதம்பரம்

புதுடெல்லி, அக்னிபத் திட்டத்திற்கு இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு அளித்தனர். காங்கிரஸ் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன் கார்கே, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் இந்தக் குழுவில் இடம் பெற்று இருந்தனர். ஜனாதிபதியை சந்தித்து மனு அளித்த பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ப.சிதம்பரம் கூறுகையில் “அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேரும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு குறித்து சரியான விளக்கம் இல்லை. அக்னிபத் திட்டத்தால் … Read more