ஆஸ்திரேலிய மைதானங்களில் 200 ரன்கள் இலக்கை அடைய தினேஷ் கார்த்திக் உதவுவார் – முன்னாள் வீரர் பாராட்டு

மும்பை, தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தற்போது 37 வயதில் இந்திய அணிக்கு திரும்பி அசத்தி வருகிறார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக சிறப்பான பங்களிப்பை வழங்கி தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்த அவர் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரில் விளையாண்டு வருகிறார். குறிப்பாக கடைசி போட்டியில் இக்கட்டான நிலையில் களமிறங்கி அரைசதம் அடித்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இந்த நிலையில் இந்தாண்டு இறுதியில் நடைபெற இருக்கும் 20 ஓவர் … Read more

நைஜீரியா: லாசா காய்ச்சலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 155 ஆக உயர்வு

லாகோஸ், ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் எலிகளால் பரவ கூடிய லாசா காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதுபற்றி நைஜீரிய நோய் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், நாடு முழுவதும் அரசு தொற்றை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தபோதிலும், நடப்பு ஆண்டில் லாசா காய்ச்சல் பாதிப்புக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 155 ஆக உயர்ந்து உள்ளது என தெரிவித்து உள்ளது. ஆண்டு தொடக்கத்தில் இருந்து, 782 பேருக்கு லாசா காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர, 4,939 … Read more

மூன்றே வார்த்தையில் ராஜினாமா கடிதம் எழுதிய ஊழியர் – வைரலாகும் புகைப்படம்

புதுடெல்லி, சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பல புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவை வைரலாவது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் தற்போது ஊழியர் ஒருவரின் ராஜினாமா கடிதம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. தான் வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்ய முடிவெடுத்த ஊழியர் ஒருவர் மூன்றே வார்த்தைகளில் ராஜினாமா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் “BYE BYE SIR ” என்ற வாசகம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. வழக்கமாக ஒரு நிறுவனத்தில் இருந்து வேலையை ராஜினாமா செய்பவர்கள் … Read more

இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான கடைசி டி20 போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு..!

பெங்களூரு, தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றது. இதில் முதல் இரு போட்டியினை தென் ஆப்பிரிக்க அணியும், 3 மற்றும் 4 ஆவது போட்டியினை இந்திய அணியும் வென்றுள்ளன. இதையடுத்து தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கு கடைசி போட்டியானது பெங்களூருவில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்றைய போட்டியானது … Read more

ஜப்பானின் மத்திய பகுதியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.2 ஆக பதிவு

டோக்கியோ, ஜப்பானின் மத்திய பகுதியில் இஷிகவா மாகாணத்தில் சுசு நகரில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 5.2 ஆக பதிவாகி உள்ளது. எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பொருளிழப்பு உள்ளிட்ட பாதிப்பு விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை. ஆனால், நில சரிவு அல்லது பொருட்கள் கீழே விழுவது போன்ற சம்பவங்கள் நடைபெறும் சாத்தியம் உள்ளது என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், பொதுமக்கள் கவனமுடன் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். … Read more

அக்னிபத் போராட்டம்; பின்னணியில் செயல்பட்ட முக்கிய புள்ளி கைது

செகந்திராபாத், ராணுவம் உள்ளிட்ட படைகளில் இந்திய இளைஞர்களை சேர்க்கும் அக்னிபத் என்ற புதிய திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அக்னி வீரர்கள் இத்திட்டத்தின் கீழ் தேர்வாகும் இளைஞர்கள் 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்படுவார்கள். அதன்பின் பணியில் இருந்து ஓய்வு பெறுவோருக்கு ஓய்வூதியம் எதுவும் வழங்கப்படாது. இதனால், இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் பலர் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தின்போது, பீகார், உத்தரபிரதேசம் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் வன்முறை வெடித்தது. … Read more

ஈட்டி எறிதலின் போது தவறி கீழே விழுந்த நீரஜ் சோப்ரா – பார்வையாளர்கள் அதிர்ச்சி – வைரல் வீடியோ

ஹெல்சின்கி, பின்லாந்தில் ஈட்டி எறிதல் போட்டி இன்று நடந்தது. இதில், ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். அவர் முதல் முயற்சியில் 86.69 மீட்டர் தூரம் ஈட்டி வீசினார். இந்த இலக்கை பின்னர் வந்த பிற போட்டியாளர்களால் முறியடிக்க முடியவில்லை. 2-வது முயற்சியில் சோப்ரா தவறு செய்த நிலையில், 3வது முயற்சியின்போது, அவர் தவறி கீழே விழுந்தது பார்வையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. After an intentional foul … Read more

டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் திட்டம் – எலான் மஸ்க் மீண்டும் எச்சரிக்கை..!!

வாஷிங்டன், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க். உலகின் மிகப்பெரிய பணக்காரரர்களுள் ஒருவராக இருப்பவர். இவர் சமூக வலைதள நிறுவனமான டுவிட்டரின் 9.2% பங்குகளை எலான் மஸ்க் ஏற்கெனவே வாங்கிவிட்டார். பின்னர் ஒட்டுமொத்த டுவிட்டர் நிறுவனத்தையும் 44 பில்லியன் டாலருக்கு வாங்க இருப்பதாக மஸ்க் தெரிவித்தார். பின்னர் பல காரணங்களால் அந்த ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. டுவிட்டரை வாங்கும் திட்டத்தில் இருந்து பின்வாங்கி விடுவேன் என ஏற்கனவே எலான் … Read more

சிறுவாணி அணை நீர் சேமிப்பு: பினராயி விஜயனுக்கு முதல் – அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- சிறுவாணி அணையின் நீர் சேமிப்பை அணையின் முழு கொள்ளவுக்கு உயர்த்தி பராமரித்த உடனடியாக நடவடிக்கை எடுக்கக் வேண்டும். கேரள முதல் மந்திரி இந்த விஷயத்தில் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது. சிறுவாணி குடிநீர்த் திட்டத்தின் மூலம் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் இத்திட்டப் பயனாளிகளுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்கிட சிறுவாணி … Read more

ஆப்ரோ-ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்த திட்டம்; ஒரே அணியில் விராட் கோலி – பாபர் அசாம் களம் காண வாய்ப்பு

புதுடெல்லி, ஆசியா ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் அணிகள் எதிரெதிர் அணியாக களம் காணும் ஆப்ரோ-ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை மீண்டும் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) திட்டமிட்டு வருகிறது. அதன்படி, 2023ம் ஆண்டு அட்டவணையில் ஆப்ரோ-ஆசிய கோப்பையை மீண்டும் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து எங்களுக்கு இன்னும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைக்கவில்லை. … Read more