காபூலில் குருத்வாரா மீது 2 வெடிகுண்டு தாக்குதல்கள்: 2 பேர் பலி; பலரின் கதி என்ன?

காபூல், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், கர்தே பர்வான் என்ற பகுதியில் சீக்கியர்களின் வழிபாட்டு தலம் என அறியப்படும் குருத்வாரா அமைந்துள்ளது. இதில் இன்று காலை திடீரென பயங்கர வெடிகுண்டு சத்தம் கேட்டது. அங்கு பயங்கரவாதிகளால் இந்திய நேரப்படி, இன்று காலை 8.30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆப்கானிஸ்தான் செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன. குருத்வாராவில், சீக்கிய பக்தர்கள் பலர் சிக்கி கொண்டு உள்ளனர். இதனை தொடர்ந்து, பயங்கரவாதிகளுக்கும், தலீபான் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்தது. இந்த … Read more

உத்தரப்பிரதேசம்: டிரெய்லர் மீது டெம்போ மோதி விபத்து – 6 பேர் பலி

லக்னோ, உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோ-கான்பூர் நெடுஞ்சாலையில் டிரெய்லர் மீது டெம்போ மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். நேற்று இரவு பாந்த்ரா காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட கான்பூர் நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டது. டெம்போ பின்னோக்கி சென்ற போது டிரெய்லரில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தைத் தொடர்ந்து அந்த பகுதியில் … Read more

தினேஷ் கார்த்திக் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது: ரிஷப்பண்ட்

ராஜ்கோட், ராஜ்கோட்டில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்தியா 82 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. முதல் இரண்டு ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும் , 3-வது -வத் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்று இருந்தன. இந்த வெற்றி குறித்து கேப்டன் ரிஷப் பண்ட் கூறியதாவது:- திட்டத்தை செயல்படுத்துவது குறித்து நாங்கள் பேசினோம்.அதற்கு ஏற்ற … Read more

ஐரோப்பிய நாடுகளை வாட்டி வதைக்கும் வெப்ப அலை – பிரான்ஸ், ஸ்பெயினில் கடும் வெப்பம்!

பாரிஸ், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் பிற மேற்கு ஐரோப்பிய நாடுகள் வெப்ப அலையை எதிர்கொள்கின்றன. இதன் காரணமாக, காட்டுத் தீ மற்றும் காலநிலை மாற்றத்தின் விளைவுகள் பற்றிய கவலை அதிகரித்துள்ளது. நேற்று பிரான்சின் சில பகுதிகளில் வெப்பநிலை ஏற்கனவே 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருந்தது. இன்று பதிவாகும் வெப்பம், உச்சபட்சமாக இருக்கும் என்றும் பருவநிலை மாற்றத்தால் இத்தகைய நிகழ்வுகள் வழக்கத்தை விட முன்னதாகவே தாக்கும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. இன்று 42 டிகிரிக்கு மேல் … Read more

அக்னிவீரர்களுக்கு 10% இடஒதுக்கீட்டு நடைமுறைக்கு ராஜ்நாத் சிங் ஒப்புதல்

புதுடெல்லி, முப்படைகளில் இந்திய இளைஞர்களை சேர்க்கும் அக்னிபத் என்ற புதிய திட்டம் ஒன்றுக்கு மத்திய அமைச்சரவை கடந்த 14ந்தேதி ஒப்புதல் வழங்கியது. இந்த திட்டத்தின்படி தேர்வாகும் இளைஞர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவார்கள். இத்திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்படுவார்கள். இதனால், வடமாநிலங்களில் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் பலர் போராட்டத்தில் குதித்தனர். உத்தர பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக நடந்து வந்த போராட்டம், வன்முறையாக … Read more

யூனிபர் யு-23 பெண்கள் ஆக்கி போட்டி: தொடக்க ஆட்டத்தில் இந்தியா-அயர்லாந்து பலப்பரிட்சை!

டப்ளின், 5 நாடுகள் பங்கேற்கும் யூனிபர் யு-23 ஆக்கி போட்டிகள் அயர்லாந்தில் நாளை தொடங்கி நடைபெறுகிறது. இந்த ஆக்கி தொடரில் பங்கேற்க, இந்திய ஜூனியர் பெண்கள் ஆக்கி அணி அயர்லாந்து சென்றுள்ளது. யூனிபர் யு-23 ஆக்கி போட்டி தொடரில், நாளை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது. இப்போட்டியின் லீக் சுற்றில் இந்திய அணி அயர்லாந்து, நெதர்லாந்து, அமெரிக்கா மற்றும் உக்ரைன் அணிகளுடன் விளையாடுகிறது.மேலும், மகளிர் ஜூனியர் உலகக் கோப்பை 2021க்குப் பிறகு, அயர்லாந்து … Read more

காசா பகுதி ஹமாஸ் ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; ஹமாஸ் தளபதி பலி!

ஜெருசலேம், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து, இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. 1990-களில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்துக்கும் கையெழுத்தான, ஆஸ்லோ ஒப்பந்தப்படி காசா முனை சுயாட்சிப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. இருந்தபோதிலும், உண்மையில் காசா முனை இன்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முற்றுகையின் கீழ்தான் இருந்து வருகிறது. … Read more

தீவிர காற்றுமாசு வட இந்தியர்களின் ஆயுட்காலம் 8 ஆண்டுகள் குறையும் அபாயம்…! ஆய்வு எச்சரிக்கை

புதுடெல்லி: வங்காளதேசத்திற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மாசுபட்ட நாடாக இந்தியா உள்ளது. காற்று மாசால் இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் ஐந்தாண்டுகளால் குறைக்கிறது என ஆய்வு ஒன்று கூறுகிறது. சிகாகோ பல்கலைக்கழகத்தின் எரிசக்தி கொள்கை அமைப்பௌ வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் உண்மையில் காற்று மாசுபாடு காரணமாக இந்தியாவில் இந்தோ கங்கை சமவெளிகளில் வாழும் 40 சதவீத இந்தியர்களின் ஆயுட்காலத்தை 7. 6 வருடங்களைக் குறைக்கும் என்று கூறுகிறது. இந்தியாவில் காற்று மாசுபாடு மனித ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. … Read more

அதிக ரன்கள், பவுண்டரிகள்…. பல சாதனைகளை ஒரே போட்டியில் படைத்த இங்கிலாந்து அணி

அம்ஸ்டல்வீன், இங்கிலாந்து அணி நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்து வீசியது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 498 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 499 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்கள் எடுத்தது. இதனால் இங்கிலாந்து … Read more

எலான் மஸ்க்கை விமர்சித்து அதிருப்தி கடிதம் வெளியிட்ட ஸ்பேஸ்-எக்ஸ் ஊழியர்கள் அதிரடியாக நீக்கம்!

வாஷிங்டன், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க். உலகின் மிகப்பெரிய பணக்காரரர்களுள் ஒருவராக இருப்பவர். இவர் சமூக வலைதள நிறுவனமான டுவிட்டரின் 9.2% பங்குகளை எலான் மஸ்க் ஏற்கெனவே வாங்கிவிட்டார். பின்னர் ஒட்டுமொத்த டுவிட்டர் நிறுவனத்தையும் 44 பில்லியன் டாலருக்கு வாங்க இருப்பதாக மஸ்க் தெரிவித்தார். பின்னர் அந்த ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் கூட்டாக , தலைமை நிர்வாக அதிகாரி எலோன் … Read more