'அக்னிபத்' தொடரும் போராட்டம்; பீகாரில் ரெயில்கள் நிறுத்தம்

பாட்னா, ராணுவத்துக்கு ஆள் சேர்க்க ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டத்தை கடந்த 14-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது.4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பீகார் மாநிலத்தில் நேற்று முன்தினம் 2 ரெயில்களை தீயிட்டு கொளுத்தினர். பீகாரில் தொடர்ந்து போராட்டம் நீடிக்கிறது. பீகாரில் ரெயில்வே சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதால் ரூ.200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரெயில்வே தெரிவித்துள்ளது. பீகாரில் பதற்றம் நீடிக்கும் நிலையில், … Read more

இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க லண்டன் சென்றடைந்தது இந்திய கிரிக்கெட் அணி

லண்டன், இந்திய அணி கடந்த வருடம் (2021) ஆகஸ்டு மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வெற்றி பெற்றது. 3-வது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் செப்டம்பர் 10-ந் தேதி 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி … Read more

10,000 உக்ரேனிய வீரர்களுக்கு 120 நாட்களுக்கு பயிற்சி அளிக்க திட்டம் – பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

கீவ், உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 115-வது நாளாக தீவிரமடைந்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், 10,000 உக்ரேனிய வீரர்களுக்கு 120 நாட்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் முன்மொழிந்துள்ளார். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருவதால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. நேற்று, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன் … Read more

பீகார், உத்தர பிரதேச மாநிலங்களுக்கு இயக்கப்படும் ரெயில்கள் தற்காலிகமாக ரத்து – தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை, ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கும் பீகாரில் ராணுவ வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள இளைஞர்கள் 3-வது நாளாக தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.உத்தரபிரதேசத்திலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், போராட்டம் காரணமாக பீகார், உத்தர பிரதேசம் மாநிலங்களுக்கு இயக்கப்படும் அனைத்து ரெயில்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு … Read more

விளையாட்டில் திறமையை வளர்த்தால் பெரிய இடத்தை அடையலாம் – முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப்பதான்

சேலம், சேலம் பழைய சூரமங்கலம் ராமலிங்க வள்ளலார் பள்ளி வளாகத்தில் பதான்ஸ் கிரிக்கெட் அகாடமியின் (CAP) 31-வது பயிற்சி மையம் தொடக்க விழா இன்று நடந்தது. இதில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பதான்ஸ் கிரிக்கெட் அகாடமியின் இயக்குனருமான யூசுப் பதான் கலந்து கொண்டு கிரிக்கெட் அகாடமி மையத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கிரிக்கெட் பயிற்சி பெறும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். இது குறித்து கிரிக்கெட் வீரர் யூசுப்பதான் நிருபர்களிடம் கூறியதாவது:- சேலத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள … Read more

ரஷியாவில் இருந்து வெளியேற 15 ஆயிரம் கோடீஸ்வரர்கள் முயற்சி; இங்கிலாந்து அமைச்சகம்

லண்டன், உக்ரைனுக்கு எதிரான ரஷிய படைகளின் தீவிர போரானது 100 நாட்களை கடந்தும் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது. ரஷிய படை வீரர்கள் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். இரு நாட்டின் வீரர்களும், பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் உயிரிழந்து உள்ளனர். இந்த போரில் ரஷியாவை கட்டுப்படுத்தும் நோக்கில், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்பட சில நாடுகள் ஆயுத உதவிகளையும், நிதி உதவியையும் வழங்கி வருகின்றன. போரை நிறுத்தும் முயற்சியின் … Read more

பிரதமர் மோடி இளைஞர்கள் மீது அக்கறை கொண்டவர்; உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம்

புதுடெல்லி, ‘அக்னி பாதை’ என்ற புதிய திட்டத்தில் வேலைக்குச் சேரும் இளைஞர்களின் வயது வரம்பு 21-ல் இருந்து 23 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை பாராட்டியுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:- “கொரோனா பெருந்தொற்று காரணமாக ராணுவத்தில் ஆள்சேர்ப்பு நடைமுறை 2 ஆண்டுகளாக பாதித்தது. அக்னிபாத் திட்டம் பிரதமர் மோடி இளைஞர்கள் மீது கொண்டுள்ள அக்கறையை காட்டுகிறது.அக்னிவீரர்களுக்கான வயது வரம்பை 23 வயதாக உயர்த்தியது அரசின் அறிவுத்திறனை காட்டுவதாக அமைந்துள்ளது. அக்னிபாத் … Read more

காமன்வெல்த் போட்டியில் இருந்து நீக்கம் : மத்திய அரசு மீது வழக்கு தொடர்ந்த அர்ச்சனா காமத்

பெங்களூரு, உலக டேபிள் டென்னிஸ் தரவரிசையில் பெண்கள் இரட்டையர் பிரிவில் 4ம் இடத்தில் இருக்கும் வீராங்கனை இந்தியாவின் அர்ச்சனா காமத். இவர் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறுவதில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அர்ச்சனா முதலில் டேபிள் டென்னிஸ் அணியில் சேர்க்கப்பட்டார், ஆனால் பிறகு இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு வகுத்துள்ள தேர்வு அளவுகோல்களை பூர்த்தி செய்யாததால் நிர்வாகிகள் குழுவால் அவர் கைவிடப்பட்டார். இந்த நிலையில் அர்ச்சனா … Read more

எலான் மஸ்கின் டுவிட்டர் நடவடிக்கையை கண்டிக்கும் ஸ்பேஸ் எக்ஸ் ஊழியர்கள் – வெளியான அதிருப்தி கடிதம்..!!

வாஷிங்டன், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க். உலகின் மிகப்பெரிய பணக்காரரர்களுள் ஒருவராக இருப்பவர். இவர் சமூக வலைதள நிறுவனமான டுவிட்டரின் 9.2% பங்குகளை எலான் மஸ்க் ஏற்கெனவே வாங்கிவிட்டார். பின்னர் ஒட்டுமொத்த டுவிட்டர் நிறுவனத்தையும் 44 பில்லியன் டாலருக்கு வாங்க இருப்பதாக மஸ்க் தெரிவித்தார். பின்னர் அந்த ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் முதல்முறையாக டுவிட்டர் நிறுவன ஊழியர்களிடம் எலான் மஸ்க் வீடியோ கால் வாயிலாக … Read more

போராட்டக்காரர்கள் கல் வீச்சு; தோளில் குழந்தையை சுமந்து கொண்டு தப்பி ஓடும் நபர்

மதுரா, நாடு முழுவதும் ‘அக்னிபத் ஆள்சேர்ப்பு திட்டத்திற்கு’ எதிராக இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உத்தர பிரதேசத்தில் இருந்து டெல்லி, அரியானா, ராஜஸ்தான், பீகார், வங்காளம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. ரெயில் பெட்டிகள் எரிப்பு சம்பவங்களால் நாடு முழுவதும் 200 ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் மதுரா நகரில் தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வரும்போது, அவர்களுக்கு அருகே பணியில் … Read more