அக்னிபத் திட்டத்தில் இளைஞர்களுக்கு உறுதியான எதிர்காலம் இல்லை – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சென்னை, மத்திய அரசு புதிய அக்னிபத் என்ற திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இந்த திட்டத்தின்படி ராணுவத்தில் சேரும் வீரர்களுக்கு 4 ஆண்டு காலத்திற்கு மட்டுமே பணியாற்ற அனுமதிக்கப்படுவர். இதில் வீரர்களுக்கு மாதாந்திர ஊதியம் வழங்கப்படும். 4 ஆண்டுகால பணிக்காலம் முடிவடைந்ததும் சேவா நிதி என்ற ஒரே தடவையிலான தொகுப்பு வழங்கப்படும். ஆனால் இவர்களுக்கு பணிக்கொடை மற்றும் ஓய்வூதிய பயன்கள் அளிக்கபட மாட்டாது என தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் இளைஞர்கள் நேற்றுமுதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். … Read more

நீலகிரி வீராங்கனை தேர்வு

நீலகிரி ஊட்டி மஞ்சூர் அருகே உள்ள தங்காடு கிராமத்தை சேர்ந்தவர் மதுமிதா. கால்பந்து வீராங்கனை. தமிழ்நாடு கால்பந்து சங்கம் சார்பில் கால்பந்து வீரர், வீராங்கனைகள் தேர்வு தொடர்பான போட்டி, சென்னையில் நடைபெற்றது. இதில் 17 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் மதுமிதா கலந்துகொண்டார். அதில் சிறப்பாக செயல்பட்ட அவர், தமிழ்நாடு அணிக்கான போட்டியில் விளையாட தேர்வு செய்யப்பட்டார். வருகிற 19-ந் தேதி முதல் அடுத்த மாதம்(ஜூலை) 4-ந் தேதி வரை அசாமில் 17 வயதுக்கு உட்பட்ட பெண்கள் … Read more

அமெரிக்க ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் உயர்வு… இந்திய ரூபாயின் மதிப்பில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு

வாஷிங்டன், ரஷியா-உக்ரைன் போர் மற்றும் அதீத பட்ஜெட் பற்றாக்குறை ஆகியவற்றின் விளைவாக அமெரிக்காவில் விலைவாசி உயர்வு கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 8.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அமெரிக்க ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை பூஜ்யத்தில் இருந்து ஒரு சதவீதமாக கடந்த 2 மாதங்களில் உயர்த்தியது. இந்த நிலையில் அமெரிக்க ரிசர்வ் வங்கி நேற்று வட்டி விகிதத்தை மீண்டும் 0.75 சதவீதத்திற்கு அதிரடியாக உயர்த்தியுள்ளது. இதை தொடர்ந்து அடுத்த மாதம் மேலும் 0.75 … Read more

இமாச்சல பிரதேசத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

சிம்லா, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்கள் பங்கேற்கும் 3 நாள் மாநாடு, இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் உள்ள கிரிக்கெட் சங்க அரங்கத்தில் நேற்று தொடங்கியது. இதன் 2-ம் நாள் மற்றும் 3-ம் நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இமாச்சல பிரதேசத்திற்கு சென்றுள்ளார். மத்திய, மாநில அரசுகள் இடையேயான உறவை வலுப்படுத்துவதில் இந்த மாநாடு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக இருக்கும் என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக தேசிய … Read more

பாரா பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் : முதல் நாளில் இந்தியாவுக்கு 2 வெண்கலம்

பியோங்டேக், 2022 ஆம் ஆண்டிற்கான ஆசியா ஓசியானியா பாரா பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் தென் கொரியாவின் பியோங்டேக் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற முதல் நாள் போட்டியில் பெண்களுக்கான 41 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் மன்பிரீத் கவுர் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 2 சுற்றுகளின் முடிவில் மொத்தம் 173 கிலோ எடையை தூக்கி அவர் சாதனை படைத்துள்ளார். Glimpses of India’s Manpreet Kaur winning bronze medal at … Read more

போதைப்பொருள் கடத்தல் பிரபல மாடல் அழகிக்கு 20 ஆண்டுகள் சிறை …!

மாஸ்கோ ரஷியா அழகி ஒருவர் போதைப்பொருள் வந்த்திருந்ததாக கைது செய்யப்பட்டு வழக்கு நடந்து வருகிறது அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று சட்ட அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. மாடல் ஏஜென்சி உரிமையாளரான 34 வயதான கிறிஸ்டினா துகினா.இவர் 2019 இல் நடைபெற்ற மிஸ் துபாய் அழகி போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.மேலும் கிராண்ட் பிரிக்ஸ் மிஸ் பெடரேஷன் அழகி பட்டத்தை வென்று உள்ளார். 2020 இல் ரஷியா அழகுப் போட்டியில் முதல் பரிசைப் பெற்றார். … Read more

ராணுவ வாகனம் ஓட்டி, வீரர்களுடன் மதிய உணவு சாப்பிட்ட மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்

ஜம்மு, நாட்டின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றான ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் இன்று 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர், ராணுவ வீரர்களின் முகாம்களுக்கு சென்று அவர்களுடன் உரையாடுவார். நாளை நடைபெற உள்ள மகாராஜா குலாப் சிங்கின் 200வது ஆண்டு முடிசூட்டு விழாவில் கலந்து கொள்கிறார். இதற்காக காஷ்மீர் சென்ற அவர் பாராமுல்லா பகுதியில் உள்ள வீரர்களுக்கான நினைவகத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ராணுவ வீரர்களுடன் ஒன்றாக … Read more

இலங்கைக்கு எதிரான 2 ஆவது ஒருநாள்: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு

பல்லேகல்லே, ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் போட்டியில் வெற்றிபெற்று 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் இன்று நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. தினத்தந்தி Related Tags : இலங்கை ஆஸ்திரேலியா … Read more

அமேசான் காட்டில் மாயமான பழங்குடியின நிபுணர், பத்திரிக்கையாளர் கொன்று புதைப்பு – அதிர்ச்சி சம்பவம்

ரியோ டி ஜெனிரோ, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் டான் பிலிப். இவர் பிரேசிலில் தங்கி அமேசான் காடுகளில் வசித்துவரும் பழங்குடியின மக்கள், வாழ்வியல் முறைகள், உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து செய்தி வெளியிட்டும், அமேசான் பாதுகாப்பு தொடர்பான புத்தகங்களை எழுதியும் வருகிறார். அமேசான் காடுகளில் பழங்குடியின மக்களை சந்திப்பதற்காக டான் பிலிப்பின் வழிகாட்டியாக பிரேசிலை சேர்ந்த பழங்குடியின நிபுணர் ப்ரூனோ ஃபிரிரா பணியாற்றி வந்தார். இவர்கள் இருவரும் அமேசான் காடுகளில் பல்வேறு பகுதிகளில் வசித்துவரும் … Read more

ஜனாதிபதி தேர்தல்: மம்தா பானர்ஜி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை

புதுடெல்லி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ந் தேதி முடிகிறது. புதிய ஜனாதிபதி ஜூலை 25-ந் தேதி பதவி ஏற்க வேண்டும். அதற்குள் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய வேண்டும். இதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ந் தேதி நடக்கிறது. இதற்கிடையில், இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணியோ, எதிர்க்கட்சிகளோ தங்களது வேட்பாளரை இன்னும் முடிவு செய்யவில்லை. இது தொடர்பான ஆலோசனைகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்நிலையில், … Read more