ஆசிய கோப்பை கால்பந்து போட்டி: இந்திய வீரர்களை தாக்கிய ஆப்கானிஸ்தான் வீரர்கள்

ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்ற இந்திய வீரர்களை திடீரென ஆப்கானிஸ்தான் வீரர்கள் தாக்கியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் ஸ்டேடியத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற ஆசிய கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில் இந்தியா ஆப்கானிஸ்தானை 2- 1 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றிப்பெற்றது. இந்தநிலையில், இந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு நடுவே முதலில் வாக்குவாதமாக நடைபெற்ற சண்டை பின்னர் கைகலப்பாக மாறியது. ஒரு ஆப்கானிஸ்தான் ரிசர்வ் வீரர் இந்திய … Read more

நுபுர் சர்மாவின் கருத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற குவைத் முடிவு ?

குவைத்சிட்டி, இஸ்லாமியர்களின் இறைதூதரான நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு எதிராக இந்தியாவில் மட்டும் இன்றி வெளிநாடுகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன. அந்த வகையில், அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரிலும் போராட்டம் நடைபெற்றது. குறிப்பாக கத்தாரில் பணிபுரிந்துவரும் வெளிநாட்டவர்களும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த நிலையில், நாட்டின் சட்ட திட்டங்களை மீறும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்ட வெளிநாட்டவர்களை நாடு கடத்த குவைத் அரசு முடிவு செய்துள்ளதாக அராப் டைம்ஸ் நாளிதழ் … Read more

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நுபுர் சர்மாவுக்கு கவுதம் கம்பீர் ஆதரவு

புதுடெல்லி, இஸ்லாமியர்களின் இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து பா.ஜ.க. செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மாவும், நவீன் ஜிண்டாலும் ஆட்சேபகரமான கருத்துகளை வெளியிட்டு, அது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அவர்களை கைது செய்ய வலியுறுத்தி கடந்த வெள்ளிக்கிழமை நாட்டின் பல இடங்களில் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர். நுபுர் சர்மாவுக்கு எதிராக பல்வேறு இடங்களில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நுபுர்சர்மாவுக்கு ஆதரவாக பாஜக எம்.பியும் பிரபல கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீர் கருத்து … Read more

தேசிய சீனியர் தடகளம்: 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை கனிமொழி முதலிடம்..!

சென்னை, மாநிலங்களுக்கு இடையிலான 61-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. உலக தடகளம் மற்றும் காமன்வெல்த் போட்டிக்கு தகுதி சுற்றாக அமைந்துள்ள இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து 700-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் 3-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை சி.கனிமொழி 13.62 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். மேற்கு வங்காள … Read more

நீண்ட நெடுங்காலம் ராணியாக இருந்து உலக வரலாற்றில் 2-வது இடம் பிடித்து ராணி இரண்டாம் எலிசபெத் சாதனை!

லண்டன், இரண்டாம் எலிசபெத் ஆட்சி பொறுப்பேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. இதையொட்டி, 2022-ம் ஆண்டை பிளாட்டினம் ஜூபிலியாக, ராயல் அரண்மனை கொண்டாடி வருகிறது. பிரிட்டனின் ராணியாக உள்ள இரண்டாம் எலிசபெத், அரச பணியை ஏற்று, 70 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதன்மூலம் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை 70 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரே மகாராணி என்ற பெருமையை இரண்டாம் எலிசபெத் பெற்றுள்ளார். தாய்லாந்து அரசர் பூமிபோல் அதுல்யதேஜ், 1927-2016 வரை, 70 ஆண்டுகள், 126 நாட்கள் அரசராக … Read more

ஆந்திர பிரதேசம்: குடிபோதை ஆசாமியை காலால் எட்டி உதைத்த போக்குவரத்து காவலர் சஸ்பெண்டு

திருப்பதி, ஆந்திர பிரதேசத்தில் குடிபோதையில் இருந்த ஆசாமியை போக்குவரத்து காவலர் ஒருவர் காலால் எட்டி உதைக்கும் வீடியோ வைரலானது. இந்நிலையில், நடந்த சம்பவம் பற்றி திருப்பதி போக்குவரத்து டி.எஸ்.பி. கடம் ராஜூ கூறும்போது, ஆந்திர பிரதேச அரசு போக்குவரத்து கழக பேருந்து ஒன்று ஆர்.சி. புரம் சாலை வழியே சென்று கொண்டிருந்தது. அதில் குடிபோதை ஆசாமி ஒருவர் பேருந்து ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்துள்ளார். தன்னை பேருந்துக்குள் ஏற ஓட்டுனர் விடவில்லை என அந்த ஆசாமி … Read more

உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெறுவது யார்? ஆஸ்திரேலியா-பெரு அணிகள் இன்று மோதல்..!

தோகா, 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நவம்பர் 21-ந் தேதி முதல் டிசம்பர் 18-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 32 அணிகள் கலந்து கொள்கின்றன. போட்டியை நடத்தும் நாடு என்ற வகையில் கத்தார் மட்டும் நேரடியாக தகுதி பெற்றது. மற்ற அணிகள் அனைத்தும் தகுதி சுற்று மூலமே தகுதி பெறும். இதுவரை பிரேசில், பெல்ஜியம், ஜெர்மனி, இங்கிலாந்து, போர்ச்சுகல், ஜப்பான், ஈரான் உள்பட 30 அணிகள் தகுதி பெற்று இருக்கின்றன. … Read more

இலங்கை மின்சாரசபை தலைவர் பெர்டினாண்டோ திடீர் ராஜினாமா

கொழும்பு, இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி.பெர்டினாண்டோ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த தகவலை மின்சக்தி மற்றும் எரிசக்தி மந்திரி கஞ்சன விஜேசேகர டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் எம்.எம்.சி.பெர்டினாண்டோவின் பதவி விலகல் கடிதத்தை தான் ஏற்றுக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதன்படி இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக முன்னாள் உப தலைவர் நளிந்த இளங்ககோன் நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில் நாடாளுமன்ற கோப் குழுவின் விசாரணை ஒன்றின் போது பெர்டினாண்டோ கூறிய கருத்துக்கள் உள்ளூர் அரசியலிலும், இந்தியாவிலும் அதிர்வலைகளையும், சர்ச்சையையும் … Read more

உ.பி. முதல்-மந்திரி தலைமை நீதிபதியாகிவிட்டாரா? – ஓவைசி கேள்வி

புதுடெல்லி, உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி போல் செயல்பட்டது கண்டனத்துக்குரியது என்று அகில இந்திய மஜ்லிஸ்(ஏ ஐ எம் ஐ எம்) கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி குற்றம்சாட்டினார். நுபுர் சர்மாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. அப்போது திடீரென வன்முறை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, போலீஸாருக்கும், வன்முறையாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. வன்முறை தொடர்பாக … Read more

புரோ ஆக்கி லீக்: பெல்ஜியம் அணியிடம் இந்தியா தோல்வி

ஆன்ட்வெர்ப், 9 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி, ஒலிம்பிக் சாம்பியன் பெல்ஜியத்துடன் மீண்டும் மோதியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. பெல்ஜியம் அணிக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் வென்று இருந்தது நினைவுகூரத்தக்கது. தினத்தந்தி Related Tags : FIH Hockey Pro League … Read more